கொளுந்து விட்டு எரிந்த தீ... சிக்கிய 5 குழந்தைகள்: ஹீரோவான தாயின் திக் திக் நிமிடங்கள்

Report Print Santhan in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் பற்றி எரிந்த வீட்டினும் சிக்கிய 5 குழந்தைகளை, அவரது தாய் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள வீடு ஒன்றின் தீடீரென தீவிபத்து ஏற்பட்டதால், வீட்டினுள் இருந்த ஐந்து குழந்தைகளை தாயாரான Sharon McKeown காப்பாற்றியுள்ளார்.

இது குறித்து Sharon McKeown கூறுகையில், வீடு திடீரென்று தீப்பற்றி எரிந்தது. இதனால் வீட்டினுள் உள்ளே சென்ற போது இரண்டு குழந்தைகள் தூங்கிக்கொண்டிருந்தனர்.

முதலில் அவர்களை அழைத்துவந்து வீட்டிற்கு வெளியில் அனுப்பினேன். அதன் பின் வீட்டின் இருந்த மீதம் மூன்று குழந்தைகளையும் உடனடியாக தீ விபத்தில் இருந்து மீட்டேன்.

இதில் என்னுடைய வீடு முற்றிலும் நாசமானது, இருப்பினும் எனது 5 குழந்தைகளை காப்பாற்றிவிட்டேன் என்று கூறியுள்ளார்.

காப்பாற்றப்பட்ட குழந்தைகளில் சிலருக்கு 5 வயது இருக்கும் என்றும் ஒரு குழந்தை 5 மாத குழந்தை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வீட்டில் இருந்த 5-வயது குழந்தை ஒன்று படுக்கை அறையில் இருந்த போது, எதிர்பாரதவிதமாக தீ விபத்தை ஏற்படுத்திவிட்டதாக, தீயணைக்கும் படையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...