9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய கொடூர தாய்!

Report Print Santhan in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் 9 வயது மகளை பாலியல் பலாத்காரத்திற்கு வற்புறுத்திய தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் Gold Coast பகுதியை சேர்ந்த தாய்(37) ஒருவருக்கு 9 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் உள்ளார். இச்சிறுமி கடந்த 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

தற்போது சிறுமி உளவியலாளரிடம் சிகிச்சைக்காக சென்றுள்ளார். சிகிச்சைக்கு சென்ற அச்சிறுமியிடம் மருத்துவர் விசாரித்த போது சில அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்தன

சிறுமி கூறியதாவது, தான் பல முறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், இதற்கு தன் தாய் உடந்தையாக இருந்ததாகவும் கூறினார்.

மேலும் தன் தாய் தனக்கு தூக்கமாத்திரை கொடுத்து, அவரது நண்பர்கள் முன்னிலையில் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், ஆபாசமாக உடை அணியும் படி வற்புறுத்தியதாகவும் கூறினார்.

தான் பலமுறை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டதற்கு தன் தாய் தான் காரணம் என தெரிவித்துள்ளார்.

இதனால் அவது தாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதாகியுள்ள அவர் தற்போது ஜாமீனுக்கு விண்ணப்பித்துள்ளார். அதன் விசாரணை வரும் புதன் கிழமை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments