எதில் எச்சரிக்கை? 2019 ஆம் ஆண்டு பலன்கள்: 12 நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும்

Report Print Deepthi Deepthi in ஜோதிடம்

பூனர்பூசம் முதல் கேட்டை வரை 2019 ஆம் ஆண்டிற்காக நட்சத்திர பலன்கள்

புனர்பூச நட்சத்திர அன்பர்களே!

எப்போதும் நிதானமாகக் காணப்படும் புனர்பூச நட்சத்திர அன்பர்களே! இந்த புத்தாண்டில் நட்சத்ராதிபதி குருவின் பாதசார சஞ்சாரத்தால் எதிர்ப்புகள் விலகும்.

பணவரவு அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆடை ஆபரண சேர்க்கை இருக்கும். காரியத் தடை, வீண் அலைச்சல் ஏற்படலாம். கெட்ட கனவுகள் வரலாம். திடீர் கோபம் ஏற்படும். எதிர்பாலினத்தாரிடம் கவனமாகப் பழகுவது அவசியம்.

தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆர்டர் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். பழைய பாக்கிகள் வசூலாவது மனதிருப்தியை தரும். உத்யோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணிச்சுமையால் டென்ஷனுடன் காணப்படுவார்கள். நிலுவையில் உள்ள தொகைகள் வந்து சேரலாம்.

குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே சின்னச் சின்ன கருத்து வேற்றுமைகள் வரும். பிள்ளைகளின் செயல்பாடுகள் ஆறுதலைத் தரும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பெண்களுக்கு அடுத்தவர்களின் செயல்களால் கோபம் உண்டாகலாம். கொடுத்த கடனை திரும்பப் பெறுவதில் முழுமூச்சுடன் செயல்படுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு சில நற்பலன்களை வந்தாலும் மனக்கஷ்டமும் அவ்வப்போது உண்டாகும். எதை பற்றியும் கவலைப்படாமல் தீர ஆலோசித்து எதையும் செய்வது நல்லது. கலைத்துறையினர் பைனான்ஸ் போன்றவற்றில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. மாணவர்கள் கவனத்தை சிதற விடாமல் வகுப்பை கவனிப்பது அவசியம். கூடுதலாக பாடங்களை படிக்க வேண்டி இருக்கும்.

நன்மை:

கொடுத்த கடன் வசூலாகும்.

எச்சரிக்கை:

அலைச்சல் அதிகரிக்கும்.

பூச நட்சத்திர அன்பர்களே!

எங்கும் நல்லது நடக்க வேண்டும் என்ற குறிக்கோளை உடைய பூச நட்சத்திர அன்பர்களே! நீங்கள் நன்மைக்காக போராடத் தயங்காதவர்.

இந்த புத்தாண்டில் மனக்கலக்கம் உண்டாகும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் மற்றவர்களின் விமர்சனத்திற்கு ஆளாக வேண்டி வரும். எதிர்த்து செயல்பட்டவர்கள் அடங்கி விடுவார்கள். பணவரவு எதிர்பார்த்த படி இருக்கும். எதிர்பாலினத்தாரின் நட்பும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும்.

விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரிடலாம். வீண்செலவு, உடல்நல பாதிப்பு ஏற்படலாம். கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களின் ஆதரவு நீடிக்கும். தொழில் விரிவாக்கம் பற்றிய எண்ணம் உண்டாகும். உத்யோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவி அல்லது கூடுதல் பொறுப்புகள் கிடைக்கப் பெறுவார்கள்.

குடும்பத்தில் இருப்பவர்களின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். அவர்கள் உங்களை மதிப்பது மனதுக்கு இதமளிக்கும். பெண்களுக்கு மனதில் வீண்குழப்பம் உண்டாகும்.

உங்களிடம் ஆலோசனை கேட்டு உங்களை நாடி சிலர் வரக்கூடும். கலைத்துறையினருக்கு கௌரவம் உயரும். விரும்பிய பதவி கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு தீவிர முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்கள் திறமைக்கு ஏற்ற புகழ் பாராட்டு கிடைக்காமல் போகலாம். பொறுப்புகள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் நல்ல பலன் தரும். சக மாணவர் களின் நட்பும் கிடைக்கும்.

நன்மை:

குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

எச்சரிக்கை:

எதிலும் கூடுதல் உழைப்பு தேவைப்படும்.

ஆயில்ய நட்சத்திர அன்பர்களே

மற்றவர்களின் நலனுக்காக தன் நலனை பாராமல் உழைக்கும் ஆயில்ய நட்சத்திர அன்பர்களே, இந்த புத்தாண்டில் எதிர்பார்த்தபடி காரியங்கள் நடந்து முடியும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வீண் வாக்கு வாதத்தால் இருந்த பகை நீங்கும். பயணத்தில் தடங்கல், வீண் செலவு அகலும். பண வரவு இருக்கும். நன்மைகள் உண்டாகும். வாகன யோகம் உண்டாகும்.

பெரியோர்களின் உதவி கிடைக்கும். மனதில் தைரியம் உண்டாகும். எதிலும் தயக்கமோ, பயமோ ஏற்படாது. தொழில், வியாபாரம் நன்றாக நடக்கும். வாக்கு வன்மையால் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன் தரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவிகள் கூடுதல் பொறுப்பு கிடைக்கப்பெறுவார்கள். அலுவலக பணிகளை வெற்றிகரமாக செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். நீண்ட நாட்களாக இருந்த குடும்பம் தொடர்பான பிரச்னைகள் சாதகமாக முடியும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகள் கல்விக்காக பாடுபட வேண்டி இருக்கும். பெண்களுக்கு பயணங்களால் செலவு ஏற்படும்.

துணிச்சலுடன் எதிலும் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள். கலைத்துறையினருக்கு முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள் வாகனங்கள் பயன்படுத்தும் போது கவனம் தேவை. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். விளையாட்டில் கவனம் செலுத்துவீர்கள்.

நன்மை:

பணம் வசூலாகும்.

எச்சரிக்கை:

காரிய தாமதம் உண்டாகும்.

மக நட்சத்திர அன்பர்களே

தன்னைத் தானே உயர்த்திக் கொள்வதுடன் பிறரும் உயர பாடுபடும் மக நட்சத்திர அன்பர்களே, இந்த புத்தாண்டில் மனோதைரியம் கூடும். எல்லா வகையிலும் சுகம் உண்டாகும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பண வரத்து திருப்திகரமாக இருக்கும். வயிற்றுக் கோளாறு உண்டாகலாம். தூக்கம் குறையும். எதிர் பாலினத்தாரின் நட்பு கிடைக்கும்.

அரசாங்கம் தொடர்பான பணிகள் சாதகமாக நடக்கும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த மெத்தனப் போக்கு மாறும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் சுமாரான பலன் தரும். உத்யோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டபடி பணிகளை முடிக்க முடியாமல் தாமதம் ஏற்படலாம். சக ஊழியர்களுடன் கவனமாகப் பழகுவது நல்லது.

குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டாலும் அதை வளரவிடாமல் சமாளித்து விடுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இடைவெளி காணப்படும். பிள்ளைகள் புத்தி சாதூர்யமாக நடந்து கொள்வது மன மகிழ்ச்சியை தரும். பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

கலைத்துறையில் இருப்பவர்கள் கைக்கு எட்டிய அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு பலன்கள் நன்மை தீமை என கலந்து கிடைத்தாலும் சிறப்பாக இருக்கும். செலவு அதிகரிக்கும். மாணவர்கள் திட்டமிட்டபடி பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண் பெறுவீர்கள். உயர்கல்விக்காக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன்தரும்.

நன்மை:

முயற்சிகள் வெற்றியைத் தரும்.

எச்சரிக்கை:

பணிகளில் தாமதம் ஏற்படும்.

பூர நட்சத்திர அன்பர்களே

ரகசியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதால் பல காரியத் தடைகளை சந்திக்கும் பூர நட்சத்திர அன்பர்களே, இந்த புத்தாண்டில் வீண் வாக்குவாதங்கள், அதன்மூலம் பிறரிடத்தில் பகை போன்றவை உண்டாகலாம். மனோதைரியம் அதிகரிக்கும். செலவுக்கு ஏற்ற வரவும் இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்களது பொருட்களை கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது.

வாகனங்களால் செலவு ஏற்படும். தந்தையுடன் கருத்து வேற்றுமை வரலாம். சொத்துக்களை அடைவதில் தாமதம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் லாபம் கிடைப்பது குறையலாம். சரக்குகளை விற்பதில் மிகவும் வேகம் காட்டுவீர்கள். தொழில், வியாபாரம் விரிவாக்கம் செய்வது தொடர்பாக முக்கிய முடிவு எடுப்பீர்கள்.

உத்யோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி வரலாம். சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும்.

குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் சேரும். பெண்கள் நம்பிக்கையுடன் காரியங்களில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.

மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் தேவை. கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் வந்து குவியும். அரசியல்வாதிகள் எந்த வாக்குறுதியையும் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். சக மாணவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும்.

நன்மை:

மனோ தைரியம் அதிகரிக்கும்.

எச்சரிக்கை:

வேலை தொடர்பான அலைச்சல் இருக்கும்.

உத்திர நட்சத்திர அன்பர்களே

புத்தி சாதூர்யத்துடன் காரியங்களை செய்து மற்றவர்களின் பாராட்டைப் பெறும் உத்திர நட்சத்திர அன்பர்களே, இந்த புத்தாண்டில் எதிர்பார்த்த பணம் வரலாம். எதிர்ப்புகள் விலகும். ஆரோக்கியக் குறைபாடு ஏற்படும். எந்தக் காரியம் செய்தாலும் தாமதம் உண்டாகும். எல்லாவற்றிலும் ஒரு பயம் ஏற்படும்.

புதியநபர்களின் நட்பு உண்டாகும். வீடு வாகனம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் மெத்தனமான போக்கு காணப்படும். வியாபாரம் தொடர்பான பயணங்களை திட்டமிட்டபடி மேற்கொள்ள முடியாத நிலை உண்டாகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலைகளால் டென்ஷன் உண்டாகலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்களால் நிம்மதிக் குறைவு உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டுப் பேசுவதன் மூலம் முக்கியமான காரியங்களில் நல்ல முடிவு எடுக்க முடியும். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும்.

பெண்கள் வாக்குவாதங்கள் அடுத்தவர் பற்றிய விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகள் வீண் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபடுவீர்கள். கலைத்துறையினர் வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை அதிகரிக்கும். திடமான மனதுடன் படிப்பது வெற்றியை தரும்.

நன்மை:

சக மனிதர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

எச்சரிக்கை:

குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தை தவிர்க்கவும்.

ஹஸ்த நட்சத்திர அன்பர்களே

எல்லோரிடமும் அனுசரித்துப் பேசும் குணமுடைய ஹஸ்த நட்சத்திர அன்பர்களே, இந்த புத்தாண்டில் பேச்சின் இனிமை சாதூர்யத்தின் மூலம் காரிய வெற்றி காண்பீர்கள். பணவரத்து கூடும். சாமர்த்தியமான செயல்களால் மதிப்பும், அந்தஸ்தும் உயரும். மனக்கவலை நீங்கும்படியான சூழ்நிலை இருக்கும்.

உற்சாகம் உண்டாகும். பயணத்தின் போது ஏற்பட்ட தடங்கல் நீங்கும். தொழில், வியாபாரம் லாபகரமாக நடக்கும். போட்டிகள் விலகும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிகளை விரைந்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய வேலை தொடர்பாக மேற்கொள்ளும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்துச் செல்வார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்னைகள் தீரும். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். பெண்களுக்கு எதிர்பாராத பணவரவு இருக்கும். மனக்கவலை நீங்கி உற்சாகம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

அரசியல்வாதிகளுக்கு வரவு நன்றாக இருக்கும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மாணவர்களுக்கு கல்வி யில் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

நன்மை:

காரிய வெற்றி உண்டாகும்.

எச்சரிக்கை:

பயணத்தின் போது கவனம் தேவை.

சித்திரை நட்சத்திர அன்பர்களே

நேரத்திற்கு ஏற்றாற்போல் குணத்தை மாற்றிக்கொண்டு சாமர்த்தியமாக செயல்படும் சித்திரை நட்சத்திர அன்பர்களே, இந்த புத்தாண்டில் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. ஏதேனும் மனக்கஷ்டம் உண்டாகும். வீண்செலவு ஏற்படும். உடல்சோர்வு வரலாம். மனோ தைரியம் கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

முயற்சிகள் சாதகமான பலன் தரும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமடைய பாடுபடுவீர்கள். எதிர்பார்த்த ஆர்டர்கள் வரலாம். சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி நிமித்தமாக அலைய வேண்டி இருக்கும்.

குடும்பத்தில் நிம்மதி குறையும் படியான சூழ்நிலை வரலாம். கணவன், மனைவிக்கிடையே வாக்கு வாதங்களை தவிர்த்து விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது அவர்களின் வெற்றிக்கு உதவும். பெண்களுக்கு மனோதைரியம் கூடினாலும் பழைய சம்பவங்களின் நினைவால் மனமகிழ்ச்சி குறையும்.

கலைத்துறையினருக்கு வீண் பயணம் ஏற்படலாம். அரசியல்வாதிகளுக்கு மேலிடத்துடன் இருந்து வந்த தொய்வு நிலை நீங்கும். பாராட்டு கிடைக்கலாம். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் அக்கறை தேவை. திட்டமிட்டபடி செயல்பட முடியாதபடி தடங்கல்கள் ஏற்படலாம்.

நன்மை:

மற்றவர்களிடம் அன்பாக இருப்பீர்கள்.

எச்சரிக்கை:

உடல் சோர்வு வரலாம்.

சுவாதி நட்சத்திர அன்பர்களே

உயர்வு, தாழ்வு என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் எடுத்த காரியத்தை முடிப்பதே குறிக்கோளாக உடைய சுவாதி நட்சத்திர அன்பர்களே, இந்த புத்தாண்டில் பணவரத்து இருக்கும். மனக்கவலை நீங்கும். எடுத்த காரியத்தை திருப்தியுடன் செய்து முடிப்பீர்கள். சாமர்த்தியமான பேச்சு இக்கட்டான நேரங்களில் கைகொடுக்கும். எதிலும் கவனம் தேவை.

புதிய நண்பர்களின் சேர்க்கையும் அவர்களால் உதவியும் கிடைக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான பணிகள் தடையின்றி நடக்கும். புதிய ஆர்டர் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன் தரும். வியாபார போட்டிகள் குறையும். உத்யோகத்தில் இருப்பவர்கள் பணிச்சுமை குறைந்து மனநிம்மதி அடைவார்கள். குடும்பத்தில் குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும்.

கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் வழியில் நிம்மதி கிடைக்கும். பெண்களுக்கு காரியங்களில் ஏற்பட்ட தடைநீங்கி திருப்தியாக நடந்து முடியும். சாதூர்யமான பேச்சின் மூலம் பிரச்னைகள் தீரும். பணவரத்து திருப்தி தரும். அரசியல்வாதிகள் திட்டமிட்ட எந்த பணிகளும் துரித கதியில் நடைபெறும். கலைத்துறையினருக்கு தொழிலில் இருந்த பிரச்னைகள் அகலும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் இருந்த போட்டிகள் குறையும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.

நன்மை:

மனக்கவலை நீங்கும்.

எச்சரிக்கை:

வாக்குவாதத்தை தவிர்க்க வேண்டும்.

விசாக நட்சத்திர அன்பர்களே

தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் உடைய விசாக நட்சத்திர அன்பர்களே, இந்த புத்தாண்டில் பணத்தேவை அதிகரிக்கும். வீண்செலவு. மனஅமைதி பாதித்தல் ஆகியவை இருக்கும். எனினும் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாய்க்கு ருசியாக உணவு உண்பீர்கள்.

காரிய தாமதம், உடல் சோர்வு, வீண்பகை போன்றவை ஏற்படலாம். உங்களைக் கண்டு அடுத்தவர் பொறாமை படக்கூடும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்துப் பேசுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வதன் மூலம் நன்மை கிடைக்கப் பெறுவார்கள்.

குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்களால் டென்ஷன் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே கோபமான பேச்சை விடுத்து அமைதியாக எதையும் எடுத்துச் சொல்வது நல்லது. பிள்ளைகளின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். பெண்களுக்கு மன அமைதி பாதிக்கும் படியான சூழ்நிலை இருக்கும். திடீர் செலவு உண்டாகும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.

கலைத்துறையினருக்கு திறமைக்கேற்ற வாய்ப்புகள் கிடைக்கும். சூரியனின் சஞ்சாரத்தால் அரசியல்வாதிகளுக்கு பெயர், புகழ், கௌரவம் யாவும் தேடி வரும். உங்கள் பேச்சிற்கு மதிப்பும், மரியாதையும் உயரும். மாணவர்கள் பாடங்களை மிகவும் கவனமாகப் படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற உதவும். சக மாணவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

நன்மை:

விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள்.

எச்சரிக்கை:

மன அமைதி குறையும்.

அனுஷ நட்சத்திர அன்பர்களே

தர்மகுணமும், இரக்க சிந்தனையும் உடைய அனுஷ நட்சத்திர அன்பர்களே, இந்த புத்தாண்டில் எல்லாவற்றிலும் லாபம் கிடைக்கும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதன் மூலம் நன்மதிப்பு பெறுவீர்கள். உங்களுடன் கருத்து வேற்றுமை ஏற்பட்டு பிரிந்து சென்றவர்கள்

மீண்டும் உங்களை நாடி வருவார்கள். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் வரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகப் பணிகளை சிரமமின்றி செய்து முடிப்பார்கள். பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே சுமுக உறவு இருக்கும். பிள்ளைகளுக்கு தேவையான ஆடை அணிகலன்கள் வாங்கி கொடுப்பீர்கள்.

பெண்களுக்கு கருத்து வேற்றுமையால் பிரிந்து சென்றவர்கள் மனம் மாறி மீண்டும் திரும்பி வருவார்கள். பணவரத்து திருப்தி தரும். காரிய அனுகூலம் உண்டாகும். கலைத்துறையினருக்கு பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புகழ் கிடைக்கும்.

சக கலைஞர்கள் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம். அரசியல்வாதிகளுக்கு தங்கள் இருப்பை மேலிடத்தில் சொல்வதற்கு ஏற்ற காலகட்டம். புதிய உக்திகளைக் கையாண்டு அசத்துவீர்கள். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவு கூடும். கல்வியில் முன்னேற வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு பாடங்களை படிப்பீர்கள்.

நன்மை:

உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

எச்சரிக்கை:

செலவு கூடும்.

கேட்டை நட்சத்திர அன்பர்களே

ஆடை ஆபரணத்தையும் அலங்காரத்தையும் விரும்பும் கேட்டை நட்சத்திர அன்பர்களே, இந்த புத்தாண்டில் காரிய அனுகூலம் உண்டாகும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலுடன் செயல்பட்டு எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு இருக்கும். இடமாற்றம்,வெளியூர் பயணங்கள், அலைச்சல் ஆகியவை இருக்கும். தொழில், வியாபாரம் போன்றவை முன்னேற்றப் பாதையில் செல்லும்.

அரசு தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கட்டளை இடுகின்ற பதவி கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்கிறவர்களுக்கு வேலை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். யாரிடமும் எதிர்த்துப் பேசி விரோதத்தை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நன்மை தரும்.

கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரிவு நீங்கி ஒன்று சேர்வார்கள். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய எண்ணம் மேலோங்கும். பெண்கள் எந்த செயலையும் தைரியமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத திடீர் செலவுகள் வீண் அலைச்சல் உண்டாகலாம்.

கலைத்துறையினர் கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். புத்திசாதூர்யம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு பாராட்டு கிடைக்கும். மனக்கவலை ஏற்படும். உடல்சோர்வு உண்டாகும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கஷ்டமான பாடங்களையும் மனம் துவளாமல் படிப்பீர்கள்.

நன்மை:

தொழில் சாதகமாக இருக்கும்.

எச்சரிக்கை:

எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.

- Dina Karan

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers