கும்பத்திற்கு செல்லும் புதன்! ஒவ்வொரு ராசிக்காரருக்கும் எப்படிப்பட்ட பலன்களைத் தரப் போகிறார் ?

Report Print Kavitha in ஜோதிடம்
535Shares

புதன் ஜனவரி 25 ஆம் தேதி மகர ராசியில் இருந்து, கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார்.

கும்ப ராசிக்கு செல்லும் புதன் ஒவ்வொரு ராசிக்காரருக்கும் எப்படிப்பட்ட பலன்களைத் தரப் போகிறார் என்பதைப் பற்றி இங்கு பார்ப்போம்.

மேஷம்

மேஷ ராசியின் 3 ஆவது வீட்டின் அதிபதியான புதன் 11 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இது இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல முடிவுகளைத் தரக்கூடியதாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, உடன்பிறப்புகள் செல்வ செழிப்புடன் சிறப்பாக இருக்கப் போகிறார்கள்.

காதல் தொடர்பான விஷயங்களைப் பொறுத்தவரை, புதன் சனியிடம் இருந்து விலகி இருப்பதால், இதுவரை இருந்த தயக்கம் நீங்கும் மற்றும் உங்களின் உணர்ச்சிகள் மற்றும் உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்துவீர்கள். இது உறவுகளில் நல்லிணக்கத்தையும், பேரின்பத்தையும் அதிகரிக்கும்.

தொழிலைப் பொறுத்தவரை, உங்களின் கடின உழைப்பு மற்றும் நேர்மையான முயற்சிகளின் பலனாக வருமானம் மற்றும் பதவி உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. எழுத்து தொடர்பான தொழில்களில் இருப்பவர்கள், புதனின் இந்த இடமாற்றத்தால் பயனடைய வாய்ப்புள்ளது.

போட்டித் தேர்வுகள், விவாதப் போட்டிகளுக்குத் தயாராகும் மாணவர்கள் அவற்றில் வெற்றிபெற வாய்ப்புள்ளது. கடன் அல்லது நிதி நிறுவனங்களின் ஆதரவை எதிர்பார்ப்பவர்கள் இப்பெயர்ச்சியால் சாதகமான முடிவுகளைப் பெற வாய்ப்புள்ளது.

ரிஷபம்

ரிஷப ராசியின் 2 மற்றும் 5 ஆவது வீட்டின் அதிபதியான புதன் 10 ஆவது வீட்டிற்கு செல்கிறார். புதனின் இந்த இடமாற்றம் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல முடிவுகளைத் தரும். தொழிலைப் பொறுத்தவரை, நீங்கள் சொற்களைக் காட்டிலும் செயலின் சக்தி அதிகம் என்று நம்புபவர்கள் என்பதால், உங்கள் பணிகளை சரியான நேரத்தில் முடிப்பீர்கள். வணிகர்கள் தங்களின் வணிகத்தை விரிவுப்படுத்த புதிய வாய்ப்புக்களைப் பெறுவார்கள்.

நிதி நீதியாக இக்காலமானது முதலீட்டிற்கு சிறந்தது. இக்காலத்தில் நீங்கள் செய்யும் முதலீடுகள் பிற்காலத்தில் சாதகமான முடிவுகளைத் தரும்.

தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, உங்கள் தந்தையுடனான உறவு மேம்படும் மற்றும் அவர்களிடமிருந்து நல்ல நிதி நன்மைகளையும் பெற வாய்ப்புள்ளது. முக்கியமாக இக்காலத்தில் உங்கள் உறவினர்களுடனான உறவு மேம்படுவதைக் காணலாம்.

மிதுனம்

மிதுன ராசியின் பத்தாவது வீட்டின் அதிபதியான புதன், 9 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இது இந்த ராசிக்காரர்களுக்கு பெரும் நிவாரணத்தையும் நல்ல முடிவுகளையும் தரும். இக்காலத்தில் உங்களின் அனைத்து முயற்சிகளிலும் நீங்கள் வெற்றியைக் காண்பீர்கள்.

தொழிலைப் பொறுத்தவரை, உங்கள் நம்பிக்கை அதிகமாக இருப்பதால், பணியிடத்தில் உங்களின் கருத்துக்களை சிறப்பாக வெளியிடுவீர்கள்.

இதனால் புதிய வாய்ப்புக்கள் மற்றும் பொறுப்புக்களை பணியிடத்தில் பெறுவீர்கள். வணிகர்கள் புதிய பணிகள் மற்றும் கொள்கைகளைத் தொடங்க சிறந்த காலம் இது.

வெளிநாட்டில் படிப்பைப் படிக்க நினைப்பவர்களுக்கு இக்காலத்தில் அனுமதி பெற வாய்ப்புள்ளது. தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, உறவுகளில் பேரின்பத்தையும் நல்லிணக்கத்தையும் அனுபவிக்க வாய்ப்புள்ளது.

கடகம்

கடக ராசியின் 8 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இந்த இடப்பெயர்ச்சி இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமான முடிவுகளைத் தர வாய்ப்புள்ளது.

தொழில் ரீதியாக, உங்கள் திறமைகளை மேம்படுத்துவதற்கான உங்களின் ஆர்வம் சக பணியாளர்கள் மற்றும் மூத்த நிர்வாகத்திடமிருந்து பாராட்டுக்களைப் பெற உதவும்.

மேலும் புதனின் இந்நிலை பிரச்சனைகளை தீர்ப்பதற்கான ஆக்கப்பூர்வமான தீர்வுகளையும் கண்டுபிடிக்கச் செய்யும். கூட்டாண்மை வடிவத்தில் தங்கள் வணிகத்தை நடத்தும் வணிகர்கள் தங்கள் வருமானத்தில் அதிகரிப்பு காண்பார்கள்.

தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, உங்கள் தகவல் தொடர்பு திறன், இராஜதந்திரம் மற்றும் தந்திரோபாய நடத்தை ஆகியவை உங்கள் குடும்பம் மற்றும் உங்களைச் சுற்றியுள்ளவர்களின் இதயங்களை வெல்ல உதவும். இக்காலத்தில் உங்கள் மாமியாரிடமிருந்து பரிசுகளும், ஆதரவுகளும் கிடைக்கும்.

சிம்மம்

சிம்ம ராசியின் 2 மற்றும் 11ஆவது வீட்டின் அதிபதியான புதன், 7 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இந்த புதனின் மாற்றம் இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமான முடிவுகளைத் தரப் போகிறது.

தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, திருமண வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் கொண்டு வரும் காலம் இது. உங்கள் துணையுடனான உங்கள் தொடர்பு மென்மையாக இருக்க வாய்ப்புள்ளது.

நீங்கள் இருவரும் உங்கள் அனுபவங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளை ஒருவருக்கொருவர் சுதந்திரமாக பகிர்ந்து கொள்வீர்கள். சொல்லப்போனால், இக்காலத்தில் இருவரும் ஒருவருக்கொருவர் நெருக்கமாவீர்கள்.

இந்த காலத்தில் உங்கள் வசதிகளும் ஆடம்பரங்களும் உயரும். குறுகிய பயணங்கள் மற்றும் வேலை தொடர்பான பயணங்களால் நல்ல லாபம் கிட்டும். மாணவர்களின் முயற்சி அவர்களின் கல்வி செயல்திறனை அதிகரிக்க உதவும்.

கன்னி

கன்னி ராசியின் 1 2 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் கன்னி ராசிக்காரர்கள் தங்கள் உடல்நலத்தில் சரிவைக் காணக்கூடும்.

மேலும் இந்த காலத்தில் உங்கள் செலவுகள் உயரப் போகிறது. இது மனநலத்தையும் மன அழுத்தத்தையும் உருவாக்கி, உங்கள் ஆரோக்கியத்திற்கு எதிர்மறையான விளைவுகளை உண்டாக்கப் போகிறது.

தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் இடையிலான தூரம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இருப்பினும், தொழில் அடிப்படையில், இந்த பெயர்ச்சி சரியான திசையில் செல்கிறது. உங்கள் கடின உழைப்பு மற்றும் உங்கள் பணியிடத்தில் உள்ள முயற்சிகள் உங்களுக்கு பாராட்டு மற்றும் அங்கீகாரத்துடன் பதவி உயர்வையும் வழங்கும். இந்த காலகட்டத்தில் எந்தவிதமான மோதல்களிலும் வாதங்களிலும் ஈடுபட வேண்டாம்.

இந்த காலத்தில் நீங்கள் நேர்மறையாகவும் நம்பிக்கையுடனும் இருக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் அன்றாட வழக்கத்தில் யோகா, தியானம் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள். இது உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கவும் ஆரோக்கியத்திற்கு சிறந்த முடிவுகளை வழங்கவும் உதவும்.

துலாம்

துலாம் ராசியின் 5 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். அது இந்த ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கக்கூடியதாக இருக்கும்.

இந்த ராசியைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் உயர் கல்வியின் சாதகமான முடிவுகளைப் பெறுவார்கள்.

தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, திருமணமாகாத துலாம் ராசிக்காரர்கள் தங்களின் உணர்வுகளை பிடித்தவர்களின் மீது வெளிப்படுத்துவதற்கான சரியாக காலம் இது. அதிர்ஷ்டம் உங்கள் பக்கத்தில் இருப்பதால், உங்களின் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்வார்கள். திருமணமானவர்கள், தங்கள் துணையுடன் தரமான நேரத்தை செலவிடுவார்கள்.

இது இருவருக்குமான உறவை வலுப்படுத்த உதவும். தொழில் ரீதியாக, இந்த காலகட்டத்தில் உங்கள் படைப்பாற்றல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இத உங்களுக்கு மகத்தான வெற்றியைக் கொடுக்கும். மொத்தத்தில், துலாம் ராசிக்காரர்களுக்கு சாதகமான முடிவுகளைத் தரக்கூடியதாக இருக்கும். ஆனால் புதனின் நிலைப்பாடு சில சமயங்களில் சிக்கல்களை உருவாக்குவதாக இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 8 மற்றும் 11 ஆவது வீட்டின் அதிபதியான புதன் 4 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இந்த பெயர்ச்சி இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமான முடிவுகளைத் தரும்.

இக்காலத்தில் வீட்டுச் சூழல் அமைதியாகவும், சந்தோஷமாகவும் இருக்கும். முடிந்தவரை குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவிடுங்கள்.

உங்கள் தாயின் ஆரோக்கியம் சற்று மோசமாக இருக்கும். எனவே சற்று கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். சிலர் திடீர் ஆதாயங்களையும், நன்மைகளையும் பெறலாம். இக்காலத்தில் சிலர் சொத்து அல்லது வாகனங்களை வாங்கலாம்.

மொத்தத்தில் வசதிகளும், ஆடம்பரங்களும் அதிகரிக்கும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, உங்கள் மனைவியின் வருமானம் இக்காலத்தில் உயரக்கூடும். தொழில் ரீதியாக, இந்த காலம் மென்மையாகவும், மன அழுத்தமில்லாமலும் இருக்கும்.

தனுசு

தனுசு ராசியின் 7 மற்றும் 10 ஆவது வீட்டின் அதிபதியான புதன், மூன்றாவது வீட்டிற்கு செல்கிறார். இந்த வீடு தைரியம், வீரம், உடன்பிறப்புகள், முயற்சிகள் மற்றும் தகவல்தொடர்பு ஆகியவற்றின் வீடாக கருதப்படுகிறது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி நல்ல பலனளிக்கும்.

இக்காலத்தில் குறுகிய பயணங்களை மேற்கொள்வது தொழில் மற்றும் வணிகர்களுக்கு பயனுள்ள லாபத்தை தருவதாக இருக்கும்.

பணியிடத்தில் உங்கள் கடின உழைப்பும், திறமையும் பாராட்டப்படும். இக்காலத்தில் ஆற்றலுடனும், உற்சாகத்துடனும் இருப்பீர்கள்.

இருப்பினும், அதிக தன்னம்பிக்கையிலிருந்து விலகி இருங்கள் மற்றும் ஒரே நேரத்தில் பல திட்டங்களை எடுப்பதைத் தவிர்க்கவும், இது பேரழிவை ஏற்படுத்தும். மாணவர்கள், இக்காலத்தில் பாடங்களை எளிதில் புரிந்து கொள்வார்கள்.

மகரம்

மகர ராசியின் 9 ஆவது வீட்டின் அதிபதியான புதன், 2 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் இந்த பெயர்ச்சி இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல முடிவுகளை வழங்கும். நிதி ரீதியாக, இந்த காலம் லாபங்கள் மற்றும் நிதி ஆதாயங்கள் நிறைந்ததாக இருக்கும்.

மேலும், நிலம், வீடு அல்லது சொத்து வாங்குவது பற்றி நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால், முன்னேற இது ஒரு நல்ல காலம்.

இந்த காலகட்டத்தில் உங்கள் தந்தையிடமிருந்து நீங்கள் நல்ல நிதி ஆதரவைப் பெற வாய்ப்புள்ளது, இது உங்கள் கனவுகளையும் குறிக்கோள்களையும் தொடர தேவையான ஊக்கமாக செயல்படும்.

இந்த காலத்தில் மேற்கொள்ளப்படும் தொழில் ரீதியான பயணங்கள் பண பலன்களைத் தரும். இக்காலத்தில் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள்.

ஏனெனில் அதை திரும்பப் பெறுவது கடினமாக இருக்கும் அல்லது சண்டைகளுக்கு பிறகு மட்டுமே பெற முடியும். வர்த்தகம், பங்குச் சந்தை போன்றவற்றிலிருந்து திடீர் லாபம் பெற வாய்ப்புள்ளது.

இக்காலத்தில் உங்கள் சொற்கள் அல்லது பேசும் விதம் தற்செயலாக மற்றவர்களைத் துன்புறுத்துவதோடு, வீட்டிலும் உங்கள் பணியிடத்திலும் சில வாதங்கள் அல்லது மோதல்களுக்கு வழிவகுக்கும்.

கும்பம்

கும்ப ராசியின் 5 மற்றும் 8 ஆவது வீட்டின் அதிபதியான புதன், முதல் வீட்டிற்கு செல்கிறார். இதனால் இந்த பெயர்ச்சி இந்த ராசிக்காரர்களுக்கு கலவையான மற்றும் சுவாரஸ்யமான முடிவுகளைத் தருவதாக இருக்கும்.

திருமணமானவராக இருந்தால், உங்கள் குழந்தைகளின் முன்னேற்றத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைவீர்கள்.

இக்காலத்தில் உங்கள் அன்பானவரிடமிருந்தோ அல்லது வாழ்க்கைத் துணையிடமிருந்தோ உங்களுக்கு முழு ஆதரவு, அன்பு மற்றும் பாசம் கிடைக்க வாய்ப்புள்ளது.

தொழில் ரீதியாக, உங்கள் கடின உழைப்பு மற்றும் திறனுக்கான பாராட்டைப் பெற வாய்ப்புள்ளதால், உங்கள் நம்பிக்கையும் தன்னம்பிக்கையும் அதிகமாக இருக்கும்.

வணிகர்களைப் பொறுத்தவரை, புதிய ஒப்பந்தங்கள், கூட்டாண்மை மற்றும் நிதி முதலீடுகளைச் செய்ய இது ஒரு சிறந்த காலம்.

இந்த காலகட்டத்தில் ஆரோக்கியம் குறையக்கூடும். சிறிய வியாதிக்கு கூட மருத்துவரை தவறாமல் அணுக அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

மீனம்

மீன ராசியின் 4 மற்றும் 7 ஆவது வீட்டின் அதிபதியான புதன் 12 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் வசதியான வாழ்க்கையை வாழ நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக செலவழிப்பதைக் காணக்கூடும்.

இக்காலத்தில் பணியிடத்தில் உங்கள் நற்பெயருக்கு தீங்கு ஏற்படும் என்பதால், உங்கள் எதிரிகளுடன் மோதல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.

தொழில் ரீதியாக, புதனின் இந்த இடமாற்றத்தின் போது நீங்கள் வழக்கத்தை விட கடினமாக உழைக்க வேண்டியிருக்கலாம்.

உங்கள் யோசனைகளையும் கொள்கைகளையும் திறம்பட செயல்படுத்த முடியாமல் போகலாம், இது மன கவலைகள் மற்றும் செயல்பாட்டில் பதட்டத்திற்கு வழிவகுக்கும்.

இக்காலத்தில் வெளிநாட்டு வர்த்தகத்துடன் தொடர்புடையவர்கள், இறக்குமதி-ஏற்றுமதி பெற வாய்ப்புள்ளது. தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, குடும்பத்தில் அதிக கவனம் செலுத்த முயற்சி செய்யுங்கள்.

ஏனெனில் இக்காலத்தில் குடும்பத்தினர் சில ஆரோக்கிய பிரச்சனைகளை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்