இந்த வாரம் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு எச்சரிக்கை: வார ராசிபலன்கள்

Report Print Deepthi Deepthi in ஜோதிடம்

இந்த வாரம் எந்த எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் என்பதை பார்ப்போம்

மேஷம்

தடங்கல்களை தடுக்க அவசரத்தை தவிர்த்தால் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைப்பதுடன் பல வகைகளிலும் தனலாபம் உண்டாகும். ஆயினும் அதற்கேற்ற செலவுகளும் காத்திருக்கும். வேலை பளுவால் குடும்பத்தினரோடு செலவழிக்கும் நேரம் குறையும். உடன்பிறந்தோருக்கு உதவி செய்ய நேரிடும்.

திடீர் பிரயாண வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் எதிர்கால வாழ்விற்காக புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த முயற்சிப்பீர்கள். கலைத்துறையினர் கூடுதல் செலவிற்கு ஆளாவார்கள். மாணவர்கள் நண்பர்களுக்காக பொறுப்பேற்று செய்யும் காரியங்களால் சிரமத்தினை சந்திக்க நேரிடும். வாழ்க்கைத்துணையின் நலனில் அக்கறை கூடும். தகப்பனார் வழி சொத்துகளில் பிரச்னைகள் தொடரும். தொழிலில் அதிக பட்ச உழைப்பினை வெளிப்படுத்தி நல்ல ஆதாயம் காண்பீர்கள். நற்பலன்களைத் தரும் வாரம் இது.

ரிஷபம்

நினைப்பது ஒன்றும், நடப்பது ஒன்றாகவும் ஆகி விரக்தி ஏற்படும். செலவுகள் கூடும். குடும்பத்தில் சலசலப்பு உண்டாகும். உங்கள் பேச்சு உங்களுக்கு எதிராகவே திரும்பக்கூடும். தகவல் தொடர்பு சாதனங்களால் செலவுகள் கூடும். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகள் பெரிதாகும் வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் ஞாபக மறதியால் சிரமப்படுவதை தவிர்க்க பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை எழுதிப்பார்ப்பது நல்லது.

வாகனங்களால் செலவுகள் அதிகரிக்கும். மருத்துவ செலவுகளை தவிர்க்க உடல்நிலையில் சிறப்பு கவனம் தேவை. வாழ்க்கைத்துணையின் செயல்பாடுகள் திருப்தி தரும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பர். கையிருப்பில் பணம் வைத்துக்கொள்ளாமல் இருத்தல் நலம். கலைத்துறையினர் எதிர்பார்த்த உதவி வந்து சேரும். வியாபாரிகள் அகலக்கால் வைக்காமல் இருப்பது நல்லது. எதிர்நீச்சல் போட்டு சமாளிக்க வேண்டிய வாரம் இது.

மிதுனம்

எதிர்பாராத திடீர் செலவுகள் இருக்கும். வரவு சீராக இருக்கும். அடுத்தவர்களின் குடும்ப பிரச்னைக்கு சமரசம் காண வேண்டிய சூழ்நிலை உருவாகும். தொலைதொடர்பு சாதனங்களால் செலவுகள் கூடும். எதிர்பாராத சிறிது தூர பிரயாணங்கள் செய்ய நேரிடும். வாகனங்கள், பிரயாணங்கள் நன்மை தரும்.

மாணவர்கள் நண்பர்களின் துணையோடு கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். பிள்ளைகளின் செயல்கள் பெருமை தரும். எதிர்கால சிந்தனை மனதை அதிகம் ஆக்கிரமிக்கும். முழங்கால், மூட்டு வலியால் அவதி இருக்கும். உணவுக்கட்டுப்பாடு அவசியம் தேவை. வாழ்க்கைத்துணையின் வார்த்தைகள் உங்களுக்கு புதிய உத்வேகம் தரும். தொழில் ரீதியான உங்களது எண்ணங்களுக்கு செயல் வடிவம் தரும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். கலைத்துறையினர் நெருக்கடியான சூழலை சந்திப்பர். விடாமுயற்சியால் சாதிக்கும் வாரம் இது.

கடகம்

நண்பர்களின் உதவியோடு பல காரியங்களை செய்து முடிப்பீர்கள். அரசுத் தரப்பு உதவிகள் கிடைக்கும். வரவு சிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடன் பிறந்தோருக்கு உதவி செய்வீர்கள். புதிய நண்பர்கள் சேருவார்கள். வாகனங்களால் தொந்தரவுகள் தோன்றும். மாணவர்களின் சிந்தனைகளில் வேகத்துடன் விவேகமும் இணையும். பிள்ளைகளின் வாழ்வில் சுபநிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை செய்வீர்கள்

தொற்று நோய்களை தவிர்க்க உடல்நிலையில் தீவிர கவனம் செலுத்துவது நல்லது. கூடுதல் பணிசுமையால் வாழ்க்கைத்துணையோடு செலவழிக்கும் நேரம் குறையும். தர்ம காரியங்களில் மிகுந்த ஈடுபாடு கொள்வீர்கள். தொலைதூர ஆன்மீகப் பிரயாணங்கள் செல்லும் முன்னேற்பாடுகளில் இறங்க நேரிடும். கூட்டுத்தொழில் சிறப்பாக செல்லும். கலைத்துறையினரின் கற்பனைகள் செயல்வடிவம் பெறும். நன்மை தரும் வாரம் இது.

சிம்மம்

டென்ஷனால் உடல்நிலை பாதிக்கப்படலாம். கொடுக்கல் வாங்கலை தவிா்க்கவும். வரவை விட செலவுகள் அதிகரிக்கும். உடன்பிறந்தோருக்கு உதவி செய்ய நேரிடும். நேரடியாக செய்ய முடியாத செயல்களை தகவல் தொடர்பு சாதனங்களால் செய்து முடிப்பீர்கள். மாணவர்கள் நண்பர்களோடு இணைந்து படித்தால் நன்மை கூடும். வாகனங்கள் மற்றும் பிரயாணங்களை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது.

உடல்நிலையை சீராக வைத்துக்கொள்ள தியானம், யோகா பயிற்சிகள் நல்லது. வாழ்க்கைத்துணையின் வார்த்தைகளுக்கு மிகுந்த மதிப்பளித்து செயல்படுவீர்கள். சுபசெலவுகள் கூடும். பூர்வீக சொத்துகளில் பிரச்னைகள் தோன்றும். தொழில்நிலை சிறப்பாக இருக்கும். வியாபாரம் சிறப்பாக இருந்தாலும் உடனடியாக வசூல் செய்ய இயலாது போகும். கலைத்துறையினர் நிதானத்துடன் காத்திருப்பது நல்லது. சரிசம பலன்களை உண்டாக்கும் வாரம் இது.

கன்னி

மனதில் தோன்றுவதை உடனுக்குடன் செய்து முடிக்க நினைப்பீர்கள். நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. எதிலும் மற்றவர்களின் அங்கீகாரம் தேவை என்றும், சுயகவுரவம் வேண்டும் என்று நினைப்பீர்கள். வரவில் குறைவிருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சி தொடரும். உங்கள் சிந்தனைக்கு செயல்வடிவம் தர முயற்சிப்பீர்கள். தொலைதொடர்பு சாதனங்கள் மிகுந்த உபயோகமாக இருக்கும்.

வாகனங்கள் ஆதாயம் தரும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். வாழ்க்கைத் துணை உங்களுக்கு மிகுந்த பக்கபலமாக இருப்பார். நண்பர்களின் குடும்பத்தினருக்கு உதவி செய்ய நேரிடும். பிள்ளைகளால் செலவுகள் கூடும். தகப்பனார் வழி உறவினர்களின் துணையுடன் பூர்வீக சொத்துகளில் ஆதாயம் காண்பீர்கள். கலைத்துறையினர் புதிய முயற்சிகளில் ஈடுபட கால நேரம் சாதகமாக இருக்கும். உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்விற்கான வாய்ப்புகள் உருவாகும். நற்பலன்களைத் தரும் வாரம் இது.

துலாம்

எடுத்த செயல்கள் எதிலும் நற்பலன்கள் கிடைக்கும். நீங்கள் தேவை என்று நினைக்கும் பொருட்கள் வந்து சேரும். குழப்பம் இருந்தாலும் சுகமான வாழ்வியல் நிலையில் குறை நேராது. வரவு சிறக்கும். அடுத்தவர் மனம் புண்படாதபடி பேசுவது நல்லது. குடும்ப சலசலப்பினை போக்க முயல்வீர்கள். உடன் பிறந்தோருக்கு உதவ வேண்டிய நிலை உண்டாகும். வாகனங்கள், பிரயாணங்கள் ஆதாயம் தரும்.

மாணவர்கள் வகுப்பில் முன்னிலை பெறுவர். புதிய வீடு கட்டும் முயற்சியில் உள்ளோருக்கு நேரம் சாதகமாக இருக்கும். பிள்ளைகளால் பெருமை கொள்ளத்தக்க சம்பவங்கள் நிகழும். சர்க்கரை வியாதிக்காரர்கள் உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. தம்பதியருக்குள் கருத்து வேறுபாடு தோன்றி மறையும். தொழில் நிலை சிறக்கும். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் உருவாகும். கலைத்துறையினர் தனலாபம் காண்பார்கள். நற்பலன்களைத் தரும் வாரம் இது.

விருச்சிகம்

நினைத்த செயல்களில் மிகுந்த தைரியத்துடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு உருவாகும். பொருளாதார நிலை உயரும். எதிர்கால நன்மை கருதி புதிய சேமிப்பில் ஈடுபட ஏற்ற நேரமாக இருக்கும். ருசியான உணவுகளில் ஆர்வம் கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மாணவர்களின் மதிநுட்பம் கூடும். உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வண்டி, வாகனங்கள் மற்றும் பிரயாணங்களால் ஆதாயம் காண்பீர்கள். பிள்ளைகளின் செயல்கள் பெருமை கொள்ளத்தக்க வகையில் இருக்கும்.

வாழ்க்கைத்துணையின் வார்த்தைகளுக்கு மிகுந்த மதிப்பளித்து செயல்படுவீர்கள். கூட்டுத்தொழில் செய்பவர்கள் தனலாபம் காண்பார்கள். உத்யோகஸ்தர்கள் தற்காலிக இடமாற்றத்தினை சந்திக்க நேரிடும். சுயதொழில் செய்பவர்கள் கூடுதல் அலைச்சலை சந்திக்க நேரிடும். நன்மை தரும் வாரம் இது.

தனுசு

எடுத்த செயல்களில் வெற்றி பெற எதிலும் அவசரப்படாமல் அமைதி காப்பது நல்லது. முன்பின் தெரியாதவர்களிடம் கூடுதல் கவனம் நல்லது. வரவு சிறக்கும். செலவுகளைக் குறைத்து சேமிப்பில் ஈடுபடுவது நல்லது. சொத்து சம்பந்தமான பிரச்னைகளுக்கு தீர்வு காணும் நேரமிது. புதிய வீடு கட்டும் முயற்சியில் உள்ளோருக்கு சாதகமான நேரமாக இருக்கும். வாகனங்களை புதிதாக மாற்றும் வாய்ப்பும் உண்டு. உறவினர்களின் வருகை குடும்பத்தில் சந்தோஷத்தை உண்டாக்கும்.

தொலைதூரப் பிரயாணத்தின் போது சக பயணியிடம் கவனம் தேவை. மாணவர்கள் அறிவியல் பாடங்களில் முன்னேற்றம் காண்பர். பிள்ளைகளின் வழியில் கூடுதல் செலவுகள் இருக்கும். வாழ்க்கைத்துணை உறுதுணையாக செயல்படுவார். கலைத்துறையினர் நிதானித்துச் செயல்படுவது நல்லது. தொழில்நிலை சிறக்கும். வியாபாரிகள் தனலாபம் காண்பர். நற்பலனைத் தரும் வாரம் இது.

மகரம்

தன்னம்பிக்கை கூடும். கடுமையாக உழைத்து எடுத்த காரியங்களை உடனுக்குடன் முடிக்க நினைப்பீர்கள். திட்டமிட்ட செயல்களில் தடை இருக்காது. வரவு திருப்தி தரும். குடும்பத்தில் அமைதி நிலவும். பேச்சில் நிதானம் இருக்கும். உடன்பிறந்தோரால் நன்மை உண்டாகும். தகவல் தொடர்பு சாதனங்களால் நன்மை காண்பீர்கள். வாகனங்கள் ஆதாயம் தரும். மாணவர்களின் எழுத்து வேகம் அதிகரிக்கும்.

பிள்ளைகளின் வழியில் எதிர்பாராத செலவுகளை சந்திக்க நேரிடும். நரம்புத்தளர்ச்சி நோயால் அவதிப்படுபவர்கள் உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வாழ்க்கைத்துணைக்கு உறுதுணையாக செயல்படுவீர்கள். எதிர்பாராத செலவுகளால் சற்று சிரமப்பட வேண்டி இருக்கும். உத்யோக ரீதியாக நற்பெயர் கிடைக்கும். சுயதொழில் செய்பவர்களுக்கு உடனடி லாபம் உண்டு. கலைத்துறையினர் வெற்றி பெறுவர். நற்பலனைத் தரும் வாரம் இது.

கும்பம்

நினைப்பது ஒன்றும், நடப்பது ஒன்றுமாகி வருத்தத்திற்கு ஆளாவீர்கள். வரவு சிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. பொருளாதார வளர்ச்சி உண்டு. இருந்தாலும் ஏதோ ஒரு மனக்குறை இருக்கும். முன்பின் தெரியாதவர்களிடம் எச்சரிக்கை நல்லது. தொலை தொடர்பு சாதனங்களால் இழப்பு உண்டாகும். வாகனங்கள், பிரயாணங்களில் ஆதாயம் காண்பீர்கள். மாணவர்களின் கல்வித்தரம் உயரும்.

பிள்ளைகளின் மூலமாக எதிர்பாராத செலவுகளுக்கு ஆட்பட நேரிடும். மன விரக்தி பேச்சில் வெளிப்படும். வாழ்க்கைத்துணையின் கருத்துக்களோடு ஒத்துப்போவது நன்மை தரும். சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் ஏதேனும் ஒரு வகையில் செலவுகள் காத்திருக்கும். அயல்நாடு செல்லக் காத்திருப்போருக்கு நல்ல தகவல் வந்து சேரும். கலைத்துறையினர் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் மிகுந்த கவனத்துடன் பணிபுரிவது அவசியம். அலைச்சல் கூடினாலும் நன்மை தரும் வாரமே.

மீனம்

எடுத்த காரியங்களில் மிகுந்த தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றிகாண்பீர்கள். தொழிலில் ஸ்திரத்தன்மையை உருவாக்க பாடுபடுவீர்கள். உங்கள் உழைப்பிற்கேற்ற லாபம் கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்ற முக்கியத்துவம் அளிப்பீர்கள். மாற்று மொழி பேசுவோரால் நன்மை உண்டாகும். தகவல் தொடர்பு சாதனங்கள் நன்மை தரும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். திடீர் பிரயாணங்களுக்கான வாய்ப்புகள் உண்டு.

பிள்ளைகளின் எதிர்காலம் கருதி புதிய முயற்சிகளில் இறங்குவீர்கள். இரத்தக் கொதிப்பு நோய் உள்ளவர்களுக்கு உடல்நிலையில் கூடுதல் கவனம் நல்லது. வாழ்க்கைதுணை உங்களுக்கு மிகுந்த பக்கபலமாக செயல்படுவார். தொழில் ரீதியான அலைச்சல் கூடும். உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்விற்கான வாய்ப்புகள் உண்டு. கலைத்துறையினருக்கு நம்பிக்கை கூடும். தயாளகுணம் வெளிப்படும் வகையிலான சம்பவங்கள் நடைபெறும். நற்பெயரைத் தரும் வாரம் இது.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers