ஐப்பசி மாத ராசிபலன்கள்: யாருக்கு அதிர்ஷ்டம்?

Report Print Kavitha in ஜோதிடம்
1374Shares

நீண்ட நாட்களாக மகரம் ராசியில் கேதுவுடன் இணைந்திருந்த செவ்வாய் ஐப்பசி 20ஆம் தேதியன்று கும்பராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.

இந்த கிரகங்களின் கூட்டணி நகர்வு 12 ராசிகாரர்களுக்கும் என்ன பலன்களை அளிக்கப் போகிறது தெரிந்து கொள்வோம்.

மேஷம்

சூரியன் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் அரசாங்கத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத் தொழிலில் மேன்மை நிலை உண்டாகும், அரசாங்க அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் உண்டாகும். செவ்வாய் உங்கள் ராசிக்கு 10ஆம் வீட்டில் இருக்கிறார் வீடு மனை வாங்கி விற்கும் தொழில் சிறப்படையும், அதிகாரப் பதவி கிடைக்கும்.

20ஆம் தேதிக்குப் பின் லாபம் அதிகரிக்கும். புதன் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் கமிஷன் வியாபாரம் விருத்தியாகும். 9ஆம் தேதிக்குப் பிறகு தாய் மாமனால் மனக் கஷ்டம் உண்டாகும்.

குரு உங்கள் ராசிக்கு 8ஆம் இடத்தில் இருக்கிறார் திடீர் பணவரவு கிடைக்கும். சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். சுக்கிரன் ஏழாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் நன்மை ஏற்படும். வாகனங்களை கையாளும் பொழுது கவனமாக இருக்கவும். சனி ராசிக்கு 9ஆம் வீட்டில் இருக்கிறார் வெளியூர், வெளிநாடு செல்லும் யோகம் வரும்.

ராகு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் அம்மாவின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். ஐப்பசி 22,23 சந்திராஷ்டமம்.

ரிஷபம்

சூரியன் உங்கள் ராசியில் ஆறாமிடத்தில் இருக்கிறார் உயர் அதிகாரிகளால் தொல்லை உண்டாகும், அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. செவ்வாய் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும், 20ஆம் தேதிக்குப் பின்னர் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும் புதன் ஆறாமிடத்தில் இருக்கிறார் வியாபாரத்தில் யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.

9ஆம் தேதிக்குப் பிறகு வியாபார வாடிக்கையாளர்களுடன் நல்லுறவு உண்டாகும் கூட்டுத் தொழில் லாபம் அடையும். குரு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் உறவினர்களிடம் நல்லுறவு உண்டாகும், மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். சுக்கிரன் ஆறாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் தொல்லை உண்டாகும், விலை உயர்ந்த பொருட்களை யாருக்கும் இரவல் தர வேண்டாம் கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும்.

சனி உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் இருக்கிறார் திடீர் பண வரவு உண்டாகும் உடல் உழைப்பு அதிகரிக்கும். ராகு மூன்றாமிடத்தில் இருக்கிறார் வீடு மாறும் சூழ்நிலை உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் கடவுள் பக்தி அதிகரிக்கும். ஐப்பசி 24,25,26 சந்திராஷ்டமம்.

மிதுனம்

சூரியன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க வேலை வாய்ப்பு தேர்வுகளில் வெற்றி கிடைக்கும், பிதுரார்ஜித சொத்துக்களில் பங்கு கிடைக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கிறார். வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை, 20ஆம் தேதிக்குப் பின்னர் ஆன்மீக சுற்றுலா அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் புதன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் தரகு கமிஷன் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

9ஆம் தேதிக்குப் பிறகு தாய்மாமனுடன் சச்சரவு உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் பொருளாதார விஷயங்களில் கவனம் தேவை, படிப்பில் மந்த நிலை உண்டாகும். சுக்கிரன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும் வாழ்க்கைத்துணையுடன் சச்சரவு உண்டாகும்.

சனி உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் தொழில் கூட்டாளிகளுடன் நல்லுறவு நீடிக்கும் நண்பர்களின் உதவி கிடைக்கும். ராகு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் வங்கி சேமிப்பு அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் எதிர்பாராத பண வரவு உண்டாகும். ஐப்பசி 26,27,28 சந்திராஷ்டமம்.

கடகம்

சூரியன் நான்காமிடத்தில் இருக்கிறார் அரசாங்க ஒதுக்கீட்டில் வீட்டு கிடைக்கும், புதிதாக வாகனம் வாங்குவீர்கள். செவ்வாய் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களுடன் நல்லுறவு உண்டாகும் 20ஆம் தேதிக்குப் பின்னர் வாகனங்களை கையாளும்பொழுது கவனமாக செயல்படவும். புதன் உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் உயர்கல்வி நிலை சிறப்படையும் தாய் மாமனுடன் சச்சரவு உண்டாகலாம்.

9ஆம் தேதிக்குப் பின்னர் பங்குச்சந்தை வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் பொருளாதார விஷயத்தில் கவனம் தேவை விலை உயர்ந்த பொருட்களை இரவல் தர வேண்டாம். சுக்கிரன் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் இருக்கிறார் விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள் உல்லாசப் பயணம் செல்வீர்கள்.

சனி உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் இருக்கிறார். சனி உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் உடல் உழைப்பு அதிகரிக்கும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் புத்தியில் சலனம் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் இருக்கிறார் நீண்ட தூரம் பிரயாணம் செல்வீர்கள். சந்திராஷ்டமம்: ஐப்பசி 2,3,4 மற்றும் 29.

சிம்மம்

உங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அரசு ஊழியர்களுக்கு பணியிட மாற்றம் உண்டாகும் பக்கத்து ஊருக்கு பயணம் செய்யும் நிலை உண்டாகும்.

செவ்வாய் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் நெருப்பினால் காயம் உண்டாகலாம் 20ஆம் தேதிக்குப் பின்னர் ரியல் எஸ்டேட் வியாபாரம் சிறப்படையும். புதன் உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் படிப்பில் கவனம் அதிகரிக்கும் ஷேர்மார்க்கெட் தொழில் சிறப்படையும். குரு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் சொத்துகளை வாங்குவீர்கள் வாகன யோகம் உண்டாகும்.

சுக்கிரன் உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் உடன் பிறப்புகளுடன் நல்லுறவு உண்டாகும் புதிதாக வாகனம் வாங்குவீர்கள். சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கடவுள் பக்தி அதிகரிக்கும் பூர்வீக சொத்திலிருந்து பண வரவு உண்டாகும். ராகு பன்னிரெண்டாம் இடத்தில் இருக்கிறார் அலைச்சல் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் மனதில் உறுதி உண்டாகும். ஐப்பசி 4,5,6 சந்திராஷ்டமம்.

கன்னி

சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு உண்டாகும் பேச்சில் அதிகாரம் அதிகரிக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு 5ஆம் இடத்தில் இருக்கிறார் பரம்பரை சொத்துக்களிலிருந்து பங்கு கிடைக்கும் 20ஆம் தேதிக்குப் பிறகு சகோதரர்களுடன் சச்சரவு உண்டாகும்.

புதன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் நீண்ட நாட்கள் எதிர்பார்த்திருந்த தகவல் வந்து சேரும் படிப்பில் கவனம் அதிகரிக்கும். 9 ஆம் தேதிக்குப் பின்னர் ஷேர் மார்க்கெட் மூலம் பணம் வரவு அதிகரிக்கும். குரு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும் செல்வச்சேர்க்கை உண்டாகும்.

சுக்கிரன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும் அடிக்கடி வெளியூர் செல்வீர்கள். சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் விவசாயம் செழிப்படையும் புது வாகனம் வாகனம் வாங்குவீர்கள். அம்மாவின் உடல் நலனில் அக்கறை தேவை. ராகு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் காரியங்கள் வெற்றியடையும் கேது உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உல்லாசப் பயணம் செல்வீர்கள். ஐப்பசி 7,8 சந்திராஷ்டமம்.

துலாம்

சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் பதவி உயர்வு உண்டாகும் தலையில் நோய் உண்டாகலாம் கவனமாக இருக்கவும். செவ்வாய் நான்காமிடத்தில் இருக்கிறார் வாகன யோகம் உண்டாகும் முருகன் வழிபாடு நன்மையை உண்டாக்கும். 20ஆம் தேதிக்குப் பிறகு புது வீடு வாங்கலாம். புதன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் பேச்சில் நகைச்சுவை அதிகரிக்கும் நல்ல சுப மங்கல தகவல் வந்து சேரும். குரு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும் செல்வச்சேர்க்கை உண்டாகும்.

சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் வெளியூர் பயணம் செல்வீர்கள் காதில் நோய் உண்டாகலாம் கவனம் தேவை.

ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் முயற்சிகள் எல்லாம் வெற்றியடையும் கேது உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் புது வீடு வாங்கும் யோகம் உண்டாகும். ஐப்பசி 9,10, சந்திராஷ்டமம்.

விருச்சிகம்

சூரியன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாம் வீட்டில் விரைய ஸ்தானத்தில் இருக்கிறார். உத்தியோகத்தில் பணியிடமாற்றம் உண்டாகும் அரசாங்க நிறுவனங்களில் முதலீடுகள் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் மூன்றாமிடத்தில் இருக்கிறார் இடமாற்றம் உண்டாகும் புதிதாக வீடு வாங்குவீர்கள். 20ஆம் தேதிக்குப் பிறகு சிலர் புது வீட்டில் கிரகப்பிரவேசம் செய்வீர்கள்.

வண்டி வாகனம் வாங்குவீர்கள். புதன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் சமயோசிதமாக செயல்படுவீர்கள் பேச்சில் நகைச்சுவை அதிகரிக்கும். 9ஆம் தேதிக்கு மேல் பேச்சில் நகைச்சுவை அதிகரிக்கும்.

குரு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார்மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும் மனதில் நிம்மதி பிறக்கும். சுக்கிரன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும் கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் சிறப்படையும்.

சனி உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்ப வருமானம் அதிகரிக்கும் பேச்சில் கடுமையை குறைத்துக் கொள்ளவும். ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பூர்வீக நிலத்திலிருந்து பண வரவு உண்டாகும் கேது உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் இட மாற்றம் உண்டாகும். ஐப்பசி 11,12 சந்திராஷ்டமம்.

தனுசு

சூரியன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் பரம்பரை தொழிலில் மேன்மை நிலை உண்டாகும், அப்பாவின் உதவி கிடைக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பண வருமானம் அதிகரிக்கும். 20ஆம் தேதிக்குப் பிறகு சகோதரர்களால் நன்மை உண்டாகும். புதன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும் தாய் மாமனுடன் நல்லுறவு உண்டாகும்.

9ஆம் தேதிக்குப் பின்னர் தொழிலில் கவனம் செலுத்தவும். ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவீர்கள் வங்கிகளில் முதலீடுகள் அதிகரிக்கும்.

சுக்கிரன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் அதிர்ஷ்டம் உண்டாகும் ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும். சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உடலில் அசதி அதிகரிக்கும் தொழில் நிலை சிறப்படையும்.

ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் வாகனப் போக்குவரத்தில் கவனம் தேவை. கேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் சச்சரவு உண்டாகலாம். ஐப்பசி 13,14 சந்திராஷ்டமம்.

மகரம்

செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் காரியங்கள் சிறப்படையும் 20ஆம் தேதிக்குப் பிறகு பண வருமானம் அதிகரிக்கும். புதன் பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் சம்பந்தப் படிப்பில் கவனம் அதிகரிக்கும் 9ஆம் தேதிக்குப் பின்னர் பங்கு வர்த்தகம் மூலம் பணம் வரும் லாபம் அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு பதினொன்றாம் வீட்டில் இருக்கிறார் வங்கி சேமிப்பு அதிகரிக்கும் செல்வச்சேர்க்கை அதிகரிக்கும்.

சனி உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் செலவுகள் அதிகரிக்கும் வீண் அலைச்சல் உண்டாகும்.

ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் தொழில் கூட்டாளிகளுடன் நல்லுறவு உண்டாகும் வியாபாரம் விருத்தியாகும் கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் கடவுள் பக்தி அதிகரிக்கும் மனநிலை தெளிவாகும். ஐப்பசி 15,16,சந்திராஷ்டமம்.

கும்பம்

சூரியன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும், தொழில் நிமித்தம் அடிக்கடி வெளியூர் பயணம் செல்வீர்கள். செவ்வாய் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் புதிதாக வீடு, நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். 20ஆம் தேதிக்குப் பிறகு எடுத்த காரியம் வெற்றியடையும்.

புதன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனின் உதவி கிடைக்கும் 9ஆம் தேதிக்குப் பின்னர் கமிஷன் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பணம் வருவாய் அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் வெளிநாடு மூலம் வியாபார முன்னேற்றம் உண்டாகும், ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மனதின் ஆசைகள் நிறைவேறும்.

சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் குல தெய்வத்தின் அருள் கிடைக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் எதிரிகளை வெல்வீர்கள். கேது உங்கள் ஜென்ம ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் திருக்கோயில்களுக்கு பிரயாணம் செல்வீர்கள். ஐப்பசி 17,18,19 சந்திராஷ்டமம்.

மீனம்

சூரியன் எட்டாமிடத்தில் இருக்கிறார் பெரியவர்களால் மனக் கஷ்டம் உண்டாகும், அப்பாவின் செயல்கள் சங்கடத்தை உண்டாக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் முயற்சிகள் வெற்றியடையும் 20ஆம் தேதிக்குப் பிறகு புதிதாக வீடுகட்டும் பணி துவங்க முயற்சி செய்யலாம். புதன் எட்டாமிடத்தில் இருக்கிறார் புத்தியில் குழப்பம் உண்டாகும் 9ஆம் தேதிக்குப் பின்னர் உயர்கல்வியில் மேன்மை நிலை உண்டாகும்.

குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அதிர்ஷ்டம் அதிகரிக்கும், பொன்னகைகள் வாங்குவீர்கள். சுக்கிரன் எட்டாமிடத்தில் இருக்கிறார் விலை உயர்ந்த பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்ளவும். சனி உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் செய்யும் தொழில் சிறப்படையும்.

ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உறவினர் வீட்டு விஷேசங்களில் கலந்து கொள்வீர்கள். கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மன ஆசைகள் நிறைவேறும். ஐப்பசி 20,21 சந்திராஷ்டமம்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்