மகரம் செல்லும் சனி பகவான்... வக்ர நிவர்த்தியால் நற்பலன்களை அடையப்போகும் ராசிக்காரர் யார்?

Report Print Kavitha in ஜோதிடம்

சனி பகவானின் சுற்றுப்பாதை செப்டம்பர் 29 அன்று மாறப் போகிறது.

மே 11 ஆம் தேதி முதல் செப்டம்பர் 29 ஆம் தேதி வரை, 140 நாட்கள் வக்ர நிலையில் சஞ்சரித்த ஆயுள் காரகனான சனி பகவான், செப்டம்பர் 29 அன்று வக்ர நிவர்த்தி அடைகிறார்.

அதாவது செப்டம்பர் 29, 2020 செவ்வாய்க்கிழமை காலை 10.40 மணிக்கு சனி பகவான் தனுசு ராசியில் மகரத்திற்கு சென்று நேர்கோட்டில் பயணிக்கப் போகிறார்.

அந்தவகையில் சனிபகவானால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் என்னென்னப் பலனைப் பெறப் போகிறார்கள் என்பதைக்

மேஷம்

சனியின் இந்த மாற்றத்தால் உங்களின் கடின உழைப்பு மற்றும் போராட்டம் இன்னும் அதிகரிக்கும். தோல் பிரச்சனை எரிச்சலூட்டும். ஆகவே கவனக்குறைவாக இருக்காதீர்கள். உங்கள் உற்சாகத்தில் பற்றாக்குறை இருக்காது.

எந்த வேலையையும் அச்சமின்றி செய்வீர்கள். பெற்றோரின் ஆதரவு முழு பலத்துடன் இருக்கும். வீடு தொடர்பான விஷயத்தால் பணம் செலவாகும். முக்கியமாக உங்கள் வீடு வாங்கும் கனவு, இந்த சனி மாற்றத்தால் வெற்றிகரமாக முடியும்.

பரிகாரம்: சனிக்கிழமை அன்று மாலை வேளையில் அரச மரத்திற்கு கீழ் கடுகு எண்ணெய் தீபம் போடுங்கள் மற்றும் மகாராஜா தசரதனின் நீல் சனி ஸ்தோத்திரத்தைப் படியுங்கள்.

ரிஷபம்

பணியிடத்தில் கடின உழைப்பிற்கு ஏற்ற லாபம் கிடைக்காது. எனவே மிகவும் பொறுமையுடன் பணிபுரிவது நல்லது.

பதவி உயர்வு கிடைக்கும் வரை காத்திருங்கள். சோம்பேறித்தனத்தை உங்களிடம் இருந்து விலக்கி வையுங்கள். இல்லாவிட்டால் சில முக்கியமான பணிகள் உங்கள் கையை விட்டு சென்றுவிடும்.

பேசும் போது மிகவும் கவனமாக பேசுங்கள். சரியான நேரத்தில் நிறைவேற்ற முடியாத எந்த ஒரு வாக்குறுதியையும் கொடுத்துவிடாதீர்கள்.

பரிகாரம்: அனுபவமுள்ள ஒருவரின் ஆலோசனையில் பேரில், சனிக்கிழமை அன்று நடுவிரலில் சபையர் ரத்தினம் பதிக்கப்பட்ட ஒரு பஞ்சதத்து அல்லது அஷ்டதாட்டு மோதிரத்தை அணிந்து, சனி மந்திரத்தை உச்சரிக்கவும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் இந்த சனி பகவானின் பெயர்ச்சியால் பல நன்மைகளைக் காணப் போகிறார்கள். இவர்களது வாழ்வில் சந்தித்த பல பிரச்சனைகள் நீங்கும்.

சனி பகவானின் நேர்கோட்டுப் பயணம் காரணமாக, ஆன்மீகத்தில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும். மேலும் நல்ல மனிதர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் பாசம் அதிகரிக்கும் மற்றும் குடும்பத்தில் மகிழச்சி அதிகரிக்கும்.

பரிகாரம்: சனிக்கிழமை அன்று விரதம் இருங்கள் அல்லது சனி பிரதோஷத்தின் போது விரதம் இருங்கள். சனி கிழமையில் அடர் நிற உடைகள் அணிவதைத் தவித்திடுங்கள்.

கடகம்

சனி பகவானின் இந்த பெயர்ச்சி இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பயனுள்ளதாக இருக்கும். வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் நன்மைகளையும் முன்னேற்றங்களையும் காண்பீர்கள்.

இதுவரை நோய்வாய்ப்பட்டு வந்தவர்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும். அதே சமயம், ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.

போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் முன்பை விட அதிக கவனத்தை செலுத்தி படிப்பீர்கள்.

பரிகாரம்: ஒவ்வொரு சனிக்கிழமையும் கடுகு எண்ணெயை மண் பானையில் நிரப்பி அதில் உங்கள் முகத்தைப் பார்த்த பிறகு, அந்த பானையை தானம் செய்யுங்கள். முடிந்த வரை ஏழைகளுக்கு உதவுங்கள்.

சிம்மம்

சனி பகவானின் மாற்றம் சிம்ம ராசிக்காரர்களின் கடின உழைப்பும், போராட்டமும் அதிகரிக்கும். இது உங்களை மிகவும் பிஸியாக உணர வைக்கும். நீங்கள் நிலத்தில் முதலீடு செய்ய நினைத்தால், மிகவும் புத்திசாலித்தனமாக செய்யுங்கள்.

இல்லையெனில் நீங்கள் ஏமாற்றப்படலாம். நல்ல பதவிக்கு ஆசைப்பட்டு வேலையை மாற்ற முயற்சிக்க வேண்டாம்.

நிதானத்துடன் செயல்பட்டால், உங்களுக்கும் பதவி உயர்வு கிடைக்கும். நாள்பட்ட சில நோய்களால் உங்கள் மன அழுத்தம் சற்று அதிகரிக்கும்.

பரிகாரம்: சனிக்கிழமை அன்று கருப்பு உளுந்தை தானம் வழங்குங்கள். முடிந்தால், சனிக்கிழமை மாலை வேளையில் அரச மரத்தின் கீழ் ஒரு நல்லெண்ணெய் விளக்கு ஏற்றி 7 முறை அந்த மரத்தை சுற்றி வாருங்கள்.

கன்னி

சனி பகவானின் இந்த மாற்றத்தால் இதுவரை செய்த கடின உழைப்பின் பலனைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் நல்ல நிலைக்கு வருவீர்கள். நிலுவையில் இருந்து வேலைகள் இந்த மாற்றத்தால் மீண்டும் தொடங்கப்பட்டு, நல்ல முடிவுகளைப் பெற வாய்ப்புள்ளது.

குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உறவில் ஒரு பரஸ்பர ஒருங்கிணைப்பை பராமரிப்பீர்கள். கல்வித்துறையில் முன்னேற்றம் இருக்கும். புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு.

பரிகாரம்: சனி பிரதோஷத்தன்று விரதம் இருங்கள். இது தவிர சனிக்கிழமை கடுகு எண்ணெய் தீபம் ஏற்றுங்கள்

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் எந்த ஒரு பெரிய முதலீடும் செய்யாமல் இருப்பது நல்லது. செப்டம்பர் மாதத்திற்கு பின் வெளிநாடு செல்ல வேண்டுமென்ற கனவு நனவாகும். யாருடனாவது ஏதேனும் வாக்குவாதம் இருந்தால், சற்று விலகி இருங்கள்.

பரிகாரம்: அறிவுள்ள நபரின் ஆலோசனையில் பேரில் மட்டும், நல்ல தரமான சபையர் ரத்தினத்தை அணியுங்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களின் விருப்பம் அக்டோபர் மாதத்தில் நிறைவேறும். வீட்டில் சுப காரியம் ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளது.

சொத்துக்களை வாங்குவீர்கள். உங்கள் குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். உங்கள் குழந்தைகளிடம் இருந்து நல்ல செய்தியைப் பெறுவீர்கள்.

பரிகாரம்: சனிக்கிழமை அன்று எறும்புகளுக்கு தீணி அளிக்குமாறு வீட்டில் மாவு கோலம் போடுங்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு சனியின் இந்த மாற்றம் நல்ல விளைவுகளைக் கொடுக்கும். திடீரென்று எதிர்பாராத பண வரவு கிடைக்கும்.

சொத்து வாங்கும் முயற்சி வெற்றிகரமாக முடியும். தொலைவில் உள்ள உறவினர்களிடம் இருந்து ஒரு நல்ல செய்தியைப் பெறுவீர்கள்.

பயணம் நன்மை பயக்கும் மற்றும் சுவாரஸ்யமாக இருக்கும். தொழில் மற்றும் திருமண வாழ்க்கையில் நல்ல மாற்றங்களைக் காண்பீர்கள். நண்பர்களிடம் இருந்து உங்களுக்கு நன்மை கிடைக்கும்.

பரிகாரம்: சனிக்கிழமை அன்று தாதுரா வேரை கருப்பு நிற நூலில் கட்டி, அந்த வேரை கழுத்து அல்லது கையில் அணிந்து கொள்ளலாம். மேலும் சனிக்கிழமை அன்று அனுமனை வணங்குவது மிகவும் நல்லது.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு மனக்கஷ்டம் நீடிக்கும். ஆனால் சனி பகவான் தனது சொந்த ராசியில் இருப்பதால், இந்த மன அழுத்தத்தை எதிர்த்துப் போராடுவதற்கான உத்வேகத்தையும் தருவார்.

இந்த மாற்றம் உங்களின் முடிவெடுக்கும் சக்திக்கு சமநிலையையும், ஆழத்தையும் வழங்கும். இந்த சனி மாற்றம் உங்கள் வணிகத்திற்கான புதிய வாய்ப்புக்களைக் கொண்டு வரும்.

மேலும் பொருளாதார சூழ்நிலையும் லாபகரமாக இருக்கும். அதோடு வெளிநாடு செல்ல வேண்டும் என்ற கனவையும் நிறைவேற்ற முடியும்.

உங்கள் உடல்நலத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள். ஏனெனில் விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே வாகனத்தில் செல்லும் போது மிகவும் கவனமாகவும் நிதானமாகவும் ஓட்டுங்கள்.

பரிகாரம்: சனிக்கிழமை அன்று தேள் மூலிகையை (Scorpion Herb) ஒரு கருப்பு துணியில் கட்டி கையில் கட்டிக் கொண்டு, சனி பகவானை வழிபடுங்கள்

கும்பம்

வாழ்வில் போராட்டமும், கடின உழைப்பும் அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கையின் யதார்த்தத்தை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். இந்நேரத்தில் நீங்கள் எதிர்பார்க்காத உறவுகள் உங்களை நெருங்கி வரும்.

வணிகத்தில் எந்தவொரு பெரிய முதலீட்டை செய்வதாக இருந்தாலும், சிந்தனையுடன் தொடருங்கள்.

பரிகாரம்: சனிக்கிழமையில் இருந்து, தினமும் சனி தேவரின் பீஜ் மந்திரத்தை சொல்லுங்கள் மற்றும் சனிக்கிழமை திவ்யாங் மக்களுக்கு உணவு வழங்குங்கள்.

மீனம்

11 ஆவது வீட்டில் ஏற்படும் சனி பகவானின் மாற்றம் உங்கள் ராசியில் முழு விளைவைக் கொண்டிருக்கும். பல புதிய வியாபார வாய்ப்புக்கள் கிடைக்கும் மற்றும் முன்னேற உங்களுக்கு வாய்ப்புக்கள் கிடைக்கும். இந்த ஆண்டு நீங்கள் புதிதாக ஒன்றைக் காண்பீர்கள்.

ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும், ஆனால் சோம்பலில் இருந்து விலகி இருங்கள். இந்த ஆண்டு, பெற்றோரின் ஆதரவு முழு வீச்சில் இருக்கும். மேலும் அவை உங்கள் நிதி நிலைமையிலும் உங்களுக்கு உதவும்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் சனி யந்திரத்தை வழிபடுங்கள் மற்றும் சனிக்கிழமையன்று ஏழைகளுக்கு மருந்துகளை வாங்கி வழங்குங்கள்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்