இன்று ஆடி அமாவாசை! உங்கள் ராசிக்கான பலன்கள் இதோ

Report Print Fathima Fathima in ஜோதிடம்
1348Shares
1348Shares
Nallur-Travels-August-Promotion

இன்று (சனிக்கிழமை) ஆடி அமாவாசை. மிகவும் புனித தினமாகும்.

இறந்து போன முன்னோர்களின் நினைவாக நீர்நிலைகளுக்கு சென்று திதி கொடுத்து வழிபாடு செய்தால் முன்னோர் ஆசி கிடைக்கும்.

தடைப்பட்ட திருமணம், நீண்டநாள்பட்ட நோய் நொடிகள், மனவருத்தம் ஆகியவை விலகி சந்தோஷமும், மனநிறைவும் கிடைக்கும்.

இன்றைய நாளில் உங்கள் ராசிக்கான பலன்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்: எடுத்த வேலையை முடிக்காமல் ஓயமாட்டீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். உழைப்பால் உயரும் நாள்.

ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். வெளியூரிலிந்து நல்ல செய்தி வரும். சொந்த-பந்தங்கள் வீடு தேடி வருவார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். சிறப்பான நாள்.

மிதுனம்: எதையும் உற்சாகமாக செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். அழகு, இளமைக் கூடும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் புது சலுகைகள் கிட்டும். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

கடகம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் எந்த ஒரு விஷயத்திலும் மற்றவர்களை முழுமையாக நம்பிக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். போராட்டமான நாள்.

சிம்மம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். உறவினர்களால் சங்கடங்கள் வரும். லேசாக தலை வலிக்கும். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியிடம் விவாதம் வேண்டாம். போராடி வெல்லும் நாள்.

கன்னி: குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். விருந்தினர் வருகை உண்டு. வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். சிறப்பான நாள்.

துலாம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். பயணங்கள் திருப்திகரமாக அமையும். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டி கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். திட்டங்கள் நிறைவேறும் நாள்.

விருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். திருப்பங்கள் நிறைந்த நாள்.

தனுசு: சந்திராஷ்டமம் நீடிப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து நீங்கும். உடன்பிறந்தவர்களால் வீண் செலவும், மனக்கசப்பும் வந்துச் செல்லும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

மகரம்: உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவிவழி உறவினர்களின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

கும்பம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். அமோகமான நாள்.

மீனம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். நட்பால் ஆதாயம் உண்டு. உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்