மனைவியை நாடு கடத்தி விசாவை ரத்து செய்ய முயற்சித்த கணவர்: 12 ஆண்டுகள் சிறை?

Report Print Deepthi Deepthi in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவி மற்றும் 2 மாத குழந்தையை நாட கடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக இந்நபரின் பெயர் தெரிவிக்கப்படவில்லை. 27 வயதான இந்நபர் இந்தியாவை சேர்ந்த பெண்மணியை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பின்னர், மனைவியுடன் அவுஸ்திரேலியாவில் வசித்து வந்த இவருக்கு அங்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

அக்குழந்தைக்கு 2 மாதமே ஆகியுள்ளது, இந்நிலையில் தனது மனைவி மற்றும் மகளை சிட்னியில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்த திட்டமிட்டுள்ளார்.

அதன்பொருட்டு கடந்த மார்ச் மாதம், அவர்களை நாடு கடத்தியுள்ளார். கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு Sydney’s Downing Centre Local நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது.

டிசம்பர் 5 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகி இவர் கூறியதாவது, எனது மனைவி இந்தியாவுக்கு செல்ல வேண்டும் என நான் அவரை கட்டாயப்படுத்தவில்லை என்றும் அவரின் சம்மதத்தின் பேரிலேயே விமான டிக்கெட்டினை உறுதிசெய்தேன் என கூறியுள்ளார்.

தற்போது இந்த வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், இவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் இவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், அதிகாரிகள் நடத்திய விசாரணையில், நீ உனது குழந்தையுடன் நாட்டிற்கு செல்லவில்லையென்றால், உன்னை உடல் ரீதியாக துன்புறுத்துவேன் என்று எச்சரித்ததோடு மட்டுமல்லாமல், குடிவரவு துறையை தொடர்பு கொண்டு எனது மனைவியின் விசாவினை ரத்து செய்யவேண்டும் என கூறியுள்ளார்.

இருப்பினும், இந்த முயற்சி தோல்வியில் முடிந்ததால், இந்தியாவில் இருக்கும் தாயும் மகளும் அவுஸ்திரேலியாவுக்கு திருப்பி வரலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவுஸ்திரேலிய அரசாங்கம், இந்தியாவிலுள்ள, அரசு சாரா அமைப்புகள் மற்றும் ஏனைய சட்ட அமலாக்க அமைப்புகள் இந்த வழக்கு விசாரணைக்கு தீவிரம் காட்டியுள்ளன என்று அவுஸ்திரேலிய துப்பறியும் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேறுவதற்கு அழுத்தம், அச்சுறுத்தல் அல்லது ஏமாற்றுதல் போன்றவற்றை பயன்படுத்துவது சட்டத்தின் கீழ் ஒரு குற்றமாகக் கருதப்படுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers