2019 புதன் பெயர்ச்சி: 12 ராசிகளில் யாருக்கு அதிர்ஷ்டம்

Report Print Deepthi Deepthi in ஜோதிடம்

சிறந்த அறிவாற்றலுக்கும், ஞானத்திற்கும் அதிபதியாகிய புதன் பகவான் கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதியில் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகியிருக்கிறார்.

புதனின் பெயர்ச்சி முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் புதன் கிரகம் ஒரு மனிதனின் உடல், மனதில் தாக்கத்தை ஏற்படுத்த வல்லது. அப்பெயர்ச்சியினால் 12 ராசியினருக்கும் ஏற்படும் பலன்களை இங்கு காணலாம்.

மேஷம்: மேஷ ராசிக்கு 12 ஆம் இடத்திற்கு பெயர்ச்சியடைந்ததால் புதன் பெயர்ச்சியடைந்திருப்பதால் நெருங்கிய உறவுகள் சிலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ செலவுகள் ஏற்படும்.வியாபாரங்களில் பெரும் லாபமில்லையென்றாலும் இருக்கும் வருவாய்க்கு குறைவேற்படாது. பிரிந்திருக்கும் தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். வெளிநாடுகளுக்கு செல்லும் யோகமுண்டாகும். பணவிவகாரங்களில் எச்சரிக்கை அவசியம்.

ரிஷபம்: ரிஷப ராசிக்கு 11 ஆம் வீட்டிற்கு புதன் பெயர்ச்சியடைந்திருப்பதால் புதிதாகத் தொடங்கிய தொழில் வியாபாரங்களில் நல்ல லாபம் கிடைக்கும். விரும்பிய இடங்களில் பணிமாற்றம் கிடைக்கும். பெண்களுக்கு சிறிது உடல்நலக் குறைகள் ஏற்பட்டு நீங்கும். குழந்தை இல்லாதோருக்கு குழந்தைப் பேறு கிட்டும்.

மிதுனம்: மிதுன ராசிக்கு 10 ஆம் வீடான மீன ராசிக்கு இந்த ராசிக்காரர்களின் சிந்தனை மற்றும் செயல் திறன் அதிகரிக்கும். பணப்பற்றாக்குறை ஏற்படும். உங்கள் எதிரிகளால் உங்களுக்கு தொல்லைகள் ஏற்படும். குடும்பத்திலும் பிரச்சனைகள் உருவாகும். கலைத் தொழிலில் உள்ளவர்களுக்கு வெளியூர் மற்றும் வெளிநாட்டு பயணங்களால் நன்மைகள் ஏற்படும். சிறிய உடல்நல பாதிப்புகள் ஏற்படும்

கடகம்: கடக ராசிக்கு புதன் 9 ஆம் வீடான மீன ராசிக்கு பெயர்ச்சியாகியிருப்பதால் மற்றவர்களிடம் பேசும் போது வார்த்தைகளில் கவனம் தேவை. பொன், பொருள் சேர்க்கையுண்டாகும். வாகனங்கள் இயக்கும் போது கவனம் தேவை. வாங்கிய கடன்களனைத்தும் வட்டியுடன் கட்டி கடனைத் தீர்ப்பீர்கள். அரசியலிலுள்ளோர் எதிலும் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். தொலைதூரப் பயணங்களால் நன்மைகள் ஏற்படும்.

சிம்மம்: சிம்ம ராசிக்கு புதன் 8 ஆம் வீடான மகர ராசியில் இருப்பதால் புதிதாக வாழ்க்கைக்கு தேவையான பொருட்களை வாங்குவார்கள். திடீர் பணவருவாய் கிடைக்கும். சொத்துக்களை வாங்கும் யோகம் உண்டாகும். மாணவர்கள் தாங்கள் விரும்பிய கல்வியில் சேர்வார்கள். பெண்களுக்கு நல்ல வரன்கள் அமைந்து திருமணம் நடக்கும். உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பெண்களுக்கு மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடக்கும். குழந்தைகளால் பெருமையடைவீர்கள்.

கன்னி: கன்னி ராசியின் அதிபதியாகிய புதன் இந்த ராசிக்கு 7 ஆம் இடத்தில் அமர்வதால் வருமானத்திற்கு குறைவிருக்காது. உடலில் புதியதொரு உற்சாகம் ஏற்படும். ஈடுபடும் அனைத்து செயல்களிலும் வெற்றி பெறுவீர்கள். பிரச்சனைகள் ஏற்படாமலிருக்க வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். மாணவர்கள் கல்வியில் கவனமுடன் படித்தால் மட்டுமே தேர்வில் வெற்றி பெற முடியும். உடல்நலம் நன்றாக இருக்கும்.

துலாம்: துலாம் ராசிக்கு 6 நோய் மற்றும் கடன் ஏற்படும். அதே நேரத்தில் அக்கடனை தீர்ப்பதற்கான வருவாயும் கிடைக்கும். பேசும் வார்த்தைகளில் கவனம் கொண்டால் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கலாம். கலைத்தொழிலில் உள்ளவர்களுக்கு பணமும் புகழும் கிடைக்கும். உடல்நலம் பாதிப்பால் சிறிய மருத்துவச் செலவுகள் ஏற்படும்.

விருச்சகம்: விருச்சிக ராசிக்கு 5 ஆம் இடமான மீன ராசியில் புதன் பெயர்ச்சியாகியிருப்பதால் புதன் இருப்பதால் விவசாயிகள் லாபமடைவார்கள்.உங்கள் சொந்தங்கள் நண்பர்கள் மூலம் உங்களுக்கு வருவாய் ஏற்படும். பணிபுரிவோருக்கு ஊதிய உயர்வுடன் பணிமாறுதல் கிடைக்கும். அரசியலில் இருப்போர்களுக்கு பதவிகள் கிடைக்கும்.சிறிய மருத்துவச் செலவுகள் ஏற்படும்.

தனுசு: தனுசு ராசிக்கு 4 ஆம் வீடான மீன ராசியில் புதன் பெயர்ச்சியடைவதால் உறவினர்களால் அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் மனஸ்தாபம் ஏற்படும்.நினைத்த காரியங்களில் பல தடைகளுக்கு பின்பே வெற்றி கிடைக்கும். தொழிலிலோ, வியாபாரத்திலோ லாபத்திற்கு எந்த ஒரு குறையும் இருக்காது. பெண்களுக்கு சிறு உடல் நல பாதிப்புகள் இருக்கும். எல்லா விஷயங்களிலும் சிறிது விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

மகரம்: மகர ராசிக்கு 3 ஆம் வீடான மீன ராசிக்கு புதன் பெயர்ச்சியடைந்திருப்பதால் போதிய பண வருவாய் கிடைக்கும்.விவசாயிகளுக்கு நல்ல லாபமுண்டாகும். உங்களுக்கு மக்களிடம் செல்வாக்கு ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். உடல்நலம் சீராக இருக்கும். சிறிது கடன்கள் ஏற்பட்டாலும் அக்கடன்களை விரைவிலேயே கட்டி தீர்த்துவிடுவீர்கள்.

கும்பம்: கும்ப ராசிக்கு புதன் 2 ஆம் இடத்திற்கு பெயர்ச்சியடைந்திருப்பதால் உங்களுக்கோ உங்களின் நெருங்கிய உறவுகளுக்கோ ஆரோக்கிய குறைபாடு ஏற்படும். கொடுக்கல் வாங்கல் விடயங்களில் இழுப்பரியான நிலை நீடிக்கும். உறவுகளின் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்று மகிழ்வீர்கள்.

மீனம்: மீன ராசியிலேயே புதன் பெயர்ச்சியடைந்திருப்பதால் உங்களுக்கு வெளிநபர்களிடம் மதிப்பு கூடும். உடலில் சிறு ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்பட்டு நீங்கும். நீங்கள் நினைத்தக் காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் குழந்தைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும் பெண்களுக்கு சிறந்த இடத்தில் திருமணம் நிகழும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்