இந்த ராசிக்கு மட்டும் இன்று சோதனை நாள் தான்!

Report Print Kabilan in ஜோதிடம்

இன்றைய தினம் எந்த ராசிக்காரருக்கு ஒரே சோதனையான நாளாக இருக்க போகிறது என்பது குறித்து இங்கு காண்போம்.

மேஷம்

உறவினர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் குறைந்து ஒற்றுமை மேலோங்கி இருக்கும். கணவன், மனைவிக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் நீங்கும். மாணவர்கள் தங்களுடைய புத்திக்கூர்மையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

ரிஷபம்

பல நாட்களாக இருந்து வந்த சிக்கல்களை அமைதியுடன் தீர்த்து வைப்பீர்கள். சகோதர்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சக பணியாளர்களிடம் நிதானத்துடன் நடந்துகொள்ள வேண்டும். தொழில் ரீதியாக அலைச்சல்கள் ஏற்பட்டாலும், லாபமும் உண்டாகும்.

மிதுனம்

உங்களுடைய வாக்குத் திறமையினால் வெளியிடங்களில் பெருமை உண்டாகும். கடன் பிரச்சனைகள் குறைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான செயல்பாடுகள் நீங்கள் நினைத்தபடி, நல்ல பலன்கள் உண்டாகும்.

கடகம்

உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். எடுத்த காரியத்தை கொஞ்சம் நிதானமாக செய்து முடிக்க வேண்டியது அவசியம். தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்படும். வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

சிம்மம்

ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். நினைத்த முயற்சிகள் நினைத்தபடியே நிறைவேற தொடங்கும். வணிகத்தில் உள்ளவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு வெற்றி உண்டாகும்.

கன்னி

புதிதாக வேலை தேடுபவர்களுக்கு அவர்களது முயற்சியில் நல்ல செய்திகள் வந்து சேரும். அரசு அதிகாரிகளின் மூலம் சாதகமான சூழல்கள் உருவாகும். சகோதர, சகோதரிகளிடம் தேவையில்லாத வாக்குவாதம் உண்டாவதை தவிர்க்க வேண்டும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து கடனுதவிகள் கைக்கு வந்து சேரும்.

துலாம்

உயர் கல்விக்கான முயற்சிகள் சிறந்த பலன்களை தரும். பெற்றோருடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, அன்பு அதிகரிக்கும். கடல் வழி பயணம் மேற்கொள்பவர்களுக்கு பெரும் நன்மைகள் உண்டாகும். வெளிநாட்டு வேலைக்கான முயற்சிகள் ஈடேறும்.

விருச்சிகம்

உடல் ஆரோக்கிய விடயத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். போட்டிகளில் உங்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். பணியில் முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு வீண் கவலைகள் மனதுக்குள் வந்து போகும்.

தனுசு

நண்பர்களுடன் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. வெளியிடத்தின் தொடர்புகளினால் உங்களுக்கு நன்மை உண்டாகும். மனதுக்குள் புதுவிதமான தன்னம்பிக்கை பிறக்கும். கைக்கு வர வேண்டிய பண வரவுகள் வந்து சேரும். வெளியிடத்தின் தொடர்புகளினால் நன்மைகள் உண்டாகும்.

மகரம்

கணவன்-மனைவி கொஞ்சம் அனுசரித்து செல்வது நல்லது. காரியத் தடைகள் நீங்கி, நினைத்த காரியங்கள் வெற்றி அடையும். உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வெளிவட்டாரங்களில் உங்களின் செல்வாக்கு உயர ஆரம்பிக்கும். பணியில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றங்கள் உண்டாகும்.

கும்பம்

திட்டமிட்ட பயணங்களில் சில மாற்றங்கள் நேரிடலாம். நெருக்கமானவர்களிடம் தேவையில்லாத விவாதங்களை தவிர்ப்பது நல்லது. ஆன்மிகத்தில் எண்ணங்கள் மேலோங்கும். உங்களது வேலைகளில் பாராட்டுகளை பெறுவீர்கள்.

மீனம்

புத்திக்கூர்மை வெளிப்படும். பரம்பரை சொத்துக்களால் உங்களுக்கு நன்மைகள் உண்டாகும். தாயின் ஆதரவால் மனம் மகிழ்ச்சியடைவீர்கள். பெரியோர்களின் ஆசீர்வாதங்கள் கிடைக்கும். கால்நடைகளின் மூலமாக நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers