அவுஸ்திரேலியாவில் இளம்பெண் மீது கொலைவெறி தாக்குதல்: அதிர்ச்சி வீடியோ

Report Print Raju Raju in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் சாலையில் ஆசிய பெண்ணை அடித்து உதைத்த பெண் ஒருவரின் செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் முக்கிய சாலையில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் தற்போது பரவி வருகிறது.

அதில் ஆசியாவை சேர்ந்த இளம்பெண்ணை அங்கிருக்கும் பெண் அடித்து துவைக்கிறார். உச்சக்கட்ட கோபத்தில் இருக்கும் அந்த பெண் கால்களால் அவரை எட்டியும் உதைக்கிறார்.

அதை பார்த்த அருகிலிருந்தவர்கள் அடித்த பெண்களை தடுக்கிறார்கள். ஆனால் ஒருவர் கூட அடிவாங்கிய பெண்ணுக்கு உதவி செய்யவில்லை.

இது இனவெறியால் நடந்த தாக்குதல் என கூறப்படுகிறது. ஆனால் இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒரு பெண் கூறுகையில், ஆசிய பெண் தான் முதலில் அவரை திட்டி சண்டைக்கு இழுத்தார்.

அதனால் அவர் மேல் கூட தவறிருக்க வாய்ப்புள்ளது என கூறியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments