துலாம் ராசியில் சஞ்சாரம் செய்யப்போகும் சூரியன்... ஐப்பசி மாதத்தில் ராஜயோகத்தை பெற போகும் ராசிக்காரர் யார்?

Report Print Kavitha in ஜோதிடம்

ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒவ்வொரு ராசியில் பெயர்ச்சி ஆவது வழக்கம். அப்படி சூரியன் துலாம் ராசியில் பெயர்ச்சி ஆவது ஐப்பசி மாதமாக பின்பற்றப்படுகிறது.

அந்தவகையில் ஐப்பசி மாதத்தில் 12 ராசிகளுக்கான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பார்ப்போம்.

மேஷம்

மேஷ ராசிக்கு சூரியன் 7 வது வீட்டில் சஞ்சரிப்பது அல்ல பலன்களை முடிவுகளை வழங்க வாய்ப்புள்ளது. உங்கள் தொழில் பங்குதாரருடனான தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். கோபத்தை கட்டுப்படுத்துவது அவசியம். இல்லையேல் அதற்கேற்ற விலை கொடுக்க வேண்டி வரும்.

உத்தியோகஸ்தர்கள், தொழில் செய்பவர்களுக்கு பெரிய சாதமான நிலை இல்லை என்பதால், எந்த ஒரு வேலையிலும் திட்டமிடுதல் அவசியம்.

உங்கள் உழைப்புக்கேற்ற பலனைப் பெறலாம். குழந்தைகளைச் சமாளிப்பது கடினமாகவும் இருக்கலாம். அவர்களுடன் நேரத்தை செலவிட முயற்சி செய்யுங்கள்; தியான செய்வதால் உங்களின் கோபம் கட்டுக்குள் கொண்டு வந்து நிதானத்தைக் கடைப்பிடிப்பீர்கள்.

​ரிஷபம்

சூரியன் ரிஷப ராசிக்கு 6 வது வீட்டிற்கு செல்வதால் சாதகமான பலன்கள் பெற வாய்ப்புள்ளது. நோய்கள் மற்றும் வியாதிகள் நீங்கி உடல் ஆரோக்கியம் பெறுவீர்கள். ஐப்பசி மாதத்தில் உங்கள் செய்ல் திறம் வலுப்பெறுவதற்கான அனைத்து சாத்தியக் கூறுகளும் உண்டு.

அதனால் நீண்ட காலமாக தாமதப்பட்டு வந்த செயல் நிறைவேறும். மேலும் உங்களை தொந்தரவு செய்யும் நபர்களையும் நிகழ்வுகளையும் எதிர்கொள்ள நல்ல சூழல் அமையும்.

வேலை சவாலானதாக இருக்கலாம் ஆனால் அதைல் வெற்றிகரமாக சமாளித்து அதற்கு சமமாக பலனை அனுபவிப்பீர்கள்.

வேலையில் புதிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்வீர்கள்; அதன் மூலம் நிர்வாகத்திடமிருந்து உங்களுக்கு அதிக பாராட்டு கிடைக்கும். போட்டித் தேர்வுகளை சந்திக்க சரியான நேரம்.

முக்கிய செலவுகளைச் செய்வதற்கான சரியான நேரமும் இது தான். எந்த செயலையும் செய்ய உங்களை வேகப்படுத்திக் கொள்ளுங்கள். பலன் சிறப்பாக கிடைக்கும்.

​மிதுனம்

ராசிக்கு சூரியன் 5ம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செல்வதால் கலவையான பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் ஒட்டுமொத்த மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை பேணிக் காப்பதில் கவனமாக இருங்கள்.

வயிறு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படக்கூடும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையுடன் அதை எதிர்கொள்ள நீங்கள் தயாராகுங்கள்.

புதிய கற்றல் முயற்சிகள் தொடங்குவதால் எதிர்காலத்தில் பலனைப் பெறலாம். உங்கள் திறன்களை மேம்படுத்த உங்களுக்கு உகந்த படிப்பை தேர்ந்தெடுக்கவும்.

உங்கள் குழந்தைகளுடன் நெருக்கமாக இருப்பதற்கான சூழல் இருக்கும் மேலும் அவர்களுடன் பிணைப்பு அதிகரிக்கும் நிகழ்வுகளும் நடக்கும். இந்த காலகட்டத்தில் வேலை தொடர்பான குறுகிய தூரப் பயணம் பலனளிக்கும்.

​கடகம்

ராசிக்கு 4ம் இடமான சுக, தாயார் ஸ்தானத்தில் சூரியன் சஞ்சாரம் செய்வதால் கலவையான முடிவுகளை பெற வாய்ப்புள்ளது.

குடும்ப உறுப்பினர்களுடன் அமைதியான போக்கில் ஈடுபடுங்கள். இந்த காலகட்டத்தில் நீங்கள் தவறு செய்ய பல சூழல்கள் அமையும் என்பதால், நீங்கள் முடிவெடுப்பதைத் தவிர்த்துவிட்டு குடும்பத்தில் வேறொரு முக்கியமானவரிடம் தற்காலிகமாக முடிவெடுப்பதை ஒப்படைக்கவும்.

ரியல் எஸ்டேட் தொடர்பான விஷயங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். வண்டி, வாகனம் ஓட்டுவதில் பாதுகாப்பை கருத்தில் கொள்வது அவசியம், வேலையின் வேகம் குறையலாம், ஆனால் உங்களின் சுறுசுறுப்பான செயல்பாடு நல்ல பலனளிக்கும்.

இந்த காலகட்டத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளும் நீண்ட காலத்திற்கு பலன்களைத் தரும். உங்கள் மேலதிகாரிகள் உங்கள் கடின உழைப்பை பாராட்டுவார், எனவே உங்கள் திறமைகளை நன்கு வெளிப்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

சிம்மம்

சூரியன் 3 வது வீட்டில் இருப்பதால் சாதகமான முடிவுகளை பெற வாய்ப்புள்ளது. உங்கள் நம்பிக்கையுடன் கூடிய செயல்பாடு வளர்ச்சியைத் தரும், நீங்கள் தைரியமான முறையில் முடிவுகளை எடுப்பீர்கள்.

உங்கள் சக்தியை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும். குடும்பம், வியாபாரத்தில் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

உங்கள் துறையில் புதிதாக ஏதாவது செய்வது பற்றி யோசிப்பீர்கள், இது உங்களுக்கு வெற்றியைத் தரும். அதிகாரிகள் பாராட்டப்படுவீர்கள். வீட்டில் நேர்மறையான சூழல் இருக்கும், வேலை தொடர்பான பயணம் பலனளிக்கும்.

​கன்னி

சூரியன் 2 வது வீட்டிற்கு செல்வதால் கலவையான முடிவுகளை பெறுவீர்கள். நீங்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்தும் மனப்பான்மையில் இருப்பீர்கள் அதனால் சிலர் உங்களை விட்டு விலக நேரிடும்.

நீங்கள் அதிகார நிலையில் இருக்கும்போது கண்ணியமாக இருக்க முயற்சி செய்யுங்கள், மேலும் சில அற்புதமான முடிவுகள் எடுப்பீர்கள். இது வாழ்க்கையில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்த உதவும்.

எந்தவொரு மூலதன செலவான முதலீடுகளை செய்வதற்கு முன் தொழில்முறை ஆலோசகர்களின் ஆலோசனையைப் பெறவும்.

குடும்பத்தில் இருக்கும் கருத்து வேறுபாடு, பேச்சு வழக்கில் நிதானத்தை கடைப்பிடிப்பது அவசியம்.

​துலாம்

உங்கள் ராசியில் சூரிய பகவானின் சஞ்சாரம் கலவையான முடிவுகளை வழங்க வாய்ப்புள்ளது. ஐப்பசி மாத காலம் முழுவதும் நீங்கள் இன்னும் கோபத்தை கட்டுப்படுத்தி, பொறுப்பாக செயல்பட நல்ல பலன்களைப் பெற முடியும்.

உங்கள் துணைவியிடம் விரோத மனப்பான்மையை வளர்த்துக்கொள்வதையும், கருத்து மோதல்களில் ஈடுபடுவதையும் நிறுத்துங்கள். சமூக வலைத்தளங்களில் தேவையற்ற கருத்தைப் பதிவிட வேண்டாம். இது தேவையற்ற பிரச்னையை கொண்டு வரும்.

வேலையில் சிறப்பான முன்னேற்றம் பெற உங்கள் செயல்பாடுகளை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. விமர்சனத்தை மனத்தாழ்மையுடன் ஏற்றுக்கொள்வது நல்லது. எதிர்காலத்தில் சுய முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் இருக்கும்.

வாடிக்கையாளர்களை கையாளும் போது பேச்சு மற்றும் செயலில் கவனம் வேண்டும். தியானமும் வழிபாடும் ஆறுதலளிக்கும்.

​விருச்சிகம்

உங்கள் ராசிக்கு சூரியன் 12 வது வீட்டில் சஞ்சாரம் செய்வதால் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். வேலையில் வெளிநாட்டு தொடர்பில் இருப்பவர்கள் மூலம் நீங்கள் நல்ல பயனடையலாம். உண்மையில், இந்த காலகட்டத்தில் வெளிநாட்டு பயணம் மிகவும் சாதகமாக இருக்கும்.

உங்கள் வாழ்க்கையின் பொருள் வளர்ச்சி மற்றும் ஆன்மீக ஈடுபாடு மேம்படுத்தக்கூடிய ஒரு அருமையான நேரம். ஒரு தொண்டு மனப்பான்மையுடன் பிறருக்கு உதவிகளை செய்யும் மன நிலை இருக்கும்.

நீங்கள் ஆன்மிக யாத்திரைக்குச் செல்வது மன ஆறுதலைத் தரும். எதிர் பாலினத்துடன் பழகுவதில் கவனமாக இருங்கள்.

அதிகாரத்தை கடைப்பிடிக்கும்போது கவனத்துடன் செயல்படுங்கள், யாருக்கும் கட்டளை இடாதீர்கள். இந்த காலகட்டத்தில் உங்கள் தொழில்முறை அனுபவசாலிகளின் தொடர்பு மேம்படும்.

​தனுசு

தனுசு ராசிக்கு சூரியன் 11 வது வீட்டிற்கு அமர்ந்திருப்பதால் பல நன்மையான பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் ஒட்டுமொத்த அதிர்ஷ்டம் வெளிப்படும் மாதமாக இருக்கும். குறிப்பாக வேலையில், தொடர்பான விஷயங்கள் மேம்படும். உங்கள் நேர்மறையான அணுகுமுறையும் உங்கள் நம்பிக்கையும் வெற்றிக்கான பல சிந்தனைகளை கொண்டு வர வழிவகுக்கும்.

உங்களைச் சுற்றியுள்ளவர்களின் ஆதரவை எதிர்பார்க்கலாம். இது உங்களுக்கு ஒரு நல்ல காலம். உங்களின் செயல்பாடு சிறக்கும் என்பதால் மேலதிகாரிகள் மகிழ்ச்சி அடைவார்கள்.

தந்தையிடமிருந்து பயனடைவீர்கள் அல்லது அவருடன் நேரத்தை செலவிடுவீர்கள். இந்த காலகட்டத்தில் உங்கள் வருமானம் மேம்படும்.

​மகரம்

சூரியன் 10 வது வீட்டில் சஞ்சரிப்பதால் சாதகமான பலன்கள் வழங்க வாய்ப்புள்ளது. இந்த பெயர்ச்சியின் போது நீங்கள் நல்ல பலன்களைப் பெற விரும்பினால், அவசரமாக எந்த விஷயங்களை அணுக வேண்டாம் மற்றும் முடிவுகளை எடுக்க வேண்டாம்.

எல்லா எதிர்மறைகளிலிருந்தும் உங்களைப் பாதுகாக்கும். உத்தியோகம், தொழில் உள்ளிட்ட வேலை நிலைமை சீராக இருக்கும் முன்னேற வாய்ப்புள்ளது.

அதிக ஆபத்து நிறைந்த திட்டங்களை, முதலீடுகளை தவிர்க்கவும். உங்களால் சமாளிக்கக் கூடிய செயல் திட்டங்களை மட்டும் ஏற்றுக்கொள்ளவும்.

சட்டம் உங்களுக்கு சாதகமாக செல்ல வாய்ப்புள்ளதால், குறிப்பாக சொத்து தொடர்பான குடும்ப விஷயங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். உங்கள் விருப்பம் போல வேலை வாய்ப்பு அமையும். இந்த காலகட்டத்தில் உங்கள் வருமானம் நிலையானதாக இருக்கும்.

கும்பம்

சூரியன் 9 வது வீட்டில் இருப்பது கலவையான பலன்களைப் பெறுவீர்கள். பிடிவாதமான செயல்பாடு தவிர்ப்பது அவசியம். இதனால் பிரச்னைகளை சந்திக்க நேரிடும். உண்மையில், இது மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை கடுமையாக பாதிக்கும்.

உங்கள் உறவினர், சுற்றத்தாரை மட்டுப்படுத்தாமல் நடந்து கொள்வது அவசியம். சிக்கல்களை உருவாக்கக்கூடிய விஷயங்களை கண்டறிந்து நிதானமாக செயல்படவும். அல்லது அதிலிருந்து விலகி இருங்கள்.

வெற்றிக்கான குறுக்குவழிகளில் செல்வது சிக்கலில் நிறுத்தும். வேலை தொடர்பான பயணத்தில் வெற்றி தரும். பெரிய முதலீடுகளை தவிர்க்கவும். உங்கள் தந்தையுடன் மோதல் போக்கை தவிர்க்கவும்.

​மீனம்

சூரியன் உங்கள் ராசிக்கு 8 வது வீட்டிற்கு அமைந்திருப்பது எதிர்மறையான முடிவுகளை வழங்க வாய்ப்புள்ளது. உங்கள் ஆரோக்கியத்தை மிக கவனமாக பார்த்துக் கொள்வது அவசியம். சிறிய உடல் நலப் பிரச்சினையையும் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

இந்த காலகட்டத்தில் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கக்கூடும். ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபடுவது கண்டிப்பாக கூடாது, எந்த சட்ட விதிமீறல்களில் ஈடுபட வேண்டாம். அதனால் கடுமையான விளைவுகள் ஏற்படும்.

உங்கள் நிதி நிலைமை தற்காலிகமாக பாதிக்கப்படலாம். வேலையில் ஆபத்தான முடிவுகளை தவிர்க்கவும்; உங்கள் வழக்கமான பணிகளில் எதிரிகளின் தலையீடு இருக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் அமானுஷ்யத்தில் திடீர் ஆர்வத்தை உருவாக்கலாம்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்