78 ஆண்டுகளுக்கு பிறகு அவுஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள கடுமையான சூழல்

Report Print Kabilan in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில், 78 ஆண்டுகளுக்கு பிறகு கடுமையான வெயில் நிலவி வருகிறது.

இதனால், பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வரும் சூழலில், அவுஸ்திரேலியாவில் கடுமையான வெப்பம் நிலவுகிறது.

பெருவாரியான நகரங்களில் 40 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவாகியுள்ளது. நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் உள்ள பென்ரித் நகரில், 47.3 டிகிரி செல்சியஸ் என்னும் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இந்த கடுமையான வெப்பத்தை தணிக்க, மக்கள் நீச்சல் குளங்களில் முகாமிட்டுள்ளனர். மேலும், அதிகப்படியான வெப்பநிலையால் தானியங்கி இயந்திரங்கள், போக்குவரத்து விளக்குகள் ஆகியவை இயங்கவில்லை.

சில இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டதால் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 1939ஆம் ஆண்டிற்குப் பிறகு, அவுஸ்திரேலியாவில் நிலவும் கடுமையான வெப்பம் இது என வானிலை ஆய்வகத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்