2020 உங்க ராசிப்படி எந்த மாசம் அதிர்ஷ்டமான மாசமாக இருக்கப் போகுது தெரியுமா?

Report Print Kavitha in ஜோதிடம்
916Shares

ஜோதிடப்படி 2020 உங்களின் ராசிப்படி எந்த மாதம் உங்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த மாதமாக இருக்கப்போகிறது என்பதை பார்ப்போம்.

மேஷம்

2020 ல் உங்களுக்கு அதிர்ஷ்டமான மாதம் ஜனவரி ஆகும். புத்தாண்டு தினத்திலிருந்து மேஷம் இராசி அடையாளத்தில் செவ்வாய் இருக்கும், இதனால் மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல விஷயங்கள் விரைவில் நடக்கும்.

வேலையில் வெற்றியை எதிர்பார்க்கலாம் மற்றும் உங்கள் உறவுகளில் சில கூடுதல் ஆர்வத்தையும் காணலாம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதம் அதிர்ஷ்டமான மாதமாக இருக்கப்போகிறது. டிசம்பர் மாதம் வெகுதூரத்தில் இருப்பதாக நினைத்து கவலைப்பட வேண்டாம்.

ஏனெனில் உங்களின் காத்திருப்புக்கான சிறந்த பலன்கள் உங்களுக்காக காத்திருக்கிறது. இந்த ஆண்டின் இறுதியில் தொழில் ரீதியாகவும் நிதி ரீதியாகவும் நிறைய நல்ல செய்திகளை எதிர்பார்க்கலாம். உங்களின் எதிர்பார்ப்புகளுக்கு மேலான பலன்கள் உங்களுக்கு டிசம்பர் மாதம் கிடைக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் அதிர்ஷ்டம் நிறைந்த மாதமாக இருக்கும். உங்களின் ராசி கிரகமான புதன் உங்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் அளவற்ற அதிர்ஷ்டத்தையும், நல்ல நேரத்தையும் கொண்டு வரும்.

இந்த மாதம் உங்கள் நிதி நிலை மற்றும் உங்கள் காதல் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை உறுதி செய்யும். இதற்கு மேல் வேறென்ன வேண்டும்?

கடகம்

இந்த ஆண்டு கடக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான மாதமாக செப்டம்பர் இருக்கப்போகிறது. செப்டம்பர் மாதம் வரை உங்களுக்கு பல சோதனைகள் நிறைந்த காலமாக இருக்கலாம்.

ஆனால் செப்டம்பர் 2020 உங்கள் பிரச்சினைகளுக்கான அனைத்து தீர்வுகளையும் கொண்டு வர உள்ளது. நீங்கள் இறுதியாக கவலைப்படுவதற்கு விடைபெற்று மனநிறைவை அனுபவிக்க முடியும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு காதலின் மாதமான பிப்ரவரி மாதம் அதிர்ஷ்டமான மாதமாக இருக்கப்போகிறது. செவ்வாய் மற்றும் யுரேனஸ் ஆகிய இரண்டு கிரகங்களும் பிப்ரவரி மாதத்தில் சிறப்பான பலன்களை ஏற்படுத்தும்.

சிம்ம ராசிக்காரர்கள் இந்த காதலின் மாதத்தில் பெரிய விஷயங்களை சாதிப்பார்கள், மேலும் மயக்கம் அளிக்கும் வெற்றியை எதிர்கொள்ள தயாராக இருங்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் அதிர்ஷ்டத்தை வழங்கும் மாதமாக இருக்கும். கன்னி ராசிக்காரர்கள் ஆகஸ்ட் மாதத்தில் மிகப்பெரிய ஊக்கத்தையும் தனது இலட்ச்சியத்தை அடையும் தைரியத்தையும் பெறுவார்கள்.

கிரகங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக உள்ளது, உங்களுக்கான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது உங்களக்கு கைகளில்தான் உள்ளது.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதம் ஒளிரும் மாதமாக இருக்கும். செவ்வாய் கிரகம் துலாம் ராசியின் போராட்ட குணத்தை தூண்டுவதன் மூலம் அவர்களின் குறிக்கோளை அடைவதற்கான உறுதியை அவர்களுக்கு வழங்கும்.

உங்கள் காதல் வாழ்க்கையில் நீங்கள் நினைத்த மாற்றங்களும், முடிவுகளும் ஏப்ரல் மாதத்தில் நடக்க வாய்ப்புள்ளது. இந்த வருடம் உங்களை சுற்றி எப்பொழுதும் காதல் இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான மாதம் அக்டோபர் ஆகும். உங்களின் காதல் வாழ்க்கை உங்களை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும்.

இந்த மாதம் இவர்களுக்கு ஆச்சரியங்கள் நிறைந்த மாதமாக இருக்கும். புதன் மற்றும் சனி அற்புதமான வெற்றிக்கான ஏராளமான வாய்ப்புகளை உங்களுக்கு வழங்கும்.

தனுசு

2020-ல் தனுசு ராசிக்காரர்களுக்கு ஜனவரி மாதம் அதிர்ஷ்டமான மாதமாக இருக்கும்.தனுசு ராசிக்காரர்களுக்கு வரப்போகிற ஆண்டு அற்புதமான தொடக்கமாக இருக்கும்.

இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே நீங்கள் மகிழ்ச்சியகாவும், வலிமையாகவும் உணருவீர்கள். கிரகங்களும் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் இந்த ஆண்டு உங்களுக்கு உற்சாகமாக ஆண்டாக இருக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் அதிர்ஷ்டமான மாதமாக இருக்கும். இந்த மாதத்தில் உங்களுக்கு சனிபகவான் சாதகமாக இருப்பதால் அனைத்தும் உங்களுக்கு எளிதில் கிடைக்கக் கூடியதாக இருக்கும்.

இந்த மாதத்தில் நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம், ஏனெனில் உங்களின் கடின உழைப்புக்கு இந்த மாதம் பலன் கிடைக்கும். செவ்வாய் கிரகம் உங்களை அனைத்து வழிகளிலும் ஆதரிக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் சிறப்பான மாதமாக இருக்கப்போகிறது. உங்ககளின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் தைரியத்தை இந்த மாதம் உங்களுக்கு வழங்கும்.

நவம்பர் மாதத்தில் உங்களை காதல் சூழ்ந்திருக்கும், எனவே அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள். சனி கிரகம் உங்களுக்குத் தேவையான உற்சாகத்தை வழங்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதம் அற்புதமான பலன்களை வழங்கும் மாதமாக இருக்கும். வியாழன் உங்களுக்கு சாதகமாக இருக்கும், உங்களுக்கு தேவையான அனைத்து ஆதரவையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் தரும்.

உங்களின் நம்பிக்கை அதிகரிக்கும், எனவே உங்களின் அதிர்ஷ்டத்தை ஒவ்வொரு நொடியும் அனுபவியுங்கள்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்