இந்த வார ராசிப்பலன்கள்... எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்?

Report Print Kavitha in ஜோதிடம்

இந்த வார (08-03-2019 முதல் 14-03-2019 வரை) ராசிப்பலனின் எந்தெந்த ராசிக்கு நன்மை, தீமை என்று பார்ப்போம்.

மேஷம்

சூரியன் உங்கள் ராசிக்கு 11ஆம் வீடான லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். பதவி உயர்வும், அதனால் கூடுதல் பணவரவும் கிடைக்கும். சந்திரன் சஞ்சாரம் வார துவக்கத்தில் மன சஞ்சலத்தைக் கொடுத்தாலும் வார இறுதியில் மன நிம்மதியை ஏற்படுத்தும்.

செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் கோபமும் எரிச்சலும் உண்டாகும், புதன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் படிப்புக்காக வெளிநாடு செல்லும் நிலை உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் யாருக்கும் பணம் கடன் கொடுக்க வேண்டாம். பண, நகை விசயத்தில் ஜாக்கிரதையாக இருக்கவும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் பெண்களின் உதவி கிடைக்கும்.

சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பாவினால் அனுகூலம் உண்டாகும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும், பழைய வீட்டை வாங்கி புதுப்பீர்கள்.தொழிலுக்காக வெளிநாடு செல்லும் அதிர்ஷ்டம் உண்டாகும்.

ராகு மூன்றாமிடத்தில் இருக்கிறார் மனதில் குழப்பம் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அலைச்சல் அதிகரிக்கும். பெண்களுக்கு மனதில் தெளிவும் அமைதியும் ஏற்படும். மாணவ, மாணவிகள் கல்வியில் அக்கறை செலுத்தவும் விடைகளை எழுதிப்பார்க்கவும். ராசியான நாட்கள் செவ்வாய், வெள்ளி, ராசியான எண்கள் 7, 9.

ரிஷபம்

சூரியன் உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்தில் இருக்கிறார் எல்லா செயல்களும் வெற்றியடையும். சிலருக்கு பணி நிரந்தரம் ஏற்படும். பதவி உயர்வும் தேடி வரும். சந்திரன் சஞ்சாரம் வார துவக்கத்தில் சாதகமாக உள்ளது. மனதில் நிம்மதி ஏற்படும். செவ்வாய் உங்கள் ராசிக்கு 12ஆம் வீட்டில் விரைய ஸ்தானத்தில் இருக்கிறார். வீடு பராமரிப்பதற்காக செலவுகள் அதிகரிக்கும். புதன் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகள் நல்ல லாபத்தை தரும். குரு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் பணவரவு அதிகரிக்கும்.

உங்கள் ராசிநாதன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் வாழ்க்கைத்துணை மூலம் பண வரவு உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் திடீர் வருமானம் கிடைக்கும். வேலைச்சுமையால் உடலில் அசதி ஏற்படும்.

ராகு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் வங்கியில் சேமிப்பு அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் எதிர்பாராத வகையில் பண வரவு அதிகரிக்கும். பெண்களுக்கு உடலில் லேசான அசதி ஏற்படும். மாணவ, மாணவிகள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். ராசியான நாட்கள் வியாழன், சனி. ராசியான எண்கள் 3, 6.

மிதுனம்

சூரியன் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அரசாங்கம் தொடர்பான பயணம் உண்டாகும். சிலருக்கு வேலை விசயமாக வெளியூர், வெளிநாடு பயணம் செய்ய வேண்டியிருக்கும். சந்திரன் சஞ்சாரம் இந்த வாரம் சாதகமாக உள்ளதால் மனதில் அமைதி குடியேறும். செவ்வாய் பதினொன்றாமிடத்தில் லாப ஸ்தானத்தில் இருக்கிறார் வீட்டு வாடகை மூலம் பண வருமானம் அதிகரிக்கும்.

நினைத்தது நிறைவேறும். புதன் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் கல்வியில் மேன்மை உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் எதிரிகளை வெல்வீர்கள். சுக்கிரன் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் திடீர் யோகம் உண்டாகும்.

சனி உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபார வாடிக்கையாளர்களினால் நன்மை உண்டாகும், நண்பர்களுடன் நல்லுறவு அதிகரிக்கும். ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் குழப்பம் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் இருக்கிறார் நண்பர்களின் உதவி கிடைக்கும். பெண்களுக்கு வீட்டிலும் வெளியிடத்திலும் நல்ல பெயர் கிடைக்கும். ராசியான நாட்கள் சனி, செவ்வாய், ராசியான எண்கள் 7, 8.

கடகம்

சூரியன் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். உயர் அதிகாரிகளின் விஷயத்தில் கவனம் தேவை. சந்திரன் சஞ்சாரம் இந்த வாரம் சாதகமான நிலையில் உள்ளது. மனதில் நிம்மதியும் அமைதியும் பிறக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் தொழில் ஸ்தானத்தில் இருக்கிறார் ரியல் எஸ்டேட் தொழில் லாபம் தரும்.

புதன் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பணிபுரியும் அலுவலகத்திலிருந்து நல்ல தகவல் வரும். குரு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் ஆன்மீகப் பயணம் செல்வீர்கள்.

சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் உடம்பில் சோர்வு அசதி உண்டாகும். கடன் பிரச்சினை தீரும். ராகு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அலைச்சல் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் மருத்துவ செலவுகள் ஏற்படும். பெண்களுக்கு உடல் ஆரோக்கியமாக இருக்கும் மனதில் உற்சாகம் பிறக்கும். ராசியான எண்கள் 2, 7.

சிம்மம்

உங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் தொழில் நிமித்தம் பயணம் செல்வீர்கள். சந்திரன் சஞ்சாரம் இந்த வாரம் வார துவக்கத்தில் சாதகமாக இல்லை. சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருக்கவும். செவ்வாய் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பூர்வீக சொத்தில் பங்கு கிடைக்கும்.

புதன் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனுடன் சச்சரவு உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வீட்டை அழகு படுத்துவீர்கள். சுக்கிரன் ஆறாமிடத்தில் இருக்கிறார் வாழ்க்கைத் துணையுடன் சச்சரவு வேண்டாம். சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் மனதில் குழப்பம் உண்டாகும்.

ராகு பதினொன்றாம் இடத்தில் இருக்கிறார் எண்ணங்கள் எல்லாம் நிறைவேறும். கேது உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் குல தெய்வக் கோயிலுக்கு செல்வீர்கள். பெண்களின் மனதில் லேசான கலக்கம் ஏற்படும். ராசியான எண்கள் 3, 9.

கன்னி

சூரியன் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் வீண் செலவுகள் ஏற்படும் கவனம் தேவை, சந்திரன் சஞ்சாரம் வார மத்தியில் சாதகமாக இல்லை.

சந்திராஷ்டம நேரத்தில் மன அமைதி காக்கவும். செவ்வாய் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களால் திடீர் தொல்லைகள் ஏற்படும். வண்டி வாகனங்களில் செல்லும் போது நிதானம் தேவை. புதன் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் தொழில் வியாபாரம் சிறப்படையும். குரு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் குழந்தைகளுடன் வெளியூர் செல்வீர்கள்.

சுக்கிரன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உறவினர் வீட்டு விஷேசங்களில் கலந்து கொள்வீர்கள். சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் விவசாயம் சிறப்படையும். ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா முயற்சிகளும் வெற்றியடையும்.

கேது உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் படிப்பில் கவனம் அதிகரிக்கும். பெண்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். மாணவர்களின் மனதில் தைரியம் கூடும். தேர்வு நேரத்தில் படிப்பில் கவனம் செலுத்தவும். ராசியான எண்கள் 8,9.

துலாம்

சூரியன் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் அரசு பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சந்திரன் சஞ்சாரம் வார துவக்கத்தில் சாதகமாக உள்ளது. வார இறுதியில் சந்திராஷ்டமம் இருப்பதால் கவனம் தேவை. செவ்வாய் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் எல்லோரையும் அனுசரித்து செல்லவும்.

வீடு நிலம் வாங்கி விற்கும் தொழில் தொழில் சிறப்படையும். புதன் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் எந்த பிரச்சினைகளிலும் தலையிட வேண்டாம். குரு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பேச்சினில் இனிமை அதிகரிக்கும். சுக்கிரன் நான்காமிடத்தில் இருக்கிறார் புதிய வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும்.

சனி உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் இருக்கிறார் வெளியூர் பயணம் வெற்றியடையும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பாவுக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

கேது உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் புத்தியில் கலக்கம் உண்டாகும். பெண்களின் மனதில் தைரியம் கூடும். மாணவர்களின் திறமை பளிச்சிடும். தேர்வில் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள். ராசியான நாட்கள் புதன், வியாழன். ராசியான எண்கள் 3, 6.

விருச்சிகம்

சூரியன் உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் அரசு வண்டி வாகன யோகம் உண்டாகும். சந்திரன் சஞ்சாரம் வாரம் முழுவதும் சாதகமாக உள்ளது. செவ்வாய் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களுடன் சச்சரவு உண்டாகலாம். புதன் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கமிஷன் புரோக்கரேஜ் தொழில் விருத்தியடையும்.

குரு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் மகிழ்ச்சி குடியேறும். சுக்கிரன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் சிறு உல்லாசப் பயணம் செல்வீர்கள். சனி உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் சந்த்தோஷம் அதிகரிக்கும்.

ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் யாரிடமும் விதண்டாவாதம் செய்யாதீர்கள். கேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும். பெண்களுக்கு வேலைப்பளு கூடும். மாணவர்களின் மனதில் தெம்பும் உற்சாகமும் கூடும். ராசியான நாட்கள் செவ்வாய், வெள்ளி, ராசியான எண்கள் 5,9.

தனுசு

சூரியன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் தொழில் முறை பயணம் உண்டாகும். சந்திரன் சஞ்சாரம் வாரம் முழுவதும் சாதகமாக உள்ளது. மனதில் அமைதி குடியேறும் நிம்மதி பிறக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உறவினர்களின் வருகை அதிகரிக்கும். புதன் நான்காமிடத்தில் இருக்கிறார் கல்வியில் மேன்மை நிலை உண்டாகும்.

குரு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் ஆன்மீக திருப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தொழில் லாபம் அதிகரிக்கும். சனி உங்களின் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் மந்த நிலை உண்டாகும் உடல் உழைப்பினால் வேலைப்பளு அதிகரிக்கும்.

சுக்கிரன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் ஆடம்பர பொருட்களின் சேர்க்கை இல்லத்தில் அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் அக்கம்பக்கத்தினரால் நன்மை கிடைக்கும் கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உடலில் அசதி அதிகரிக்கும். பெண்களின் மனதில் உற்சாகம் பிறக்கும். மாணவர்கள் கல்வியில் அக்கறை செலுத்த வேண்டும். படித்து எழுதி பார்ப்பது நல்லது. ராசியான நாட்கள் செவ்வாய், சனி ராசியான எண்கள் 5, 7.

மகரம்

சூரியன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் மூலம் பண வரவு அதிகரிக்கும். சந்திரன் சஞ்சாரம் இந்த வாரம் முழுவதும் சாதகமாக உள்ளது. செவ்வாய் உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வீடு வாங்கும் யோகம் உண்டாகும்.

புதன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் படிப்பில் கவனம் அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் லாபம் அதிகரிக்கும். சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும்.

சனி உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வெளியூர் பயணம் உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் மனதில் தைரியம் அதிகரிக்கும்.

கேது உங்கள் ஜென்ம ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வங்கி முதலீடுகள் அதிகரிக்கும். விரைய சனி காலம் என்பதால் பெண்கள் உடல் நலனில் அக்கறை காட்டவும். மாணவர்கள் தேர்வு நேரத்தில் வீண் பொழுது போக்குகளில் கவனம் செலுத்த வேண்டாம். ராசியான நாட்கள் வியாழன், சனி. ராசியான எண்கள் 3,8.

கும்பம்

சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் பூர்வீக சொத்துக்களில் இருந்து பங்கு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் உதவி கிடைக்கும்.

சந்திரன் சஞ்சாரம் சாதகமாக உள்ளதால் மனதில் தெளிவும் அமைதியும் பிறக்கும். செவ்வாய் மூன்றாமிடத்தில் இருக்கிறார். ரியல் எஸ்டேட் தொழில் சிறப்படையும். புதன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் பேச்சில் வசீகரம் அதிகரிக்கும். பேச்சிற்கு மதிப்பு கிடைக்கும். அப்பாவின் வழியில் வருமானம் கிடைக்கும்.

குரு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் வங்கி தொழில் சிறப்படையும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வீட்டிற்கு ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் எல்லா செயல்களும் வெற்றிகரமாக நிறைவேறும்.

ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பொழுதுபோக்கு விஷயங்களில் கவனம் செல்லும். கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பெண்கள் தங்களின் மனதில் உள்ள குறைகளை வெளியாரிடத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டாம் வீண் பிரச்சினை வரும். ராசியான நாட்கள் புதன், வெள்ளி, ராசியான எண்கள் 5,9.

மீனம்

சூரியன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளிடம் கவனம் தேவை, வரிகளை கட்டிவிடுவது நல்லது. சந்திரன் சஞ்சாரம் வார துவக்கத்தில் சாதகமாக இல்லை.

மனதில் கலக்கம் ஏற்படும் அமைதி காக்கவும். செவ்வாய் இரண்டாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களால் பதவி உயர்வு கிடைக்கும். புதன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் ஒப்பந்தத் தொழில் சிறப்படையும். குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.

சுக்கிரன் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் வாழ்க்கைத்துணையினால் லாபம் அதிகரிக்கும்.

சனி உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா செயல்களிலும் வெற்றி கிடைக்கும். ராகு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வாகனங்களை பராமரிப்பு செய்து சரி செய்து வைத்துக் கொள்வது நல்லது. கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா செயல்களும் எளிமையாக நிறைவேறும்.

பெண்கள் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. ராசியான நாட்கள் ஞாயிறு, புதன். ராசியான எண்கள் 9,6.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்