திருமண வாழ்க்கையில் அதிக பிரச்சனையை சந்திக்க போகும் ராசிக்காரர் யார் தெரியுமா?

Report Print Jayapradha in ஜோதிடம்

12 ராசிக்காரர்களுக்கும் அவர்களின் காதல் மற்றும் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஒரு ஆசை இருக்கும்.

அந்த வகையில் ஜோதிடத்தின் படி ஒவ்வொரு ராசிகாரர்களும் திருமண வாழ்க்கையில் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க போகிறார்கள் என்பதைப் பற்றி பார்ப்போம்.

மேஷம்

மேஷ ராசிகாரர்கள் அவர்களின் விருப்பப்படியே அனித்தும் நடக்க வேண்டும் என்று நினைப்பீர்கள் ஆனால் சிலசமயம் உங்கள் துணை உங்கள் விருப்பத்துக்கு ஏற்றவாறு நடக்க சிரமப்படுவார்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிகாரர்கள் அவர்களின் துணையை புரிந்துகொள்ள நிறைய முறை முயற்சிப்பீர்கள் ஆனால் அதனை வெளிப்படுத்துவதில் தோற்றுவிடுவீர்கள். சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு சமரசம் செய்துகொள்வது என்பது உங்களால் முடியாத ஒன்று.

மிதுனம்

மிதுன ராசிகாரர்கள் அவர்களின் தேவையில் அதிகம் கவனம் செலுத்துவதால் துணையின் தேவைகளையும், இருப்பையும் மறந்துவிடுவீர்கள். மேலும் இவர்கள் வழக்கமான வாழ்க்கையை வாழ விரும்பாதவர்கள் அதேநேரம் மிகவும் வசதியாக இருப்பதையும் விரும்பமாட்டார்கள்.

கடகம்

கடக ராசிகாரர்கள் அவர்களின் துணை உங்களை விரும்ப வேண்டும் என்று நினைப்பீர்கள், அதுநடக்காத போது அது உங்களை கஷ்டப்படுத்தலாம். உங்களால் அதிக கவனத்தை கையாள முடியாது, அதுபோன்ற சமயங்களில் நீங்கள் சிரமப்படுவீர்கள்.

சிம்மம்

சிம்ம ராசிகாரர்கள் துணைக்கு தரும் முக்கியத்துவத்தை விட அவர்கள் உங்களுக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்க வேண்டுமென்று நினைப்பீர்கள். மேலும் உங்கள் துணையால் ஏற்படும் சிறிய காயத்தை கூட தாங்கிக்கொள்ள மாட்டிர்கள்.

கன்னி

கன்னி ராசிகாரர்களின் தேர்வுகள் எப்பொழுதும் சிறப்பானதாக இருக்கும் ஆனால் உங்கள் துணையின் தேர்வுகள் அப்படி இல்லாதபோது நிச்சயம் அது பிரச்சினைகளை உருவாக்கும்.அதேசமயம் உங்கள் மனதில் தாங்க முடியாத அளவிற்கு கவலைகளை சுமப்பீர்கள்.

துலாம்

தூலம் ராசிகாரர்கள் அவர்களின் துணை உங்களை புறக்கணித்தாலும் அவர்கள் மீதான அன்பில் எந்த மாற்றமும் இருக்காது. மேலும் நீங்கள் மற்றவர்களை பாதுகாக்கவே பூமியில் பிறந்துளீர்கள் என்ற எண்ணம் இருக்கும்.

விருச்சிகம்

ஒருமுறை உங்கள் துணையை ஏமாற்றிவிட்டால் அதற்கு பின் உங்களுக்கு இரண்டாம் வாய்ப்பு கிடைக்காது. துணையின் உணர்வுகளை பற்றி நீங்கள் பேச விரும்பமாட்டிர்கள்.

தனுசு

தனுசு ராசிகாரர்கள் உறவில் இருபுறமும் தவறுகள் இருக்கலாம் ஆனால் நீங்கள் ஒருபோதும் இறங்கி செல்ல மாட்டிர்கள். மேலும் நீங்கள் துணையுடன் இருப்பதை விட தனியாக இருப்பது உங்களுக்கு மகிழ்ச்சியை தரும்.

மகரம்

மகர ராசிகாரர்கள் சிலசமயம் அவர்களின் சுயமரியாதையை விட்டு கொடுக்கும் அளவிற்கு உறவில் இறங்கி செல்வீர்கள். ஒரு ஆரோக்கியமற்ற உறவில் நீடித்திருக்க நீங்கள் பல சமரசங்களை செய்வீர்கள்.

கும்பம்

கும்ப ராசிகாரர்கள் துணையிடம் இருந்து எப்பொழுதும் ஒரு இடைவெளியை விரும்புவீர்கள் மேலும் நீங்கள் துணையுடன் சண்டை போட்டு கொண்டே இருப்பீர்கள்

மீனம்

மீனம் ராசிகாரர்கள் பெரும்பாலும் தனிமையை விரும்புவீர்கள் அதுவே உங்கள் துணை உங்களை நெருங்குவதை சிரமமாக்கிவிடும்.நீங்கள் துணை உங்களிடம் வெளிப்படையாக இல்லை என்றால் கோபப்படுவீர்கள்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்