நாளை 2019 ஆம் ஆண்டு பிறக்கும் ராசி எது தெரியுமா?

Report Print Deepthi Deepthi in ஜோதிடம்

நிகழும் விளம்பி வருடம் மார்கழி மாதம் 17-ம் தேதி செவ்வாய்க்கிழமை தட்சிணாயனம் ஹேமந்த ருதுவில், கிருஷ்ண பட்சம், தசமி திதியில் சமநோக்குக் கொண்ட சுவாதி நட்சத்திரம், துலாம் ராசி, கன்னி லக்னம், அமிர்தயோக நன்னாளில் நள்ளிரவு 12 மணிக்கு 2019ம் ஆண்டு பிறக்கிறது

சுவாதி நட்சத்திரத்தின் ராசி துலாம். இதன் ராசிநாதன் சுக்கிரன் என்பதால், குடும்பத்திலும் சமூகச் சூழலிலும் சுபிட்சம் நிலவும். பிரிந்திருந்த குடும்பங்கள் ஒன்று சேரும்.

நவநாகரிக வாழ்க்கையின் உந்துதலால் தனிக்குடித்தனம் போன பலரும் கூட்டுக்குடும்ப வாழ்க்கையின் அருமையைத் தேடி வருவார்கள். உலகமெங்கும் கூட்டுக்குடும்ப வாழ்க்கைக்கு மரியாதை கிடைக்கும்.

சம்பளத்துக்கு இருந்தவர்களில் சிலர், `நிறைய நிறுவனங்கள் மாறிவிட்டோம் சொந்தமாகத் தொழில் செய்வோம்' என முடிவெடுத்துத் தனியாக அலுவலகம் திறப்பார்கள். கல்வியில் நிறைய மாற்றங்கள் வரத்தொடங்கும்.

துலாம் ராசியில் ஆண்டு பிறப்பதால், சுயமாகத் தொழில் செய்யலாம் என்று நினைப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகும்.

சொந்த வீடு அமையாத பலருக்கும், இந்த ஆண்டு சொந்த வீடு அமையும். வாகனங்களின் பெருக்கம் அபரிமிதமாக இருக்கும்,

நீண்ட நாள்களாகத் திருமணம் தள்ளிப் போயிருந்தவர்களுக்கு இந்த ஆண்டு திருமணம் நல்லவிதமாக நடைபெறும். வேலை கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தவர்களுக்கு வேலை கிடைக்கும்.

இது பொதுப்பலன்கள் ஆகும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்