இன்றைக்கு இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பொருள் சோர்க்கை உண்டாகுமாம்!

Report Print Kavitha in ஜோதிடம்

இன்று எந்த எந்த ராசிக்காரர்களுக்கு எப்படி என்று பார்ப்போம்.

மேஷம்

நண்பர்களின் உதவியால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். பூா்விக சொத்துகள் சம்பந்தமாக சொந்த ஊருக்கு பயணம் மேற்கொள்வீர்கள். கலை சார்ந்த கல்வி பயிலும் மாணவர்களின் புத்திக்கூர்மை வெளிப்படும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்ட திசை - தெற்கு, அதிர்ஷ்ட எண் - 6, அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை நிறமாக இருக்கும்.

ரிஷபம்

உறவினர்களின் மூலம் சாதகமான சூழல் அமையும். தொழிலில் புதிய யுக்திகளை கையாண்டு வெற்றி அடைவீர்கள். மனை வாங்குவதற்கு சதகமான சூழல் அமையும். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். அவர்களின் மூலம் முன்னேற்றத்திற்கான சூழல் அமையும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்ட திசை - தெற்கு திசையும் அதிர்ஷ்ட எண் - 9 அதிர்ஷ்ட நிறம் - இளஞ்சிவப்புமாக இருக்கப் போகிறது.

மிதுனம்

குடும்பத்தில் கலகலப்பான சூழல் அமையும். செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும். பணியில் உயர் அதிகாரிகளால் சாதகமான சூழல் உண்டாகும். வாக்கு வன்மையால் தொழில் வகை லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகளில் எண்ணிய வெற்றி கிடைக்கும். பொருள் சேர்க்கை உண்டாகும். இன்று உங்களுக்கான அதிர்ஷ்ட திசை என்பது மேற்காகவும், அதிர்ஷ்ட எண்ணாக 6 ம், அதிர்ஷ்ட நிறம் சந்தன வெள்ளை நிறமாகவும் அமையப் போகிறது.

கடகம்

மனதில் புதுவிதமான எண்ணங்கள் மேலோங்கும். பெரியோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். நண்பர்களின் மூலம் தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படும். கணவன்,மனைவிக்கிடையே சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வாகனப் பயணங்கள் மேற்கொள்ளும் போது கூடுதல் கவனம் தேவை. இன்று உங்களுக்கு அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கப் போகிறது.

சிம்மம்

கணவன், மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். நண்பர்களினால் சுப விரயம் உண்டாகும். விவாதங்களில் சாதகமான சூழல் அமையும். கல்வி பயில்பவர்களின் அறிவுக்கூர்மை வெளிப்படும். வெளிநாட்டு தொழில் சம்பந்தப்பட்ட முயற்சிகள் உங்களுக்கு சாதகமான பலனைத் தரும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட நிறமாக இள நீலம் நிறமும் இருக்கும்.

கன்னி

பொதுநலத் தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு புகழ் உண்டாகும். அறச்செயல்களில் ஈடுபட்டு மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். அரசாங்கத்திடம் இருந்து நீங்கள் எதிர்பார்த்திருந்த விஷயங்களில் உங்களுக்கு அனுகூலமான செய்திகள் வந்து சேரும். உயர் பதவியில் உள்ளவர்களுக்கு சாதகமான நாள். தொழில் ரீதியான பயணங்களால் சேமிப்பு அதிகரிக்கும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்ட திசை - வடக்கு திசையும் அதிர்ஷ்ட எண் - 2 ம், அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

துலாம்

குடும்பத்தில் இன்று மிகவும் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். வெளி வட்டாரங்களில் உங்களுடைய செல்வாக்கு பெருகும். புதிய தொழில் வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். அதனால் லாபம் உண்டாகும். கௌரவ பதவிகள் கிடைப்பதற்கான சூழல் அமையும். பெரிய ஆன்மீக மகான்களின் தரிசனம் கிடைக்கும். பெற்றோருடைய உடல் நலத்தில் கொஞ்சம் கவனத்துடன் இருக்க வேண்டும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

விருச்சிகம்

சுயதொழில் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகள் மேலோங்கி வெற்றி பெறும். போட்டிகளில் ஈடுபட்டு மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். கால்நடைகளின் மூலமாக லாபம் உண்டாகும். பொதுக்கூட்டப் பேச்சுக்களில் ஈடுபட முயற்சிகள் மேற்கொள்வீர்கள். தாயின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக மேற்கும் அதிர்ஷ்ட எண்ணாக 8 ம் அதிர்ஷ்ட நிறமாக கருப்பு நிறமும் இருக்கும்.

தனுசு

இன்று எந்த காரியத்தை எடுத்தாலும் அதில் கொஞ்சம் இழுபறியாகவே இருக்கும். ஆனாலும் இதற்கு முன் நீங்கள் பார்த்த வேலையின் வெற்றியால் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். நண்பர்கள் மற்றும் தொழில் பங்கு தாரர்களின் உதவியினால் புதிய புதிய வாய்ப்புகள் உருவாகும். தண்ணீர் சம்பந்தப்பட்ட வேலை செய்பவர்கள் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். கடன் தொல்லைகள் உண்டாகும். சரியான நேரத்தில் கடனைத் திருப்பித்தர முடியாததால் பிறரின் மன வருத்தத்துக்கு ஆளாவீர்கள். இன்று உங்களுக்கு அதிர்ஷ்ட எண்ணாக 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சளும் இருக்கும்.

மகரம்

இதுவரையில் உங்களுடைய திருமண விஷயங்களில் இருந்து வந்த சின்ன சின்ன இழுபறியும் தடைகளும் நீங்கி, சாதகமான நிலை உண்டாகும். வீடு மற்றும் மனைகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். உறவினர்களுடைய ஆதரவுகள் உங்களுக்குக் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் இதுவரை இருந்துவந்த பிரச்னைகள் தீர்ந்து போகும். நீங்கள் நினைத்த காரியங்களை வீட்டில் உள்ள பெரியோர்களின் முழு ஆதரவினால் தடையின்றி சிறப்பாக முடிந்து போகும். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கப் போகிறது.

கும்பம்

பிரபலங்களினுடைய அமோக ஆதரவுகள் உங்களுக்குக் கிடைக்கும். வீண் அலைச்சல்களின் காரணமாக, உடல் மற்றும் மனச்சோர்வு உண்டாகும். விவாதங்களில் உங்களில் முழு திறமையால் வெற்றி பெறுவீர்கள். ஈடுபடும் காரியங்களில் தன்னம்பிக்கையுடன் முன்னேறிச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். முக்கியப் பொறுப்பான வேலையில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் பொறுமையைக் கடைபிடிப்பது நல்லது. நண்பர்கள் மற்றும் பங்குதாரர்களால் உங்களுக்கு சாதகமான சூழலை உருவாக்கும் வாய்ப்பு உண்டு. இன்று உங்களுடைய அதிர்ஷ்டத்துக்கு உரிய எண்ணாக 4 ம், அதிர்ஷ்டத்துக்கு உரிய திசையாக கிழக்கும் அதிர்ஷ்டத்துக்குரிய நிறமாக காவி நிறமும் இருக்கும்.

மீனம்

வீட்டில் உள்ளவர்களுக்காக ஆடை மற்றம் ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்புகள் உண்டாகும். அதனால் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்திலும் மகிழ்ச்சி உண்டாகும். இசைக் கலைஞர்களுக்கு சாதகமான நாளாக இன்று அமையும். தொழிலில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகத்தினால் தொழிலில் லாபம் உண்டாகும். பணியில் புதிய நபர்களை சந்திப்பீர்கள். அதிர்ஷ்ட திசை - தெற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக 5 ம் அதிர்ஷ்ட நிறமாக கிளிப்பச்சை நிறமும் இருக்கும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...