பாரிய நிலநடுக்கத்திற்கு வாய்ப்பு: வெளியான அதிர்ச்சி தகவல்

Report Print Arbin Arbin in அவுஸ்திரேலியா

கடந்த 24 மணி நேரத்தில் அவுஸ்திரேலியா கடற்பகுதியை ஒட்டிய பிரதேசங்களில் 11 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ள நிலையில் மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று தாக்கக் கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் அவுஸ்திரேலியா சுற்றுவட்டார பிரதேசங்களில் 11 முறை நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இதில் 4.5 ல் இருந்து 5.1 ரிக்டர் அளவில் நியூ கலிடோனியா பகுதியில் 7 முறை நிலநடுக்கம் தாக்கியுள்ளது.

இந்தோனேசியாவில் 4.7 மற்றும் 4.9 என ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் தாக்கியுள்ளது. ஃபிஜி தீவில் 4.4 என்ற அள்வில் நிலநடுக்கம் தாக்கியுள்ளது.

குவாம் தீவின் அருகாமையில் 3 முறை கடந்த 24 மணி நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் ஜப்பானில் ஒரு முறையும், அலாஸ்கா பகுதியில் 2 முறையும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

அமெரிக்காவின் மேற்கு கடற்கரை பகுதியில் ஒரு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. மெக்சிகோவில் ஒரு முறையும், இறுதியாக அர்ஜென்டீனாவிலும் நிலநடுக்க பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பசுபிக் ரிம் பகுதியில் 11 முறை நிலநடுக்கம் தொடர்ந்து பதிவாகியுள்ளதால், மிக விரைவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று தாக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆனால் எந்த பகுதி, அல்லது எப்போது என குறிப்பிட்டு சொல்ல முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...