தலையில் கோபத்துடன் அமர்ந்த கழுகு: சிறுவனின் திக் திக் நிமிடங்கள்

Report Print Deepthi Deepthi in அவுஸ்திரேலியா
1241Shares

அவுஸ்திரேலியாவில் உள்ள பூங்கா ஒன்றில் சிறுவனின் தலையில் வந்து அமர்ந்த கழுகு சிறு காயங்களை மட்டும் ஏற்படுத்திவிட்டு அச்சிறுவனை ஒன்றும் செய்யாமல் சென்றுள்ளது.

Alice Springs Desert பூங்காவில் அமர்ந்து 7 வயது சிறுவன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்துள்ளான், அப்போது அருகில் உள்ள மரத்தில் இருந்து பறந்த வந்த கழுகு சிறுவனின் தலையில் அமர்ந்துள்ளது.

பார்ப்பதற்கு மிகவும் கோபத்துடன் காணப்பட்ட கழுகு, அவனது முகத்தில் சிறு காயத்தினை ஏற்படுத்தியுள்ளது, இதனை அருகில் இருப்பவர்கள் பார்த்தும் ஒன்றும் செய்யாமல் இருந்துள்ளனர்,

ஏனெனில் கழுகு கோபம் மிகுதியால் அமர்ந்திருக்கும்போது, அருகில் உள்ளவர்கள் சத்தம் எழுப்புகையில், அந்த சத்தத்தை கேட்டு கழுகு அச்சிறுவனை ஏதேனும் செய்துவிடக் கூடது என்பதற்காக அமைதியாக இருந்துள்ளனர்.

கழுகு தனது தலையில் அமர்ந்திருந்ததால் மிகுந்த அச்சத்தோடு சிறுவன் இருந்துள்ளான், பின்னர் சிறிது நேரம் கழித்து கழுகு அங்கிருந்து பறந்து சென்றுள்ளது.

இந்த சம்பவத்தை அருகில் இருந்து வேடிக்கை பார்த்த Leigh (64) என்பவர் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளார்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments