இந்த வார ராசிபலன் (2019 ஜூன் 10 முதல் 15 வரை): 12 ராசிக்காரர்களும் எப்படி?

Report Print Kavitha in ஜோதிடம்

ஜூன் 10 முதல் 15 வரை இந்த வார ராசிப்பலனில் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி என்பதை பார்ப்போம்.

மேஷம்

அன்பர்களுக்கு இந்த வாரம் பல நல்ல பலன்களை கொடுக்கும் வாரமாக அமையும். பெரிய அளவில் கிரக மாற்றங்கள் இல்லை. இரண்டாம் இடத்தில் ஆட்சி பெற்ற நிலையில் இருக்கக்கூடிய சுக்கிரன் குடும்ப அமைதியை பாதுகாப்பார். கணவன் மனைவி ஒற்றுமை நீடித்து இருக்கும். பிரிந்திருந்த குடும்பங்கள் ஒன்று சேர்வதற்கு வாய்ப்பு உண்டாகும்.

பற்றாக்குறை இருந்து வந்ததை சமாளித்து வெற்றி பெறுவீர்கள் தனவரவு உண்டாகும். வாரமாக அமையும் பெண்களுக்கு இனிமையான வாரம் ஆகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் நன்மையில் முடியும் பிரிந்திருந்த சொந்தங்கள் உங்களை நன்றாக புரிந்து கொள்வார்கள். காதல் வலையில் இருப்பவர்கள் திருமணத்தைப் பற்றி பெற்றோர்களுடன் பேசுவதற்கு உகந்த வாரமாக உள்ளது.

உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்து வரும். ஒரு சிலருக்கு சொந்த வீடு வாங்கும் பாக்கியம் உண்டு. சிலர் வீடு கட்டும் முயற்சியில் ஈடுபடுவார்கள்.

இதில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் உள்ள இளையவர்களால் செலவினங்கள் உண்டாக வாய்ப்பு உண்டு. வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள் வெளிநாடுகளில் இருந்து பணம் வர வேண்டியது இருந்தால் வந்து சேரும்.

சொந்தத் தொழில் செய்பவர்கள் முன்னேற்றமான பாதையை நோக்கிச் செல்வர். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிர்வாகத்தின் நம்பிக்கையை பெறுவார்கள் வெளிநாட்டு வாய்ப்பை நோக்கி உள்ளவர்களுக்கு சற்று கால தாமதம் ஆகி வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும் .கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு ஆதாயம் உண்டாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் மகிழ்ச்சியும் சந்தோஷமும் செலவினங்களும் உண்டாகும்.

ரிஷபம்

நேயர்களுக்கு இந்த வாரம் சற்று உணர்ச்சிவசப்படக்கூடிய வாரமாக அமையும். எனவே பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது முன் கோபத்தை குறைத்துக் கொள்ளவும். கணவன் மனைவி உறவு சற்று பிரச்சினையாக சென்றாலும் குடும்ப ஒற்றுமை மேம்படும் காதல் வலையில் விழுந்து இருப்பவர்கள் எதிர்பாலினர் மீது தவறான புரிதல் ஏற்பட வாய்ப்பு உண்டு.

பிரச்சினைகளைப் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள் பிரிவினையை எதிர்நோக்கியுள்ள குடும்பங்களுக்கு சட்டரீதியான பிரிவினைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு விசா தொடர்பான செயல்களில் முன்னேற்றம் உண்டாகும்.

ஒரு சிலர் இடமாற்றத்தில் பற்றி சிந்தித்து கொண்டிருப்பர் சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்கள் சற்று கால தாமதம் ஆக வாய்ப்பு உள்ளது.

தொழில் முயற்சிகளை இந்த வாரத்தில் ஆரம்பிக்காமல் தள்ளிவைப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றத்திற்கான வாய்ப்பு உண்டு என்பதால் இம்மாதிரியான முயற்சிகளை துவக்கலாம். மாணவர்களின் கல்வி நன்றாக இருக்கும் இருப்பினும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

விளையாட்டுத் துறையில் இருப்பவர்கள் மிகப்பெரிய வெற்றி காண்பார்கள் பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு பின்னடைவு ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதால் கவனமாக இருக்கவும்.

குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி உள்ளவர்களுக்கு சற்று காலதாமதமாக வாய்ப்பு உள்ளது. பிரசவத்தை நோக்கி இருப்பவர்கள் சிசேரியன் போன்றவற்றை சந்திக்க நேரிடலாம்.

மிதுனம்

நண்பர்களுக்கு இந்த வாரம் சற்று அலைச்சல் உடன் கூடிய வாரமாகவே இருக்கிறது. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் காலதாமதம் ஆக வாய்ப்பு உள்ளது. தொழில் ரீதியாகவோ உத்தியோக ரீதியாக அடிக்கடி பயணங்களை மேற்கொள்ள வேண்டிய சூழல்கள் ஏற்படலாம். எனவே உடல் ஆரோக்கியத்தில் கவனம் கொள்ளவும்.

கணவன் மனைவி உறவு சிறுசிறு பிரச்சினைகள் உடன் கூடியதாகவே இருக்கும். இவைகளால் மன அமைதி பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு என்பதால் பேச்சில் நிதானம் தேவை. பொருளாதாரத்தை பொருத்தவரை பற்றாக்குறை இருந்து கொண்டே இருக்கும்.

நண்பர்கள் மற்றும் உறவினர்களால் வீண் அலைச்சல்களும் கால விரயமும் பண விரயமும் ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதால் இவைகளில் கவனமாக இருக்கவும்.

சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மூலமாக மன அமைதி பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு. எனவே இவைகளை கவனமாக கையாளவும் வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். விசா தொடர்பான காரியங்களை துவக்குவதற்கு சரியான வாரம் ஆகும்.

குழந்தைகளா மன மகிழ்ச்சி உண்டாகும் அரசியல் துறைகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் பலம் இழந்து விடும் வயதானவர்களுக்கு கால் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

எனினும் சரி செய்யக் கூடிய ஒன்றுதான் முன்னேற்றப் பாதையை நோக்கி செல்வீர்கள். குடும்பத்தில் உள்ள பெண்களால் மன நிம்மதி பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு விநாயகப் பெருமான் வழிபாடு உங்கள் விக்கினங்களைத் தீர்க்கும்.

கடகம்

நண்பர்களுக்கு இந்த வாரம் சற்று பிரச்சினைகளை கொடுக்கக்கூடிய வாரமாகவே இருக்கும் இருப்பினும் வாழ்க்கையில் முன்னேற்றப்பாதையை நோக்கி நடை போடுவீர்கள். உங்கள் ராசிக்கு ஐந்து கிரகங்கள் மறைவு ஸ்தானத்தில் உள்ளன எனவே சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை துவக்குவதற்கு இது சரியான காலம் அல்ல பிரிவினையை நோக்கி செல்லும் குடும்பங்கள் தங்கள் எண்ணம் ஈடேறப் பெறுவார்கள்.

ஒரு சிலருக்கு குடும்பத்தை பிரிந்து வெளிநாடு செல்வதற்கு வாய்ப்புகள் உண்டாகிவிடும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் சற்று காலதாமதம் ஆகும் பெண்களால் முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

சொந்தத் தொழில் செய்வது கூட்டுத் தொழில் செய்வது போன்றவற்றில் சற்று கவனமாக இருக்கவும். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவை சோஷியல் மீடியாவில் அதிக நேரம் செலவிட வாய்ப்பு உள்ளது என்பதால் நேரத்தை சிக்கனமாக பயன்படுத்துங்கள்.

காதலில் ஈடுபட்டு உள்ளார்கள் உள்ளவர்களுக்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதால் தவறான புரிதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள் உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு வெளிநாடு செல்ல வாய்ப்புகள் உண்டாகும். ஒரு சிலர் நாடு விட்டு வேறு நாட்டிற்கு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பார்கள்.

இவைகள் சற்று காலதாமதமாக வாய்ப்பு உள்ளது. விசா தொடர்பான பிரச்சினைகளில் காலதாமதம் ஆகும் இரவு நேர பணியில் ஈடுபட்டுள்ள அவர்களுக்கும் சேவை தொழிலில் இருப்பவர்களுக்கும் இந்த வாரம் வெற்றிகரமாக அமையும் நிர்வாகத்தில் நல்ல பெயரை பெறுவீர்கள்.

குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் தவிப்பீர்கள் பணிச்சுமை அதிகமாக இருப்பதால் ரத்த அழுத்தம் தொடர்பான மாத்திரைகள் எடுத்துக் கொள்பவர்கள் தவறாமல் மாத்திரைகளை சாப்பிடவும்

சிம்மம்

நண்பர்களுக்கு இந்த வாரம் ஏற்றம் தரும் வாரம் ஆகும் 11-ஆம் இடத்தில் கூட்ட கிரகங்கள் இருப்பது தன வரவிற்கு உகந்த வாரம் ஆகும் பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை காண்பீர்கள் உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும்.

அரசு தொடர்பான அலுவல்களில் வெற்றி உண்டாகும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும் பிரிவினையை நோக்கி சென்ற குடும்பங்கள் கூட ஒன்று சேர்வதற்கு வாய்ப்பு உள்ளது. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் நன்மையில் முடியும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாரம் ஆகும்.

நிர்வாகத்தின் நம்பிக்கையை பெறுவீர்கள். காதலில் விழுந்து உள்ளவர்கள் தங்களுடைய திருமணத்தைப் பற்றி பெற்றோருடன் பேசுவதற்கு சரியான வாரம் ஆகும். இவைகளில் நல்ல முடிவு ஏற்படும் மாமன் வகை உறவுகளில் ஒற்றுமை நன்றாக இருக்கும்.

வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். புதிதாக வேலை தேடிக் கொண்டு இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். நல்ல தகவல்களை பெறும் வாரம் ஆகும்.

பல புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவதற்கு வாய்ப்பு உள்ளது. வாகன தொழில் உணவுத் தொழில் அரசுத்துறை போன்றவற்றில் பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள் ஏற்றம் காண்பார்கள் விசா தொடர்பான காரியங்களை துவக்குவதற்கு சரியான வாரம் ஆகும்.

இவைகளில் முன்னேற்றம் உண்டாகும் வேலையில் இடமாற்றத்தை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு அவர்களின் முயற்சிகள் பலிதம் ஆக வாய்ப்பு உண்டு.

குழந்தைகளால் மன நிம்மதி கிடைக்கும். கல்வியில் மேன்மை அடைய கூடிய நல்ல வாரம் உயர்கல்வியில் இருப்பவர்கள் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தை அடைவார்கள்.

புதிய கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சேர்க்கையை எதிர்நோக்கி இருப்பவர்கள் வெற்றி காண்பார்கள்.

ஒரு சிலர் கல்விக்காக வெளிநாடு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும் இவைகளால் ஆதாயம் உண்டு. வெற்றி கிடைக்கும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் நன்மை உண்டாகும். ஒரு சிலர் நீண்ட கால முதலீடுகள் செய்வார்கள்.

கன்னி

அன்பர்களுக்கு இந்த வாரம் இனிய வாரம் ஆகும். பத்தாம் இடத்தில் பாவ கிரகங்கள் இருப்பது நல்ல பலன்களையே செய்யும் மூன்று கிரகங்கள் பத்தாம் இடத்தில் இருக்கின்றன.

எனவே தொழில் மேன்மையடையும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாகத்தில் நல்ல பெயரை பெற்றுக் கொள்வார்கள்.

ஒரு சிலருக்கு உத்தியோக உயர்வு உண்டாகும் வெளிநாட்டு வேலை வாய்ப்பை எதிர்நோக்கி இருப்பவர்கள் நல்ல பதில்கள் பெறுவார்கள். விசா தொடர்பான காரியங்களில் வெற்றி உண்டாகும்.

சுபகாரிய முயற்சிகள் சற்று காலதாமதம் ஆகும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருந்து வரும் சில குடும்பங்கள் ஒன்று சேர வாய்ப்பு உண்டு.

புதிய தொழில் முயற்சிகள் செய்பவர்கள் வெற்றி அடைவார்கள் கூட்டுத் தொழில் முயற்சிகள் ஆக்கம் தருவதாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் மேல் நிலையை அடைவார்கள் காதல் வலையில் விழுந்து இருப்பவர்கள் திருமணத்தை நோக்கி நகர்வார்கள்.

இதுதொடர்பாக உள்ள மூத்தவர்களுடன் கருத்துவேறுபாடுகளும் சிறிய அளவிலான மனக்கசப்புகளும் ஏற்படலாம் என்பதால் பிரச்சனையை கவனமாக கையாளவும்.

உங்கள் பேச்சுக்கு மதிப்பும் மரியாதையும் உண்டாகும் பூர்வீக சொத்து தொடர்பான காரியங்களில் வெற்றி கிடைக்கும். தந்தையார் வழி உறவில் சிறிய அளவில் மனக்கசப்புகள் ஏற்படலாம் தாய்வழி உறவில் ஒற்றுமை உண்டு. சினிமா துறை பத்திரிக்கை துறை கல்வித் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் வெற்றி அடைவார்கள்.

குழந்தைகளின் கல்விச் செலவுகள் கூடுதலாக வாய்ப்பு உண்டு. கல்வியால் முன்னேற்றமும் அடைவார்கள். எனவே நீங்கள் செய்யும் செலவுகள் நியாயமானதாகவும் அர்த்தம் உள்ளதாகவும் இருக்கும்.

சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான செயல்களின் முன்னேற்றம் உண்டாகும். இவைகளால் ஆதாயம் பெறுவீர்கள் குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கப் பெறுவார்கள்.

வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு தாய்நாட்டிலிருந்து விருந்தினர் வருவது அல்லது நல்ல செய்திகள் கிடைப்பது போன்றவை உண்டு ஒருசிலருக்கு திடீர் பிரயாணங்களும் இட மாற்றமும் ஏற்பட வாய்ப்பு உண்டாகலாம் கூடல் நகரத்து ஆடவல்லான் உங்களுக்கு எல்லா வளமும் அருள்வாராக.

துலாம்

அன்பர்களுக்கு இந்த வாரம் இனிய வாரமாகவே செல்லும் பொருளாதாரத்தில் சிறிய அளவில் பற்றாக்குறைகள் இருந்து வந்தாலும் அவைகளால் பெரிய பாதிப்பு ஒன்றும் இருக்காது. குடும்பத்தில் அவ்வப்போது சிறுசிறு சலசலப்புகள் இருந்தாலும் குடும்ப நிம்மதி பாதிக்கப்பட வாய்ப்பு இல்லை.

குழந்தைகளைப் பற்றிய கவலை கூடுதலாக மனதில் குடிகொள்ளும். அவர்களின் கல்வி மற்றும் எதிர்காலத்திற்காகச் சேமிப்பீர்கள் கணவன் மனைவி உறவு அன்பு உடையதாக இருக்கும்.

புதிய திருமண முயற்சிகள் சுபகாரிய முயற்சிகள் போன்றவை சற்று காலதாமதமாக வாய்ப்பு உள்ளது. சொந்தத் தொழில் செய்பவர்கள் பற்றாக் குறைகள் இருந்தாலும் முன்னேற்றத்தை அடைவார்கள் தொழில் வாய்ப்புகள் உங்கள் கண் முன் வந்து நிற்கும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும் நிர்வாகத்தின் நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் பெறுவீர்கள்.

காதலில் விழுந்து இருப்பவர்களுக்கு பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்பு உண்டு என்பதால் பேசித் தீர்த்துக் கொள்ளவும்.

பங்கு வர்த்தகம் தொடர்பான வணிகத்தில் உள்ளவர்களுக்கு கூடுதல் கவனம் தேவை. மாணவர்கள் கல்வியில் முன்னேற்றத்தை அடைவார்கள் ஒரு சிலர் கல்விக்காக வெளிநாடு செல்ல வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படலாம்.

அதில் உள்ள மூத்தவர்களுடன் உறவுநிலை சர்ச்சை பிரச்சனையாக செல்லும் என்பதால் நிதானத்தை கடைபிடிக்கவும் பேச்சை கவனமாக பிரயோகிக்கவும் உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்து வரும். வயதானவர்களுக்கு இடுப்பு மற்றும் கால் பகுதிகளிலும் செரிமானத்திலும் தொல்லைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இருப்பினும் இவைகளால் பெரிய பாதிப்புகள் வர வாய்ப்பு இல்லை. ஒரு சிலருக்கு கண்களில் கேடராக்ட் போன்ற தொல்லைகள் ஏற்படலாம். வெளிநாடுகளில் வசித்து கொண்டிருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலையை உணர்வார்கள் உத்தியோகம் தொழிலில் சுமுகமான சூழ்நிலை உருவாகும். விசா தொடர்பான காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

விருச்சகம்

நண்பர்களுக்கு இந்த வாரம் அதிகமாக உணர்ச்சி வசப்பட கூடிய வாய்ப்புகள் உருவாகி எனவே பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கவும். கோபத்தை குறைத்து குணத்தை கைக்கொள்ளவும் வயதானவர்களுக்கு உடல்நலனில் சிறுசிறு தொல்லைகள் ஏற்பட்டு விலகும்.

குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்களுடன் ஒத்துப் போவது என்பது இவர்களுக்கு சிரமமாக இருக்கும் கடன் பிரச்சினைகளில் அழுத்தம் சற்று கூடுதலாக இருந்தாலும். இவைகளை திறம்பட சமாளித்து வெற்றி அடைவீர்கள்.

உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதால் சற்று விலகி நிற்பதே நல்லது. ஒரு சிலருக்கு குடும்பத்தை பிரிந்து வெளிநாடு செல்ல வாய்ப்புகள் உருவாகும். இதன் மூலம் நல்ல ஆதாயம் பெறுவார்கள். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு புதிய புதிய பிரச்சினைகள் தோன்றிக் கொண்டே இருக்கும். ஒருபுறம் இவைகளை சமாளித்துக் கொண்டே இருப்பார்கள்.

முருகப்பெருமானை வழிபடுவது முற்றிலும் நன்மை தரும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருப்பதால் குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் போக வாய்ப்பு உள்ளது.

நண்பர்கள் மற்றும் உறவினர்களால் செலவினங்களும் வீண் அலைச்சல்களும் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் இவைகளில் கவனம் கொள்ளவும். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவை கல்லூரியில் இடம் கிடைப்பது சற்று சிரமமாக இருக்கும். சிலர் கல்விக்காக வெளிநாடு செல்ல வேண்டியதும் சிலருக்கு கடன் படவேண்டியதும் இருக்கும். இருப்பினும் இம்மாதிரியான காரியங்களில் வெற்றி அடைவீர்கள்.

தனுசு

நண்பர்களுக்கு இந்த வாரம் சற்று உணர்ச்சிவசப்படக்கூடிய வாரமாகவே இருக்கும். முக்கியமாக கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.

கணவன் மனைவிக்கிடையே ஊடல்கள் அதிகமாக இருக்கும் பிரிவினையை நோக்கிச் செல்லும். குடும்பங்கள் தங்கள் காரியங்களில் வெற்றி பெறுவார்கள். கணவன்-மனைவி உறவு பலப்பட யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும். ஏன் அது நீங்களாகவே இருக்கக் கூடாது.

தனவரவு கிடைக்கக்கூடிய வாரமாக இருந்தாலும் பற்றாக்குறை இருந்து வரும். உடல்நலம் சீராக இருக்கும் என்றாலும் உடற்பயிற்சி செய்வது யோகா தியானம் போன்றவற்றை கைக் கொள்வது நல்லது. சொந்ததொழில் செய்பவர்கள் மறைமுக எதிர்ப்புகளை கூடுதலாக சமாளிக்க வேண்டி வரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றத்திற்கான வாய்ப்பு உண்டு.

ஒரு சிலருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் கிடைத்து குடும்பத்தை பிரிந்து செல்ல வேண்டிய சூழல்கள் ஏற்படும். ஆனாலும் பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை அடைவீர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் அலைச்சல்களும் வீண் விரையமும் உண்டாக வாய்ப்பு உண்டு என்பதால் இவைகளில் கவனம் தேவை.

மகரம்

அன்பர்களுக்கு இந்த வாரம் பணிச்சுமையை அதிகமாக கொடுத்து வருமானத்தையும் அதிகமாக கொடுத்து குடும்பத்தை கவனிக்க விடாமல் செய்து விடக்கூடிய வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். நிர்வாகத்தில் நல்ல பெயர் பெறுவீர்கள்.

சொந்தத் தொழில் செய்பவர்கள் பற்றாக்குறை இருந்தாலும் அவைகளைத் திறம்பட சமாளித்து வெற்றி அடைவார்கள். திருமணம் போன்ற சுப காரியங்களில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு சற்று கால தாமதம் ஆக வாய்ப்பு உள்ளது.

குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கும் சற்று காலதாமதம் ஆகும். பிரசவத்தை நோக்கி இருப்பவர்களுக்கு சிசேரியன் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும் எனினும் குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாது என்பதால் சிறு சிறு பிணக்குகள் அல்லது ஊடல்கள் ஏற்பட்டு விலகும.

மாணவர்களின் கல்வி கூடுதல் கவனம் தேவை கல்வியில் இருப்பவர்கள் சற்று சிரமப்பட வேண்டிய சூழல்கள் ஏற்படலாம். ஆராய்ச்சிப் படிப்பில் இருப்பவர்களுக்கு தங்களுடைய வழிகாட்டிகள் உடன் சற்று கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் இவைகளில் கவனமாக இருக்கவும். கல்விக்காக வெளிநாடு சென்றவர்கள் வெற்றி அடைவார்கள்.

வயதானவர்களுக்கு உடல்நலனில் சற்று கவனம் தேவை கால் மற்றும் கண்களில் தொல்லைகள் ஏற்பட்டு விலகும். குடும்பத்திலுள்ள மற்றவர்களுடன் அனுசரித்து செல்வது சற்று சிரமமாக இருக்கும் என்பதால் பொறுமையை கையாளவும்.

பெண்களுக்கு பொறுப்புகள் கூடுவதால் உணர்ச்சிவசப்படக் கூடிய சூழ்நிலைகள் ஏற்படலாம். பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கவும். வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு வெளியில் மழை பெய்தால் கூட தெரியாது என்ற அளவில் பணிச்சுமை கூடுதலாக இருக்க வாய்ப்பு உள்ளது. அம்மன் வழிபாடு உங்களுக்கு ஆக்கம் தரும்.

கும்பம்

அன்பர்களுக்கு இந்த வாரம் முன்னேற்றத்தை அள்ளித் தரும் நல்ல வாரம் ஆகும். சொந்தத் தொழில் செய்பவர்கள் ஏற்றம் பெறுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நன்மை உண்டாகும். உத்தியோக உயர்வு மற்றும் ஊதிய உயர்வை எதிர்பார்க்கலாம்.

பணிச்சுமை சற்று அதிகமாக இருந்தாலும் திறம்படச் சமாளிப்பீர்கள். குடும்ப ஒற்றுமை நன்றாக இருக்கும் கல்வியில் மேல் நிலையை அடைவார்கள். உயர்கல்வியில் இருப்பவர்களுக்கு தகுந்த முன்னேற்றம் உண்டாகும்.

வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் வெற்றி அடைவார்கள். புதிய தொழில் முயற்சிகளில் ஏற்றம் உண்டாகும். கணவன் மனைவி உறவு அன்பு உடையதாக இருக்கும்.

சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும் நின்றுபோன திருமணங்களும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர வாய்ப்பு உருவாகும் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயமும் மகிழ்ச்சியும் கிடைக்கும்.

குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு சற்று கால தாமதம் ஆக வாய்ப்பு உள்ளது. பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு பிரச்சனைகள் தீர்வுக்கு வர மேலும் காலதாமதம் ஆகும்.

அரசியல் துறையில் ஈடுபட்டிருப்பவர்கள் ஏற்றம் காண்பார்கள். கலைத்துறை பத்திரிக்கைத்துறை மற்றும் விஷுவல் மீடியாவில் இருப்பவர்கள். அதிகமான பணிச் சுமையை ஏற்க வேண்டி வரும் உங்கள் திறமையை நிரூபிக்கும் நல்ல ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளவும்.

மீனம்

நண்பர்களுக்கு இந்த வாரம் நன்மை தரக்கூடியதாக இருக்கும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் வெற்றி அடைவீர்கள். உயர்கல்வி ஆராய்ச்சி படிப்பு போன்றவற்றை நோக்கிச் சென்று கொண்டிருப்பவர்கள்.

குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தை அடைவார்கள். கல்விக்காக வெளிநாடு செல்ல நேரிடலாம் வீட்டை விட்டு வெளியில் சென்று படுத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு கல்வி மையம் மேல் நிலையில் இருக்கும்.

குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு வெற்றி உண்டாகும். பல புதிய தொழில் வாய்ப்புகள் உங்கள் கண் முன்னே வந்து நிற்கும் உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாரம் ஆகும். நிர்வாகத்தின் நம்பிக்கையை பெறுவீர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

வெளிநாட்டில் வசிப்பவர்கள் அசையாச் சொத்துக்கள் மற்றும் வாகனங்கள் வாங்குவது பற்றிய சிந்தனைகளில் ஈடுபடுவார்கள். விசா தொடர்பான காரியங்களில் இருப்பவர்களுக்கு வெற்றி உண்டாக வாய்ப்பு உள்ளது.

வேலையாட்களை தேடிக்கொண்டு இருந்தவர்களுக்கு நல்ல நபர்கள் வேலை ஆட்கள் கிடைப்பார்கள். பற்றாக்குறை சிறிதளவு இருந்தாலும் அவைகளை திறம்பட சமாளித்து வெற்றி அடைவீர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயமும் மனமகிழ்ச்சியும் உண்டாக வாய்ப்பு உள்ளது. வயதானவர்களுக்கு குடும்பத்தில் ஒற்றுமை நன்றாக இருக்கும்.

பத்திரிக்கை துறையில் இருப்பவர்கள் ஏற்றம் காண்பார்கள் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள் கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும்.

புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள் காதல் வலையில் விழுந்து இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான சந்திப்புக்கள் உண்டு. திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை துவக்கும் வாரமாக இருக்கும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்