சூரிய கிரகணத்தால் பேரதிர்ஷ்டம் தேடி வரப்போவது எந்த ராசிக்கு? இந்த ராசிக்கு போராட்டமான நாள்

Report Print Fathima Fathima in ஜோதிடம்

சூரிய கிரகணமான இன்று 12 ராசிகளுக்குமான பலன்களை பற்றி தெரிந்து கொள்வோம்,

மேஷம்: சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தைரியம் கூடும் நாள்.

ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பணப் புழக்கம் கணிசமாக உயரும். அழகும் இளமையும் கூடும். வீட்டிற்கு தேவையான சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

கடகம்: குடும்பத்தினருடன் வீண்வாக்குவாதம் வந்துப் போகும். உடல் நலத்தில் கவனம் தேவை. பழைய கடன் பிரச்சினை அவ்வப் போது மனசை வாட்டும். உறவினர்களுடன் பகைமை வந்து செல்லும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்தியோகத்தில் மறை முக தொந்தரவுகள் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

சிம்மம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்துபூர்த்தி செய்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்கு கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். மதிப்பு கூடும் நாள்.

கன்னி: உங்கள் செயலில் வேகம் கூடும். உடன் பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

துலாம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பி தருவீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும் . புதிய பாதை தெரியும் நாள்.“

விருச்சிகம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் மறைமுக விமர்சனங்களும் எதிர்ப்புகளும் வந்து நீங்கும். சின்ன சின்ன அவமானங்கள் வரக்கூடும். வீட்டிலும் வெளியிலும் மற்றவர்களை அனுசரித்து போங்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் யாரையும் பகைத்து கொள்ளாதீர்கள். போராட்டமான நாள்.

மகரம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

கும்பம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். அண்டை அயலாரின் அன்புத் தொல்லை குறையும். வேற்றுமதத்தவர் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். நினைத்தது நிறைவேறும் நாள்.

மீனம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய் வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்