ஆடிவெள்ளியான இன்று எந்த ராசிக்காரருக்கு அதிர்ஷ்டம் அடிக்க போகுது தெரியுமா? உடனே படிங்க

Report Print Kavitha in ஜோதிடம்
443Shares

இன்று இரண்டாவது ஆடி வெள்ளி ஆகும். அந்தவகையில் இன்றைய தினம் 12 ராசிகளுள் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம் அடிக்க போகின்றது என்பதை இங்கு பார்ப்போம்.

மேஷம்

அரசு அதிகாரிகளுடைய உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். தொழிலில் பங்குதாரர்களுடைய அனுகூலமான சூழல்கள் உண்டாகும். உடல் நலத்தில் கொஞ்சம் கவனம் வேண்டும்.

பணியில் உங்களுடைய முயற்சிக்கேற்ற அங்கீகாரமும் பாராட்டுக்களும் கிடைக்கும். செய்கின்ற செயல்களை பதட்டம் இல்லாமல் நிதானத்துடன் செயல்படவும்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

ரிஷபம்

நினைத்த செயல்களை செய்து முடிப்பதில் கொஞ்சம் இழுபறியான சூழல் இருக்கும். உடன் பிறந்த சகோதரர்களிடம் கொஞ்சம் நிதானத்துடன் நடந்து கொள்ளுங்கள்.

வாகனங்களில் பயணம் செய்யும்போதும் கொஞ்சம் நிதானம் வேண்டும். எதிர் பாலினத்தவர்களால் அனுகூலங்கள் ஏற்படும்.

சொத்துக்கள் சம்பந்தப்பட்ட பழைய பிரச்னைகளால் மன வருத்தங்கள் உண்டாகும்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமாகவும் இருக்கும்.

மிதுனம்

நீண்ட நாள் நண்பர்களை சந்தித்து கொண்டாட்டத்தில் ஈடுபடுவீர்கள். உங்களுடைய குண நலன்களில் மாற்றங்கள் உண்டாகும்.

கண் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் குறைய ஆரம்பிக்கும். கணவன், மனைவிக்கு இடையே இருந்து வந்த பிரச்னைகள் குறைந்து அன்பு அதிகரிக்கும்.

வெளியூா் வேலை முயற்சிகளினால் நல்ல செய்திகள் உண்டாகும். இதுவரையில் இழுபறியில் இருந்து வந்த பணிகளைச் சிறப்பாக செய்து முடிக்க முயற்சி செய்வீர்கள்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

கடகம்

நண்பர்களின் மூலமாக அனுகூலமான பலன்கள் உண்டாகும். பொது சபைகளில் ஆதரவான சூழல்கள் உண்டாகும்.

மனதில் புதிய தெம்புடன் புத்துணர்ச்சியுடன் புதிய செயல்களைச் செய்யத் தொடங்குவீர்கள்.

எதிர்பார்த்த செயல்களினால் மகிழ்ச்சியான தருணங்கள் அமைய வாய்ப்புண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் திருப்தியான சூழல் இருக்கும்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

சிம்மம்

பிள்ளைகளின் மூலமாக உங்களுக்கு மகிழ்ச்சியான சூழல்கள் உருவாகும். நீங்கள் எதிர்பார்த்த தன வரவுகளினால்பொருளாதாரம் மேம்படும்.

நண்பர்களின் மூலமாக வியாபாரங்களில் புதிய புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சக ஊழியர்களிடம் உங்கள் மீதான நம்பிக்கைக்ள அதிகரிக்கும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி, தெளிவுகள் பிறக்கும்.

உத்தியோகத்தில் உங்களுடைய பொறுப்புகள் அதிகரிக்க ஆரம்பிக்கும்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமாகவும் இருக்கும்.

கன்னி

வேலை நிமித்தமாக உங்களுடைய முடிவுகளினால் சாதகமான பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்க ஆரம்பிக்கும்.

எடுத்த செயலை சிறப்பாகச் செய்து, முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களுடைய மதிப்புகள் உயர ஆரம்பிக்கும்.

பெரியோர்களுடைய ஆதரவுகள் கிடைக்கும். உறவினர்களுடைய வருகையினால் கலகலப்பான சூழல்கள் அமையும்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

துலாம்

தொழில் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு பெரியோர்களுடைய ஆலோசனைகள் கிடைக்கும். சொந்த ஊருக்கான பயணங்கள் மேற்கொள்வதற்கான திட்டங்களைத் தீட்டுவீர்கள்.

சக ஊழியர்களின் முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். வெளியில் எடுத்துச் செல்கின்ற உடைமைகளில் கொஞ்சம் கவனமாக இருங்கள்.

சமூக சேவைகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு அனுகூலமான சூழல்கள் உருவாகும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் இருக்கும்.

விருச்சிகம்

புதிய புதிய வாய்ப்புகள் வந்து சேரும். குடும்ப நண்பர்களின் மூலமாக மனம் மகிழ்ச்சி ஏற்படும். மனதுக்குள் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி, மகிழ்ச்சி தோன்றும்.

உயர் அதிகாரிகளிடம் ஏற்பட்ட மன வருத்தங்கள் நீங்கும். வியாபாரங்களில் லாபங்கள் அதிகரிக்கும்.

வாகனத்தில் ஏற்பட்ட பழுதுகள் நீங்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் அதிர்ஷட திசையாக மேற்கு திசையும் இருக்கும்.

தனுசு

குடும்பத்தில் உள்ளவர்களின் முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். வியாபாரஙகளில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகமாகும்.

புதிய தொழில் சம்பந்தப்பட்ட முயற்சிகளில் வெற்றி உண்டாகும். பணி நிமித்தமான பயணங்களில் இதுவரை இருந்து வந்த தடைகள் நீங்கும்.

விவாதங்களில் உங்களுக்கு சாதகமான முடிவுகள் ஏற்படும். எதிர்பார்த்த பண வரவுகளினால் திருப்தியான சூழ்நிலை உண்டாகும்.

பொன், பொருள் சேர்க்கைகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதாநிறமும் இருக்கும்.

மகரம்

உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக ஊழியர்களிடம் கொஞ்சம் அமைதியைக் கடைபிடிக்க வேண்டும். மற்றவர்களுடைய செயல்பாடுகளை விமர்சிப்பதை தவிர்த்தல் நல்லது.

தொழில் சம்பந்தப்பட்ட செயல்பாடுகளினால் கால தாமதங்கள் உண்டாகும். உணவு விஷயங்களில் கொஞ்சம் கவனம் தேவை.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் இருக்கும்.

கும்பம்

வீட்டில் உங்களுடைய பிள்ளைகளுடைய எண்ணங்களை அறிந்து செயல்படுங்கள். நீங்கள் செய்கின்ற தொழிலில் பல தடைகளைத் தாண்டி, நீங்கள் நினைத்த செயலை மிகச் சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

புதிய நபர்களுடைய அறிமுகத்தினால் உங்களுக்குச் சாதகமான சூழல்கள் உண்டாகும்.

நீங்கள் விரும்பிய பொருள்களை வாங்கி மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

மீனம்

பணி நிமித்தமாக அலைச்சல்கள் தான் உங்களுக்கு அதிகரிக்கும். உங்களுடைய கவனக் குறைவினால் சி்ன்னச் சின்ன அவப்பெயர்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியில் மறைமுக விமர்சனங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு.

கோபத்தைத் தவிர்த்து விட்டு கொஞ்சம் கூடுதல் நிதானத்தடன் செயல்படுவது மிகவும் நல்லது. தொழிலில் உங்களுக்குப் புதுவிதமான அனுபவங்கள் கிடைக்கும்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம்மஞ்சள் நிறமாகவும் இருக்கும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்