இன்று புரட்டாசி 2 ம் சனி: யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்க போகுது?

Report Print Kavitha in ஜோதிடம்

இன்று புரட்டாசி இரண்டாவது வாரத்து சனிக்கிழமை ஆகும். அந்தவகையில் இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம்.

மேஷம்

வாகனப் பயணங்களில் கொஞ்சம் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். வாடிக்கையாளர்களிடம் கொஞ்சம் அமைதியாக நடந்து கொள்ளுங்கள். பிறருடைய பணிகளையும் சேர்த்து பார்க்க வேண்டிய சூழல்கள் உருவாகும். சிலருகு்கு சாதகமான பணிமாற்றங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். புதிய நபர்களுடைய அறிமுகத்தால் விரயச் செலவுகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் நீலநிறமும் இருக்கும்.

ரிஷபம்

தொழில் சம்பந்தமாக ஏற்பட்ட நீண்ட பிரச்சினைகளுககு தீர்வு கிடைக்கும். பொதுப்பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். வியாபாரத்தில் உள்ள போட்டிகளைச் சமாளிப்பீர்கள். பிறருக்கு உதவும்போது கூடுதல் கவனம் வேண்டும். எதிர்பாராத சுப செய்திகளால் சுா விரயச் செலவுகள் ஏற்படும். முயற்சிக்கு ஏற்ப பாராட்டுக்கள் வந்து சேரும் நாள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

மிதுனம்

குடும்ப நபர்களுடைய தேவைகளை நிறைவேற்றி மனம் மகிழ்ச்சி கொள்வீர்கள். மனதுக்குள் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். பூமி விருத்திக்கான செயல் திட்டங்களில் உங்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகள் அமையும். சகுாதரர்களின் மூலமாக உங்களுக்குச் சாதகமான சூழல்கள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

கடகம்

பணிபுரியும் இடங்களில் உங்களின் மீதான நம்பிக்கைகள் அதிகரிக்கும். தாயாருடைய உடல் நலத்தில் இருந்து வந்த இன்னல்கள் தீரும். முக்கிய முடிவுகளில் பெரியோர்களுடைய ஆலோசனைகள் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்ப பொருளுாதாரம் மேம்படும். வியாபாரத்தில் புதிய நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

சிம்மம்

புதிய இலக்குகளை நிர்ணயித்து அதை நோக்கிப் பயணம் செய்வீர்கள். உங்களுடைய சாதுர்யமான பேச்சுக்களால் பாராட்டப்படுவீர்கள். மன தைரியத்துடன் புதிய திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள். நினைத்த செயல்களை சில தடைகளுக்குப் பிறகு செய்து முடிப்பீர்கள். பெரியோர்களிடம் கொஞ்சம் நிதானத்துடன் செயல்படுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

கன்னி

வழக்குகளில் உங்களுக்குச் சாதகமான முடிவுகள் உண்டாகும். புதிய நபர்களிடம் பழகுகின்ற பொழுது, கொஞ்சம் கவனம் தேவை. எளிதில் முடியும் என்று எதிர்பார்த்த செயல்களில் கொஞ்சம் கால தாமதம் ஏற்படும். பணிபுரியும் இடங்களில் தேவையற்ற வாதங்களைத் தவிர்ப்பது நல்லது. சந்திராஷ்டமம் நடைபெறுவதால் செய்யும் வேலைகளில் கொஞ்சம் கவனத்துடன் இருக்க வேண்டும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

துலாம்

நண்பர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும் வாய்ப்புண்டு. தொழில் சம்பந்தமாக புதிய நபர்களுடைய அறிமுகம் உங்களுக்குக் கிடைக்கும். பரம்பரை சொத்துக்களால் சில வீண் விரயச் செலவுகள் உண்டாகும். தொழிலில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். மனதுக்குள் தோன்றும் பலவிதமா எண்ணங்களினால் செயல்களில் கால தாமதங்கள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

விருச்சிகம்

சக பணியாளர்களிடம் உங்களுடைய மதிப்பு உயர ஆரம்பிக்கும். குடும்ப உறுப்பினர்களினால் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். மனதுக்குள் இருந்து வந்த கவலைகள் குறையும். ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும். தம்பதிகளுக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். தொழிலில் கூடு்டாளிகளால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

தனுசு

செலவுகளைக் குறைத்து சேமிப்பை அதிகப்படுத்த முயற்சி செய்வீர்கள். பணிபுரிகின்ற இடங்களில் உயர் அதிகாரிகளிடம் வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த கடன் வாய்ப்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பங்காளிகளின் ஆதரவு உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

மகரம்

நீண்ட கால நண்பர்களைக் கண்டு மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். வெளியூா் பயணங்களினால் உங்களுக்கு அனுகூலமான சூழல்கள் உண்டாகும். கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். நினைவாற்றல்கள் மேம்பட வாய்ப்பு உண்டு. வீட்டில் பிள்ளைகளுடைய செயல்பாடுகளால் மகிழ்ச்சியான சூழல்கள் உண்டாகும். வீடு மற்றும் மனை சம்பந்தப்பட்ட விவகாரங்களில் உங்களுக்கு சுமூகமான முடிவுகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

கும்பம்

உத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்களுடைய சக ஊழியர்களிடம் கொஞ்சம் நிதானப்போக்கினைக் கடைபிடியுங்கள். அரசு சம்பந்தப்பட்ட செயல்பாடுகளினால் ஏற்பட்ட தடைகள் நீங்கும். உடன் பிறப்புகளினால் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். தன வரவும் மேம்படும். சிறு தூரப் பயணங்களினால் மாற்றங்கள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

மீனம்

வாகனப் பயணங்களில் கொஞ்சம் கவனம் தேவை. வாடிக்கையாளர்களிடம் அமைதியைக் கடைபிடிக்கவும். பிறருடைய பணிகளையும் சேர்த்து பார்க்க வேண்டிய சூழல்கள் உருவாகலாம். சிலருக்கு சாதகமான பணிமாற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் வேண்டும். புதிய நபர்களுடைய அறிமுகத்தால் வீண் விரயச் செலவுகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் நீலநிறமும் இருக்கும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers