விருச்சிகம் செல்லும் புதன்! படு மோசமான விளைவுகளை சந்திக்கப்போகும் ராசிக்காரர் இவர்கள் தான்!

Report Print Kavitha in ஜோதிடம்
15018Shares

புதன் நவம்பர் 28 ஆம் தேதி விருச்சிக ராசிக்கு இடம் மாறுகிறார். இந்த ராசியில் இவர் டிசம்பர் 17 வரை இருந்து, பின் தனுசு ராசிக்கு இடம் பெயர்வார்.

இந்த கிரக மாற்றத்தால் எந்த ராசிக்காரர்கள் எம்மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

மேஷம்

மேஷ ராசியில் புதன் 8 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இது மரணம் மற்றும் நீண்ட ஆயுளின் வீடு. இந்த வீடு திடீர் நிகழ்வுகள் அனைத்தையும் ஆளுகிறது.

இந்த பெயர்ச்சி உங்களுக்கு பல மகிழ்ச்சியைக் கொடுக்காது. புதன்பேச்சின் வீட்டை நேரடியாக பார்த்துக் கொண்டிருப்பதால், குடும்பத்தில் சண்டைகள் அதிகம் ஏற்படுவதைக் குறிக்கிறது. எனவே நீங்கள் பேசும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் மற்றும் சிந்திக்க வேண்டும்.

இல்லாவிட்டால் உங்கள் தனிப்பட்ட அல்லது தொழில் ரீதியான உறவுகளை மோசமாக பாதிக்கும். உங்கள் நண்பர்களுடன் ஒரு நல்ல நேரத்தை செலவிடுவீர்கள்.

உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, உங்கள் பாதையில் சில சிக்கல்களைக் காணலாம். பணியிடத்தில் உங்கள் கருத்துக்களை தெரிவிப்பதில் சிரமத்தைக் காணலாம். சில சமயங்ளில் உங்கள் பாதையை இழப்பதைப் போல உணரக்கூடும்.

ரிஷபம்

ரிஷப ராசியில் புதன் 7 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இந்த வீடு உறவுகளின் வீடு. உங்கள் திறமைகள் ஒரு நல்ல தொழில்முறை நிலையை அடைய உதவும்.

மேலும், புதன் உங்கள் காதல் மற்றும் சந்ததிகளை ஆளுகிறது. எனவே, உங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிட இந்த போக்குவரத்து மிகவும் இனிமையான காலமாக இருக்கும்.

புதன் ஞானத்தின் அதிபதி. எனவே, இந்த பெயர்ச்சி உங்கள் திறன்களை எல்லா மட்டங்களிலும் வளர்க்க உதவும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, இது மிகவும் சிறந்த காலமாகும்.

இருப்பினும் புதிய உறவுகளைத் தொடங்க சிறந்த காலம் அல்ல. உங்கள் ஆக்கிரோஷ குணத்தைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தால், இந்த காலம் உங்களுக்கு சிறந்த காலமாக இருக்கும்.

மிதுனம்

மிதுன ராசியில் புதன் 6 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இது ஆரோக்கியம், உடல் நலம், நோய் மற்றும் அன்றாட வழக்கத்தின் வீடு. எனவே உங்களின் அன்றாட வாழ்க்கையில் நீங்கள் மேற்கொள்ளும் விஷயங்களை இந்த வீடு நிர்வகிக்கிறது.

மேலும், இது எதிரிகள், கடன்கள், சிரமங்கள் மற்றும் தடைகளை ஆளுகிறது. இந்த பெயர்ச்சியால், உங்கள் கவனம் உங்களின் தொழில் வாழ்க்கை மற்றும் அன்றாட வாழ்க்கையை மையமாக கொண்டிருக்கும்.

இருப்பினும், வேலை அழுத்தத்தை சமாளிக்க நீங்கள் மக்களுடன் அடிக்கடி தொடர்பு கொள்ள வேண்டியிருக்கும். நீங்கள் பல வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.

மொத்தத்தில், நீங்கள் கடினமாக உழைத்தால், நீங்கள் இருக்க விரும்பும் இடத்தைப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்கள் உடல்நலம் குறித்து நீங்கள் கொஞ்சம் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.

நீங்கள் உங்கள் குடும்பத்துடன் நெருக்கமாக இருப்பீர்கள். இருப்பினும், உங்கள் தாயின் உடல்நிலை நல்ல நிலையில் இல்லை. எனவே நீங்கள் ஒருவித பதட்டத்துடன் இருப்பீர்கள். இந்த மன அழுத்தத்தின் காரணமாக, நீங்கள் பல பிரச்சனைகளை சந்திக்கலாம்.

கடகம்

கடக ராசியின் 5 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இது காதல், விளையாட்டுத்தன்மை, ரோமான்ஸ், செக்ஸ், இன்பம் மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றின் வீடாகும். இந்த பெயர்ச்சி உங்களுக்கு கலவையான முடிவுகளைத் தரும்.

உங்கள் இலக்குகளை அடைய அதிக அழுத்தம் இருக்கலாம். இருப்பினும் கடினமாக உழைத்தால் வெற்றி உறுதி. நீங்கள் ஒரு நரக சங்கடங்களை எதிர்கொள்ளக்கூடும். குழந்தைகளைப் பெற்றவர்கள் தங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தைப் பற்றி கவலைப்படுவார்கள்.

கலை மற்றும் கலாச்சாரத் துறையில் பணிபுரியும் கடக ராசிக்காரர்கள் சில நல்ல வாய்ப்புகளை சந்திப்பார்கள்.

நிதியைப் பொறுத்தவரை, நீங்கள் எந்தவொரு சட்டவிரோத செயலிலும் முதலீடு செய்யக்கூடாது. இல்லையெனில் அது யூகிக்கப்பட்ட லாபத்தை விட அதிக விலையை செலுத்த வழிவகுக்கும்.

சிம்மம்

சிம்ம ராசியில் புதன் 4 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இந்த வீடு நிலங்கள், பூர்வீக இடம், ரியல் எஸ்டேட், சொத்து மற்றும் உங்கள் தாயுடனான உறவை ஆளுகிறது. 4 ஆவது வீட்டில் உள்ள புதன் செல்வம், ஆடம்பரம், சௌகரியம் ஆகியவை சேர்வதைக் குறிக்கிறது.

எனவே இந்த பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்ல முடிவுகளைத் தரும். நீங்கள் உங்கள் வீட்டில் நிறைய நேரத்தை செலவிடுவீர்கள், உணர்ச்சிவசப்படுவீர்கள், உங்கள் உண்மையான, ஆழமான உணர்வுகளுடன் தொடர்பு கொள்வீர்கள்.

புதனின் இந்த மாற்றம் உங்களுக்கு புதிய அனுபவங்கள், கற்றல் மற்றும் சாகசங்களைப் பெற வைக்கும். அதாவது இந்த காலம் உங்களை மேம்படுத்துவதற்கான நேரம்.

பணியிடத்தில், உயர் அதிகாரிகள் உங்களின் வேலையால் மகிழ்ச்சியாக இருப்பார்கள் மற்றும் அதற்காக பாராட்டுவார்கள். நீங்கள் உறுதியாகவும் நம்பிக்கையுடனும் இருப்பீர்கள்.

கன்னி

கன்னி ராசியில் புதன் 3 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இது திறன்கள், புரிந்து கொள்ளும் திறன், புதுமை மற்றும் மனப்பாடம் செய்யும் வீடு.

இந்த வீடு பயணங்கள், ஆர்வங்கள், பழக்கவழக்கங்கள், சகோதரர்கள், சகோதரிகள், பக்கத்துவீட்டுக்காரர்கள், மன நுண்ணறிவு மற்றும் தகவல்தொடர்பு ஆகியவற்றையும் ஆளுகிறது.

இந்த புதனின் மாற்றம் கடினமான முடிவுகளை எடுக்க உங்களை மிகவும் தைரியமாக்கும். உங்கள் இலக்குகளை அடைய பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வதில் நீங்கள் வெட்கப்பட மாட்டீர்கள்.

புதன் உங்கள் ராசிநாதன் என்பதால், உங்கள் எண்ணங்களையும் யோசனைகளையும் வெளிப்படுத்த சிறந்த வழிகளைக் கண்டறிய உதவுவார்.

ஒவ்வொரு முறை புதன் இடம் பெயரும் போதெல்லாம், அது உங்களுக்கு கொஞ்சம் கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மார்கெட்டிங் துறைகளில் உள்ள கன்னி ராசிக்காரர்கள், இந்த பெயர்ச்சியால் சில கூடுதல் நன்மைகளைப் பெறுவார்கள்.

துலாம்

துலாம் ராசியில் புதன் 2 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இது நிதி வீடு. மேலும் இது உங்கள் குரலை ஆளுகிறது.

புதனின் இந்த பெயர்ச்சி, துலாம் ராசிக்காரர்களுக்கு நன்றாக இருக்கும். உங்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும்.

வருமானம் வலுவாக இருக்கும். வெளிநாடுகளில் இருந்து வெகுமதிகளையும் வருமானத்தையும் சிலர் எதிர்பார்க்கலாம்.

இருப்பினும் உங்கள் செலவுகள் மற்றும் முதலீடுகளுக்கு இடையே ஒரு நல்ல சமநிலையைக் கண்டறிவது அவசியம். உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் கூடுதல் நேரத்தை செலவிடுவீர்கள்.

இது குடும்பத்திற்குள் ஒரு வலுவான உறவை உருவாக்க உதவும். உங்கள் துணையின் ஆரோக்கியத்திற்கு கவனிப்பும் கவனமும் தேவைப்படலாம். மன அழுத்தம் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும். இந்த சூழ்நிலையில் இருந்து வெளிவர பொறுமையாக இருக்க வேண்டும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியில் புதன் முதல் வீட்டிற்கு செல்கிறார். இந்த வீடு ஈகோ, சுய உணர்வு, சுய வெளிப்பாடு, மனநிலை, இயல்பு, ஆரோக்கியம் மற்றும் குழந்தைப் பருவத்தைக் குறிக்கிறது. எனவே புதனின் இந்த பெயர்ச்சி, உங்களுக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்த புதனின் இடமாற்றத்தால் சிறந்த சமூக இணைப்புக்களைப் பெற உதவும் மற்றும் இது நீண்ட காலத்திற்கு உங்களுக்கு உதவுவதாகவும் இருக்கும்.

இந்த பெயர்ச்சியால் கவலை மற்றும் பயம் தொடர்பான சில சிக்கல்களை எதிர்கொள்ளக்கூடும். சில எதிர்பாராத வருமானம் மற்றும் வருவாய் சம்பாதிக்க வாய்ப்புள்ளது.

இப்போது புதன் உங்கள் ராசியில் இருப்பதால், துலாம் ராசியில் புதன் இருந்த போது நீங்கள் பெற்றுக் கொண்டிருந்த விசித்திரமான உணர்வுகள் கைவிடப்படும். மன தெளிவைக் காண்பீர்கள். உங்களின் தனிமை உணர்வு நீங்கும்.

தனுசு

தனுசு ராசியில் புதன் 12 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இது உங்களுக்கு குறிப்பாக திருமணம் மற்றும் கூட்டாண்மையில் ஒரு கலவையான முடிவுகளைக் கொண்டு வரப் போகிறது. உங்களை யாரும் புரிந்து கொள்ளவில்லை அல்லது நீங்கள் உண்மையில் கவனிக்கப்படவில்லை என உணர்வீர்கள்.

நீங்கள் ஒரு எம்.என்.சி-யில் பணிபுரிந்து, வெளிநாட்டில் செட்டில் ஆக விரும்பினால், இந்த புதன் பெயர்ச்சி உங்களுக்கு சிறந்த முடிவுகளைத் தரும்.

ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் ஈடுபடுபவர்களும் இதே மாதிரியான முடிவுகளை எதிர்பார்க்கலாம். இந்த காலத்தில் உங்கள் வருமானத்தைப் பொறுத்து முடிவுகளை எடுப்பது நல்லது.

இல்லாவிட்டால் நிதி சிக்கலில் சிக்கிக் கொள்வீர்கள். உங்கள் துணைக்கு சில உடல்நல பிரச்சனைகள் ஏற்படலாம், இது உங்களுக்கு மன அழுத்தத்தையும், பதட்டத்தையும் ஏற்படுத்தும். மேலும் சரியாக தூங்காததால், கண் பிரச்சனைகள் மற்றும் தலைவலியையும் சந்திப்பீர்கள்.

எனவே தினமும் குறைந்தது 7-8 மணிநேர தூக்கத்தை மேற்கொள்ளுங்கள். இது ஆரோக்கிய பிரச்சனைகளைத் தடுக்க உதவும்.

மகரம்

மகர ராசியில் 11 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இது வெற்றி, லாபம் மற்றும் வருமானங்களின் வீடு என்பதால், இந்த ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி நல்ல முடிவுகளைத் தரும்.

புதனின் இந்த பயணத்தால் உங்கள் மூத்த உடன்பிறப்புகள் மற்றும் நண்பர்களிடமிருந்து நல்ல ஆதரவைப் பெற வாய்ப்புள்ளது.

தொழில் ரீதியாக, இந்த புதன் மாற்றம் உங்கள் பணியிடத்தில் வெகுமதிகளையும் நன்மைகளையும் பெறச் செய்யும்.

சொல்லப்போனால் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். நிலுவையில் உள்ள எந்தவொரு சட்ட விஷயங்களும் நிறைவேற்றப்படும், மேலும் தீர்ப்பு உங்களுக்கு ஆதரவாக இருக்கும்.

புதனின் இந்த நிலை உங்களுக்கும் உங்கள் வாழ்க்கைத்துணைக்கும் இடையில் நல்ல புரிதலை வளர்த்து, உங்கள் இருவருக்கும் இடையிலான பிணைப்பை மேலும் வலுப்படுத்த உதவும். மொத்தத்தில் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்.

கும்பம்

கும்ப ராசியின் 10 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். வேத ஜோதிடத்தில் பத்தாவது வீடு தொழில் மற்றும் சமூகத்தில் ஒருவரின் நிலையை குறிக்கிறது.

அன்பு, புத்தி, சந்ததி மற்றும் ஆராய்ச்சி மற்றும் மாற்றத்தின் எட்டாவது வீட்டை புதன் நிர்வகிக்கிறது. எனவே இந்த புதன் இடமாற்றம் உங்களுக்கு சாதகமான முடிவுகளைத் தரப்போகிறது.

தொழில் ரீதியாக, இந்த காலம் உங்கள் எண்ணங்களையும், யோசனைகளையும் வெற்றிகரமாக செயல்படுத்த உதவும். மேலும் இது உங்கள் பணியிடத்தில் உங்கள் துணை அதிகாரிகள் மற்றும் மூத்தவர்களிடையே நல்ல நிலைப்பாட்டை வைத்திருக்கும்.

உங்களில் பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வுக்கு காத்திருப்பவர்கள், இந்த மாற்றத்தின் போது நல்ல செய்தியைப் பெறலாம்.

தனிப்பட்ட முறையில், இந்த புதனின் மாற்றம் உங்களுக்கும் உங்கள் காதலிக்கும் இடையேயான அன்பையும் பாசத்தையும் அதிகரிக்கும்.

உங்கள் துணையிடமிருந்து நீங்கள் நல்ல ஆதரவைப் பெற வாய்ப்புள்ளது. இது உங்கள் இருவருக்கும் இடையிலான பிணைப்பை மேலும் வலுப்படுத்த உதவும்.

மீனம்

மீன ராசியில் புதன் அதிர்ஷ்டம், உயர் கல்வி மற்றும் ஆன்மீகம் ஆகியவற்றைக் குறிக்கும் 9 ஆவது வீட்டிற்கு செல்கிறார்.

தனிப்பட்ட முறையில், உங்கள் மனைவியுடன் சில தரமான நேரத்தை செலவிடுவதற்கான ஒரு நல்ல காலம். உங்கள் தாயுடனான உறவு மேம்படும்.

இந்த காலகட்டத்தில் நீங்கள் அதிக ஞானத்தையும் அறிவையும் அடைவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் ரீதியாக, நீங்கள் பல புதிய வாய்ப்புகளின் மூலம் வருவாயைப் பெறுவீர்கள். நீங்கள் அசையும் அல்லது அசையா சொத்துகளில் முதலீடு செய்ய வாய்ப்புள்ளது.

அவை நீண்ட காலத்திற்கு உங்களுக்கு சாதகமான முடிவுகளைத் தரக்கூடும். ஒட்டுமொத்தமாக, இது உங்களுக்கான ஒரு நல்ல காலம்.

உங்களுக்கு அதிர்ஷ்டமான காலம். உங்கள் நிலுவையில் உள்ள நீண்ட கால ஆசைகள் பலவும் நிறைவேறும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்