தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றப்போகும் மிதுன ராசிக்காரர்களே.. 2020 சில சங்கடங்களையும், பல நன்மைகளை தர போகுதாம்!

Report Print Kavitha in ஜோதிடம்

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் புத்தாண்டு பலன்களில் மிதுன ராசிக்கு எப்படி இருக்க போகுது என பார்ப்போம்.

தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றப்போகும் மிதுன ராசிக்காரர்களே, இந்த வருட புத்தாண்டு உங்களுக்கு சில சங்கடங்களையும், பல நன்மைகளையும் தரக்கூடியதாக அமையப்போகின்றது.

கடந்த வருடம் உங்கள் ராசிக்கு 6ஆம் இடத்தில் குரு மறைந்தும், 7வது இடத்தில் சனி அமர்ந்து கொண்டு சங்கடங்களை மட்டும் அளித்தனர்.

தோல்வி என்னும் பள்ளத்தில் இருந்த நீங்கள், சற்று உயர்ந்து சமநிலைக்கு வரப் போகிறீர்கள்.

7ஆம் இடத்தில் இருந்து கொண்டு கஷ்டங்களை தந்த சனிபகவான், 2020இல் 8ஆம் இடத்திற்கு செல்கின்றார்.

இதன் மூலம் உங்களைப் பற்றி தவறாக புரிந்து கொண்டவர்கள், உங்களின் நல்ல மனதை புரிந்து கொள்வார்கள்.

புதிய நண்பர்கள் உங்களுக்காக உதவிக்கரம் நீட்டுவார்கள். இருந்தாலும், உங்கள் வீட்டில் சிறுசிறு குழப்பங்கள் வந்து போக வாய்ப்பு உண்டு.

குடும்பத் தலைவிகளுக்கு சந்தோஷமான காலம் இது. குடும்பத்தில் விசேஷங்கள் நடப்பதன் மூலம் சுப விரயங்கள் ஏற்படும். உடல் நலத்தில் அக்கறை கொள்வது அவசியம். அஷ்டம சனியால் சில மருத்துவ செலவுகள் வந்து போகும்.

மாணவர்கள் - 5வது இடமான துலாம் ராசியை சனி பார்க்கப் போகின்றார். குருவின் பார்வை இல்லாத காரணத்தால் மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் குறைவதற்கான வாய்ப்பு உண்டு.

அதாவது நீங்கள் படித்ததை உங்களால் நினைவு வைத்துக்கொள்ள முடியாத நிலை உண்டாகும்.

உங்கள் முயற்சியை அதிகப்படுத்தி, படிக்கும் நேரத்தை கூடுதலாக்கி கல்வியில் முழு கவனத்தையும் செலுத்துவதன் மூலம் வெற்றி அடையலாம்.

வேலைவாய்ப்பு - வேலை தேடி முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு, வாய்ப்பு கிடைப்பதில் தாமதம் ஏற்படும். நீங்கள் எதிர்பார்த்த சம்பளத்தில், எதிர்பார்த்த பதவியில், வேலை கிடைக்க வாய்ப்பு இல்லை.

என்றாலும், உங்களுக்கு அமையும் வேலையை ஏற்றுக் கொள்ள வேண்டிய காலம் இது. உங்களின் திறமைக்கு ஏற்ற வேலை கிடைப்பது சிறிது கஷ்டம் தான்.

ஆகவே கிடைத்த வேலையை பயன்படுத்திக் கொள்வதன் மூலம் வரும் காலங்களில் உங்கள் தகுதிகள் நிரூபிக்கப்பட்டு முன்னேற்றம் அடைவீர்கள்.

திருமணம் - 7ஆம் இடத்தில் குரு இருக்கின்றார். குரு 7லிருந்து 8ஆம் இடத்திற்கு செல்லும் போது குடும்பத்தில் புதிய உறவுகள் ஏற்படும்.

திருமணத்திற்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.

8ல் சனியின் பார்வையும் உள்ளதால் உங்கள் வார்த்தைகளை கட்டுப்படுத்த வேண்டும். கணவன் மனைவி விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பிரச்சனைகள் அதிகம் ஆனால் பிரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

தொழில் - சுய தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களாக இருந்தால், உங்களுக்கு சிறு சிறு தடைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

வாய்ப்புகள் உங்களைத் தேடி வருவது போல் சூழ்நிலை அமைந்தாலும் கடைசியில் அது உங்கள் கைகளில் இருந்து நழுவிப் போய்விடும்.

அஷ்டம குரு, அஷ்டம சனி இரண்டும் உங்களுக்கு வருவதால் கஷ்டங்கள் இரட்டிப்பாகும். யாரிடமும் வாக்குவாதம் கூடவே கூடாது. வாக்குவாதத்தின் மூலம் வரும் பிரச்சனைகளை சமாளிக்க இந்த வருடமே வீணாகிவிடும்.

உங்களுடன் வேலை செய்யும் சக ஊழியர்களிடம் கெட்ட பெயர் வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது. யாரிடமும் வாக்குவாதமோ சண்டையோ போட வேண்டாம்.

வேலையை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருந்தால் தயவு செய்து உங்களின் வேலையை விட வேண்டாம்.

வேலை பார்க்கும் இடத்தில் வரும் சங்கடங்களை பொறுத்துக் கொள்ள வேண்டிய காலமிது. வேலையை விட்டு விட்டால் திரும்பவும் வேலை கிடைப்பது கஷ்டம்தான். பொறுமை அவசியம் தேவை.

2ஆம் இடத்திற்கு குரு பார்வையும், சனி பார்வையும் சேர்ந்து இருக்கும் போது நீங்கள் சொல்லும் நல்லவை கூட மற்றவர்களுக்கு கேட்டதாக தெரியும். வார்த்தையில் மிக மிக கவனம் தேவை. அநாவசியமான பேச்சுக்களையும், வீண்வம்புகளையும் குறைப்பது நல்ல பலனைக் கொடுக்கும்.

பரிகாரம் - காலை எழுந்தவுடன் குலதெய்வ வழிபாட்டை முடித்து விட்டு மற்ற காரியங்களை தொடங்குவதன் மூலம் உங்கள் சங்கடங்கள் குறையும்.

குலதெய்வம் தெரியாதவர்கள் திருச்செந்தூர் முருகனையும், திருப்பதி ஏழுமலையானையும் வழிபடுவதன் மூலம் நன்மை அடையலாம். துர்க்கைக்கு வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் விளக்கு ஏற்றுவதன் மூலம் உங்கள் சங்கடங்கள் நீங்கும்.

- Dheivegam

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers