இந்த ஐந்து ராசிக்காரர்களும் பிறவியிலேயே அதிர்ஷ்டசாலிகளாம்! இதில் உங்கள் ராசி இருக்கா?

Report Print Kavitha in ஜோதிடம்

பொதுவாக சிலருக்கு பிறக்கும்போதே ராஜ யோக வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கும். பிறக்கும்போதே தலைமைப் பண்புடன் பிறந்து உலகையே ஆட்டிப் படைக்கும் தலைவர்களாக திகழ்வார்கள். அப்படிப்பட்ட ராசிகளைப் பற்றி இப்போது காணலாம்.

மேஷம்

மேஷம் என்பது ராசிகளில் முதல் இடத்தைப் பிடிக்கும் ராசி . ஆகவே இதற்கு நிச்சயம் இந்த பதிவில் இடம் உண்டு. சூரியன் அதிபதியாக இருக்கும் மேஷ ராசியினர் மிகவும் தன்னம்பிக்கை வாய்ந்தவர்கள். ஒரு குழுவில் செயல் திறன் மிக்கவர்கள். மாற்றத்தை பெரிதும் நம்புகிறவர்கள், இந்த மாற்றத்தைக் கொண்டுவர அதிகம் முயற்சிப்பவர்களும் இவர்களே. மிக அதிக ஆற்றலை தன் வசம் கொண்டுள்ளவர்கள் மேஷ ராசியினர். இந்த உலகின் மிக அதிக படைப்பாற்றல் கொண்டவர்களும் இவர்கள் தான். தன் திட்டத்தை வெற்றியாக மாற்ற தேவையான முயற்சிகள் அனைத்தையும் மேற்கொள்பவர்கள் மேஷ ராசியினர்.

ரிஷபம்

மிகவும் பிடிவாதக்காரர்கள், மற்றும் எதையும் சுருக்கமாக செய்பவர்கள் ரிஷப ராசியினர். அவர்களின் யோசனைகள் மட்டுமே சிறந்தவை என்ற கருத்தைக் கொண்டவர்கள். அவர்கள் தங்களை மிகவும் கண்டிப்பான தலைவர்களாக காட்டிக் கொள்வார்கள். அவர்களிடம் மற்றவர்களுக்கு பயம் உண்டாகும் விதத்தில் நடந்து கொள்வார்கள். ரிஷப ராசியினர் மேல் நாம் வைக்கும் பொறுப்புடன் கூடிய நம்பிக்கை என்றும் வீண் போகாது. இந்த நம்பிக்கை மட்டுமே அவர்களை ஊக்குவிக்கும் காரணியாகவும் அமைகிறது.

அதனால், சில நேரங்களில் சமூக அங்கீகாரம் கிடைக்க வெவ்ண்டும் என்ற எண்ணத்தால், ஒரு தலைவராக அவர்களின் திறமையை நிரூபிக்க வேண்டிய அவசியம் உண்டாகிறது. மற்றவர்களின் உழைப்பை பாராட்டுவதும் அவர்களை ஊக்குவிப்பதும் இவர்களுக்கு இயல்பான குணம் என்பதால், அவர்களுக்கு கீழே பணி புரிபவரின் இதயங்களை எளிதில் வெல்லக் கூடிய தகுதியும் இவர்களுக்கு இருக்கும்.

சிம்மம்

தலைமைத் தகுதிக்கான போட்டியில் சிங்கம் இல்லாமல் இருக்க முடியுமா? பிறக்கும்போதே மற்றவர்களை அடக்கி ஆளும் தன்மை கொண்ட சிம்ம ராசியினர், ஒரு வலிமையான சுபாவம் கொண்டவர்கள். மற்றவர்கள் ஆதிக்கம் செலுத்துவதை ஏற்றுக் கொள்ளும் மனம் இல்லாதவர்கள் மற்றும் தன்னை மற்றவர்கள் கட்டுப்படுத்தக் கூடாது என்ற எண்ணம் கொண்டவர்கள் இவர்கள். தனக்குத்தானே மிகவும் கண்டிப்பாக செயல்படும் இவர்கள், சில நேரம் மிகவும் அடாவடியாக ஒழுங்கீனமாக செயல்படுவதற்கான காரணமும் இதுவே.

இவர்களுடைய பிடிவாத குணம் மற்றும் வலிமையான மன உறுதி ஆகிய இரண்டும் இவர்களை திறமையான தலைவராக நிலை நிறுத்த உதவுகிறது. இவர்கள் முன்னே எவ்வளவு கடும் பிரச்சனைகள் இருந்தாலும், அவற்றை மோதி மிதித்து தலைமைப் பொறுப்பேற்கும் தகுதி இவர்களுக்கு உண்டு.

துலாம்

ராசிகளிலேயே மிகவும் ஒழுக்கமான ராசியாக கருதப்படுவது துலாம். ஆகவே இவர்களுக்கு தலைமைக் குணம் தோன்றுவது இயல்பானது தான். இவர்கள் எதையும் மிகச் சரியாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். எந்த ஒரு செயலைப் பற்றியும் மிகப் பெரிய அபிப்ராயம் இவர்களுக்கு ஏற்படுவதில்லை. அதே நேரம், ஒவ்வொரு முறை அவர்கள் பேசும்போதும் நிச்சம் அதில் ஒரு கருத்து இருக்கும்.

பொதுவாக வாழ்க்கையை மிகவும் அமைதியாக அழகாக நடத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் துலாம் ராசியினர் என்பதால், வேலை பார்க்கும் இடத்தில் மற்றவர்களுக்கு சௌகரியமாக நடக்கும் சுபாவம் கொண்டவர்கள். எதையும் தொலைநோக்கு பார்வையுடன் அணுகும் தன்மை கொண்ட இவர்கள், தெளிவான திட்டத்தை வகுத்துக் கொள்வதால் மிகச் சிறந்த தலைவராக இருக்கும் வாய்ப்பு இவர்களுக்கு கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியினர் பொதுவாக நேர்மையானவர்கள். இவர்கள் வேலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள். வேலை வேலை என்று ஓடிக் கொண்டே இருப்பவர்கள். சிறந்த வேலையை அவர்கள் எப்போதும் விரும்புவர்கள். அந்த வேலையை சிறந்த வகையில் முடிக்கும்போது உண்டாகும் அந்த மகிழ்ச்சி அவர்களை இன்னும் கடுமையாக இயங்க வைக்கும்.

சில நேரம் மற்றவர்களிடம் இருந்து புகழ்ச்சி மற்றும் பாராட்டை எதிர்பார்க்கும் இவர்களின் இந்த குணமே அவர்களை இன்னும் சிறப்பாக இயங்க வைத்து ஒரு நல்ல தலைவராக அவர்களை செயல்பட வைக்க உதவும். ஆகவே ஒரு குழுவின் சிறந்த தலைவராக இவர் இருக்க முடியும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்