இரண்டு பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்த அகதிக்கு நீதிமன்றம் அளித்த தண்டனை

Report Print Raju Raju in அவுஸ்திரேலியா

இரண்டு விபச்சார பெண்களை நண்பர்கள் உதவியுடன் கத்தி முனையில் பலாத்காரம் செய்த அகதிக்கு மூன்று ஆண்டுகள், எட்டு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சோமாலியாவை சேர்ந்த ரசித் முகமது அபு (24) என்ற அகதி அவுஸ்திரேலியாவின் கேன்பெரா நகரில் வசித்து வந்தார்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் இணையம் மூலம் இரண்டு விபச்சார பெண்களை தொடர்பு கொண்ட ரசித் தனது அடுக்குமாடி குடியிருப்புக்கு வரவழைத்துள்ளார்.

அப்போது ரசித் வீட்டில் அவர் நண்பர் சித் காலித் (31) மற்றும் அவரின் சகோதரர் முகமது அலாபாசி (22) உடனிருந்துள்ளனர்.

வீட்டுக்கு வந்த இரண்டு பெண்களையும் ரசித் வலுக்கட்டாயமாக கத்தி முனையில் மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார்.

அப்போது உடனிருந்த சித் மற்றும் முகமது இருவரையும் அடித்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.

சம்பவத்துக்கு பின்னர் பெண்களின் செல்போனையும் திருடி கொண்டு மூவரும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

தனது சொந்த நாட்டுக்கே சென்றுவிடலாம் என ரசித் நினைத்திருந்த நிலையில் பொலிசார் அவரை கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் காலித் மற்றும் அலாபாசிக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.

தற்போது ரசித்துக்கு மூன்று ஆண்டுகள், எட்டு மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்