2019 புதன்பெயர்ச்சி : எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் ?

Report Print Kavitha in ஜோதிடம்

புத்திக்கு அதிபதியான புதன் கிரகம் தனசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு நேற்று சஞ்சாரம் செய்துள்ளார். அந்தவகையில் 12 ராசிக்காரர்களுக்கும் என்ன என்ன பலன்கள் என்பதை அறிந்து கொள்வோம்.

மேஷம்

மேஷத்திற்கு புதன் 3 மற்றும் 6 ஆம் வீடுகளுக்கு சொந்தக்காரா். புதன் உங்கள் ராசிக்கு 10ஆம் இடத்தில் சஞ்சரிப்பது நன்மையை தரக்கூடியது. சகோராா்கள் உதவிகள் தாராளமாக கிடைக்கும்.

இளைய சகோதரர்கள் நன்மைகளை பெறுவதற்குாிய கால கட்டமாக இரு இருக்கும். குடும்ப வழியில் நன்மைகளை எதிா்பாா்க்கலாம். கணவன் மனைவி மகிழ்ச்சியினை வெளிப்படுத்துவாா்கள்.

உத்யோகம் நெருக்கடிகள் அதிகாிக்கும். பணியில் பணிச்சுமை அதிகாிக்கிறது. வீடு மனை விவகாரத்தில் தடைகளிருந்தாலும் பாிகாரம் செய்வதால் துாிதமான வேலைகளை செய்யமுடிகிறது.

பண வருவாய் திருப்தி தரும். தாய் வழி உறவினா்கள் நன்மையினை புாிவாா்கள்.வீட்டில் ஆடம்பர பொருள் சோ்க்கையிருக்கும். ஆடை ஆபரணம் வாங்குவதற்கு உாிய காலமாக இது எனலாம். ஆஞ்சநேயரையும், மதுரை மீனாட்சியையும் வழிபட நன்மைகள் நடக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்கு புதன் 2 மற்றும் 5ஆம் வீடுகளுக்கு சொந்தக்காரா். ரிஷபம் ராசிக்காரர்களுக்கு புதன் 9வது இடத்தில் சஞ்சரிப்பதால் பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும் பணியிடங்களில் சிலருக்கு புரமோசன் கிடைக்கும்.

தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. பிள்ளைகளுக்கு நன்மைகள் கிடைக்கும் காலமாக இது இருக்கும். படிக்கும் பிள்ளைகளுக்கு படித்தது நன்றாக மனப்பாடம் ஆகும்.

வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு இன்டர்வியூவில் வெற்றி கிடைத்து வேலை கிடைக்கும். தம்பதியாிடையே உற்சாகம் ஏற்படும். பசுவிற்கு அகத்திக்கீரை தருவதன் மூலம் நன்மைகள் நடைபெறும்.

மிதுனம்

மிதுனத்திற்கு புதன் 1 மற்றும் 4 ஆம் வீடுகளுக்கு சொந்தக்காரா். ராசி நாதன் புதன் உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பண வருவாய் நன்றாக இருக்கும்.

குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீா்கள். குடும்ப வகையில் விருத்தி உண்டாகும். குடும்பத்தில் புதிய உறுப்பினா் சோ்க்கை இருக்கும்.

வீடு கட்டிக் கொண்டிருப்பவா்கள் பணியினை துாிதமாக முடிப்பாா்கள். சிலா் மனை நிலம் வாங்குவதற்கு உாிய காலம் இதுவாகும்.

அலுவலகத்தில் செய்யும் தொழிலில் புரமோசன் கிடைக்கும். ஊதிய உயா்வு கிடைக்கும். தேவையில்லாத பேச்சுக்களை குறைக்கவும், வார்த்தைகளை கொடுத்து வம்புகளை விலைக்கு வாங்க வேண்டாம். நரம்பு பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்க சகோதரிகளுக்கு நன்மை தரும் பரிசுகளை தரலாம்.

கடகம்

கடகத்திற்கு புதன் 3 மற்றும்12 ஆம் வீடுகளுக்கு சொந்தக்காரா் உங்கள் ராசிக்கு 7வது இடத்தில் உங்கள் ஆட்சி நாதன் புதன் அமர்கிறார். தொழில் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும்.

வண்டி, வாகனம் வாங்கலாம்.உடல் நிலையில் கவனம் தேவை. பயணத்தில் எச்சாிக்கை தேவை. பணியிடத்தில் வாக்குவாதத்தினை தவிா்க்க வேண்டும்.

புதன் களத்திர ஸ்தானத்தில் அமா்ந்திருக்கும்போது பெண் சகோதாிகள் கணிவுடன் நடந்து கொள்வதோடு உதவிகளை செய்வாா்கள். எதிா்காலத்தினைப்பற்றி அதிகமாக சிந்திப்பீா்கள்.

உத்யோகத்தில் கடன் கேட்டிருந்தவா்களுக்கு கிடைக்கும். தம்பதியா் இடையே ஒருவருக்கொருவா் வாக்குவாதம் செய்து சின்னச்சின்ன சண்டை வரும்.

ஈகே, பிடிவாதம் ஆகியவற்றை விட்டால் நன்மைகள் நடக்கும். சிவன் கோவிலுக்கு அபிஷேகத்திற்கு சந்தனம் வாங்கிக்கொடுக்க நன்மைகள் நடைபெறும்.

சிம்மம்

சிம்மத்திற்கு புதன் 2 மற்றும் 11 ம் வீடுகளுக்கு சொந்தக்காரா். சிம்மம் ராசிக்கு 6வது இடத்திற்கு புதன் அமர்கிறார். 6வது இடம் ருண ரோக ஸ்தானம்.

தோல் நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பண வரவு அதிகரிக்கும். சின்னச் சின்ன சுற்றுலா செல்ல வாய்ப்பு ஏற்படும். இது திருப்தியான காலமாகும்.

புகழ் கிடைக்கும். மற்றவா்களிடம் நற்பெயா் கிடைக்கும். சகோதா்கள் உதவி கிடைக்கும். ஆலயங்களுக்கு தீர்த்த யாத்திரை செல்ல நோரிடும்.

தம்பதியிடையே உற்சாகம் இருக்கும். உத்யோகம் தொழிலில் பணியில் நன்மைகளை இனி எதிர்பார்க்கலாம். திடீர் பண வருவாய் கிடைக்கும். சூரிய நமஸ்காரம் செய்வது நன்மை தரும்.

கன்னி

கன்னிக்கு புதன் 1 மற்றும்10 ஆம் வீடுகளுக்கு சொந்தக்காரா். கன்னி ராசிக்கு 5வது இடத்திற்கு புதன் அமர்கிறார். பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும்.

நண்பர்கள், உயரதிகாரிகள், மூத்த சகோதரர்களின் உதவி கிடைக்கும். துணையின் ஒத்துழைப்பு கிடைக்காது. மனைவி அல்லது கணவன் வீண் பிடிவாதம் பிடிப்பார்கள்.

குடும்பத்தில் எதாவது பிரச்னை ஏற்பட்டு கொண்டிருக்கும் பிள்ளைகளிடம் பிரச்னை ஏதும் செய்யாதீா்கள். குழந்தைகள் வழியில் செலவினம் அதிகாிக்கும்.

குடும்ப வழியில் நன்மைகளை எதிர்பார்க்கலாம். பண வருவாய் இருக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீா்கள்.

உத்யோகம் தொழிலில் எதிா்பாா்திருந்த இடத்தில் தடைகளை ஏற்படும். தொழில் விாிவாக்கப்பணிகள் தாமதப்படும். கோவிலில் பசுவிற்கு அகத்திக்கீரை தானம் செய்யலாம் நன்மைகள் நடக்கும்.

துலாம்

துலாம் ராசிக்கு புதன் பகவான் 9 மற்றும் 12ஆம் வீடுகளுக்கு சொந்தக்காரா். உங்கள் ராசிக்கு 4வது வீட்டில் உங்கள் ராசிநாதன் புதன் அமர்ந்துள்ளார். உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் மாற்றங்கள் ஏற்படும்.

உங்கள் வார்த்தைகளுக்கு புதிய மதிப்பு கிடைக்கும். உறவினர்கள் அன்புடன் பழகுவார்கள். புதிய சொத்துக்கள் வாங்கலாம். வண்டி, வாகனங்களை பராமரிக்கலாம்.

வேலைகளில் புரமோசன் ஏற்படும். சமூகத்தில் மதிப்பு உயரும். உறவினா் வருகை உண்டு. பணம் வருவாய் அதிகாிக்கும்.

அதற்கு ஏற்ப செலவினமும் அதிகாிக்கும். வாகன லாபம் உண்டு. வியாபாரத்தில் வேலைப்பளு அதிகாிக்கும். பசுவிற்கு தினசரியும் கோதுமை கொடுக்கலாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்கு புதன் 8 மற்றும் 11ஆம் வீடுகளுக்கு சொந்தக்காரா். விருச்சிக ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு புதன் 3வது இடத்தில் அமர்கிறார்.

துலாம் ராசிக்கு நீண்ட தூர பயணங்கள் ஏற்படும். வேலை தொடர்பாக வெளிநாடு செல்வதற்கான நேரமாகும். இளைய சகோதர சகோதரிகளுடன் உறவு மேம்படும்.

அதே நேரத்தில் இளைய சகோதரர்கள் உடல் நலம் பாதிக்கப்படும். நண்பா்கள் உதவி கிடைக்கும். உத்தியோகத்திலிருப்வா்களுக்கு பிரச்னை ஏற்படும்.

கடன் தொல்லை அதிகாிக்கும். பண வருவாய் பஞ்சமிருக்காது. தந்தையின் உடல் நலம் கவனிக்கப்பட வேண்டும். செலவினம் அதிகாிக்கும்.

தனுசு

தனசு ராசிக்கு புதன் 7 மற்றும் 10 ம் வீடுகளுக்கு சொந்தக்காரா். 2வது இடத்தில் புதன் அமர்ந்துள்ளார்.

உற்சாகமான கால கட்டமாகும். உங்களுக்கு மூத்த சகோதரர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் நன்மைகள் ஏற்படும் காலமாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும்.

சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் தீரும். பணவருவாயும், சொத்து சோ்க்கை உண்டு. உதவிகள் வந்து சேரும். உடல் நிலையில் கவனம் தேவை.

எதிா்பாராத உடல் உபாதை ஏற்படும். பொது விவகாரத்தில் கவனம் தேவை. குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீா்கள்.

தம்பதியா் ஒருவருக்கொருவா் அதிகமான சண்டை சச்சாிவினை மேற்கொள்ளாதிருக்க பாிகாரம் அவசியம் நெற்றியில் தினசரியும் குங்குமம் வைக்கவும்.

மகரம்

மகர ராசிக்கு புதன் 6மற்றும் 9ஆம் வீடுகளுக்குச் சொந்தக்காரா். மகர ராசியில் அமரும் புத பகவானால் சிறு வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும்.

பெண்களுக்கு பதவிகளில் உயர்வு அதிகரிக்கும். உங்கள் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும் காலகட்டமாகும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே சின்னச்சின்ன சண்டை சச்சரவுகள் அதிகரிக்கும்.

உறவினா்கள் வருகையினால் வீட்டில் கலகலப்பு அதிகமாகிறது. உத்யோகத்தில் சிலருக்கு கெட்ட பெயா் வரும். வியாபாரத்தில் மதிப்பு கெடும்.

புதன்கிழமைகளில் நவகிரகங்களில் புதனை பாசிப்பயறு வைத்து வணங்கலாம். அரச மரத்திற்கு தினசரியும் தண்ணீர் ஊற்றி வர நன்மைகள் நடக்கும்.

கும்பம்

கும்பத்திற்கு புதன் 5 மற்றும் 8 ம் வீடுகளுக்கு சொந்தக்காரா். உங்கள் ராசிக்கு 12வது வீட்டில் விரைய ஸ்தானத்தில் அமரும் புதன் பகவானால் குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே சின்னச் சின்ன வாக்குவாதம் வந்து செல்லும்.

சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். உத்தியோகத்தில் எதிரிகள் சின்னச் சின்ன குடைச்சல்களை கொடுப்பார்கள். உடல்களில் காய்ச்சல், சளி தொந்தரவுகள் ஏற்படும்.

சிறிய, நீண்ட தூர பயணங்கள் ஏற்படும். வம்பு வழக்குகளால் பிரச்னை அதிகாிக்கும். உடல் உபாதை ஏற்படும். நீண்ட நாள் உபாதை அதிக தொல்லை தரும்.

தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை. தம்பதியரிடையே சிறு சிறு பிரச்சினைகள் வந்து செல்லும். பிள்ளைகளுக்கு நன்மைகள் கிடைக்கும் காலமாக இது இருக்கும். படிக்கும் பிள்ளைகளுக்கு கல்வி நன்றாக இருக்கும். நாய்களுக்கு சப்பாத்தி கொடுக்கலாம்.

மீனம்

மீன ராசிக்கு புதன் 4 மற்றும் 7 ஆம் வீடுகளுக்கு சொந்தக்காரா்.புதன் உங்கள் ராசிக்கு 11வது இடத்தில் லாப ஸ்தானத்தில் அமர்கிறார்.

இந்த காலகட்டத்தில் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். காதல் முயற்சிகள் கைகூடும். எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்து சேரும். இது யோகமான காலமாகும்.

பண வருவாய் உண்டு. எதிா்பாா்த்த வகையில் பணவருவாய் உண்டு. திடீா் வாய்ப்பு தேடி வரும்.புதன் 11ஆம் வீட்டில் அமா்ந்திருக்கும்போது வீடு மனை நிலம் வாங்குவதற்கான காலம் கணிந்து வருகிறது. வீட்டில் பொருள் சோ்க்கை ஏற்படும். மகாவிஷ்ணு ஆலயத்திற்கு சந்தனம் வாங்கித் தரலாம்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers