இன்றைக்கு குபேரனால் கோடி கோடியாக லாபம் அள்ள போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

Report Print Kavitha in ஜோதிடம்

இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம்.

மேஷம்

உத்தியோகத்தில் உள்ளவர்கள் அடுத்தவர்களை நம்பி செயல்படாதீர்கள். பொன், பொருள் சேர்க்கைகள் உ்ணடாகும்.

தொழிலில் புதிய பொறுப்புகள் உருவாகும். சுய தொழில் செய்கின்றவர்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உங்களுக்கு சாதகமான நாளாக அமையும்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

ரிஷபம்

பொது காரியங்களில் ஈடுபடுவதன் மூலம் வெற்றி உண்டாகும். பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். மனதுக்குள் புதுவிதமான ஆராய்ச்சி எண்ணங்கள் தோன்றி மறையும்.

சாஸ்திரங்கள் பற்றிய ஞானங்கள் உங்களுக்கு அதிகரிக்கும். உங்களுடைய திறமைகளின் மூலமாக லாபம் அடைவீர்கள்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

மிதுனம்

பொருளாதார நிலையை உயர்த்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். மனதுக்குள் புதுவிதமான தன்னம்பிக்கை பிறக்கும்.

குடும்ப உறுப்பினர்களின் செயல்பாடுகளினால் மகிழ்ச்சியான சூழல்கள் உருவாகும். நண்பர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்ச்சி அடைவீர்கள்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

கடகம்

உங்களுடைய பெருந்தன்மையான செயல்பாடுகளால் பிறருக்கு உங்கள் மீதான மதிப்புகள் உயர ஆரம்பிக்கும். குடும்ப உறுப்பினர்களால் சுப செய்திகள் வந்து சேரும்.

பணியில் நீங்கள் எதிர்பார்த்த வெற்றி உங்களுக்குக் கிடைக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகளால் மனம் மகிழ்ச்சி ஏற்படும்.

மனதுகு்குள் புதுவித எண்ணங்கள் தோன்றும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

சிம்மம்

வர்த்தகம் சம்பந்தமான முடிவுகளில் கொஞ்சம் கவனம் தேவை. வீட்டில் உள்ளவர்குளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

வாகனப் பயணங்களில் வேகத்தைக் குறைக்க வேண்டும். முக்கிய ஆவணங்களைக் கையாளுகின்ற போது, நிதானம் தேவை. வீண் அலைச்சல்களால் உடலும் மனமும் சோர்வடையும்.

சந்திராஷ்டமம் நடந்து கொண்டிருப்பதால் மற்றவர்களிடம் கொஞ்சம் அமைதியான போக்கினைக் கடைபிடியுங்கள்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் பச்சை நிறமும் இருக்கும்.

கன்னி

உயர் அதிகாரிகளால் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். பொதுக்கூட்டங்களில் பேசுகின்ற போது உங்களுக்கு ஆதரவு பெருகும்.

உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு எதிர்பார்து்த உதவிகள் கிடைக்கும். உத்தியுாகத்தில் உள்ளவர்கள் தங்களுடைய தனித் திறமைகளை வெளிப்படுத்துவார்கள்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பழுப்பு நிறமும் இருக்கும்.

துலாம்

போட்டிகளில் பங்கேற்று பலரது பாராட்டையும் பெறுவீர்கள். புதிய வீடு, மனைகள் வாங்குவதற்கு எதிர்பார்த்திருந்த கடன் உதவிகள் கைக்கு வந்து சேரும்.

வேள்விகள் சம்பந்தப்பட்ட பணிகளில் ஈடுபடுவீர்கள். கால்நடைகளிடம் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தண்ணீர் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல லாபம் உண்டாகும்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

விருச்சிகம்

புதிய செயல் திட்டங்களைத் தீட்டுவீர்கள். விவாதங்களில் நீங்கள் எதிர்பார்த்த முடிவுகள் உங்களுக்குக் கிடைக்கும்.

உத்தியோகத்தில் உள்ளவர்களின் மீதான நம்பிக்கைகள் அதிகரிக்கும். புதிய ஆடை, ஆபரச் சேர்க்கைகள் உண்டாகும்.

சங்கீதம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளநீல நிறமும் இருக்கும்.

தனுசு

உத்தியுாகத்தில் உள்ளவர்கள் செய்யும் காரியங்களில் சின்ன சின்ன தடைகள் உண்டாகும். எதிர்பாராத செலவுகள் வரும் வாய்ப்புண்டு.

கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகுள் தோன்றும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்க கால தாமதமாகும்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

மகரம்

தலைமைப் பதவியில் உள்ளவர்களிடம் கொஞ்சம் நிதானமாக நடந்து கொள்ளுங்கள். செய்யும் வேலையை கொஞ்சம் கவனத்துடன் செய்யுங்கள்.

வாகனப் பயணங்களில் நிதானம் தேவை. தேவையில்லாத வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. தேவையற்ற செயலில் ஈடுபடாமல் இருந்தால் நன்மை உண்டாகும்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

கும்பம்

எதிர்பார்த்த தன வரவுகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே இருந்த மனக் கசப்புகள் நீங்கி, மகிழ்ச்சி உண்டாகும்.

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியில் சாதகமான சூழல்கள் உருவாகும். தொழிலில் உள்ள போட்டிகளைச் சமாளித்து வெற்றி காண்பீர்கள்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

மீனம்

பணி சம்பந்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். ஒருவிதமான பய உணர்வு உண்டாகும். கூட்டாளிகளிடம் கொஞ்சம் அமைதிப் போக்கினை கடைபிடிப்பது நல்லது.

தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வேலையாட்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்