உடலில் தீயை மூட்டி காதலை தெரியப்படுத்திய காதல் பித்தன்: ருசிகர சம்பவம்

Report Print Deepthi Deepthi in அவுஸ்திரேலியா

தனது மனதில் உள்ள காதலை வெளிப்படுத்த புதுவிதமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என காதலர்கள் ஆசைப்படுவார்கள்.

தனது காதலி ரசிக்கும்படி, அவளது நினைவில் இருந்து என்றும் நீங்காத அழகிய தருணமாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

ஒரு சிலர், சற்று த்ரில்லிங்காக இருக்க வேண்டும் என்பதற்காக அதிரடி முயற்சிகளை மேற்கொள்வார்கள்.

அப்படி, அதிரடியாக தனது காதலை தெரியப்படுத்தி அதற்கு க்ரீன் சிக்னலும் வாங்கியுள்ளார் அவுஸ்திரேலியாவை சேர்ந்த டோட்.

மாலிசாவை உயிருக்கு உயிராக காதலித்து வந்த இவர், அதனை ஆக்ஷன் கலந்து த்ரில்லராக தெரியப்படுத்த வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார்.

அதன்படியே, தனது நண்பரான ஸ்டண்ட் மாஸ்டர் ஒருவரின் உதவியுடன், தனது உடலில் தீயை மூட்டிக்கொண்டுள்ளார். அது கொழுந்துவிட்டு எரியும் நேரத்தில் குளத்தில் குதித்து, பின்ன அதிலிருந்து எழுந்து வந்து தனது காலியின் விரலில் மோதிரதை மாட்டிவிட்டு காதலை தெரியப்படுத்தியுள்ளார்.

நம் கண் முன்னால் நடந்தது என்ன? என்ற குழப்பத்தில் தவித்த மாலிசா, அதன்பின்னர் தனது காதலனுக்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments