இன்று இந்த ராசிக்காரர்களுக்கு தான் லாபம்

Report Print Kabilan in ஜோதிடம்
542Shares

இன்று எந்தெந்த ராசிக்காரர்களுக்கு லாபமான நாள் என்பது குறித்து இங்கு காண்போம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு வணிகத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சிந்தனைப் போக்கில் மாற்றங்கள் ஏற்படும். மனைவி வழி உறவினர்களால் நன்மைகள் உண்டாகும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று உத்தியோகத்தில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். சக ஊழியர்களின் ஆதரவால் எடுத்த காரியத்தை சிறப்பாக முடிப்பார்கள். மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு போட்டிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். இழந்த பொருட்களை மீட்பதற்கான சூழல் உண்டாகும். திருமணப் பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவுகள் உண்டாகும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு தொழிலில் முன்னேற்றமான சூழல் உருவாகும். பணிகளில் பொறுப்புகள் கூடும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வார்கள். வெளிநாட்டு பயணங்களினால் சாதகமான நிலை உண்டாகும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு செய்யும் தொழிலில் மதிப்பு கூடும். உடன் பிறப்புகளால் சாதகமான பலன் கிடைக்கும். ஆராய்ச்சி பணிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். வான்வழி மார்க்க தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு லாபம் உண்டாகும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட அதிக லாபம் கிடைக்கும் வாய்ப்புகள் உருவாகும். துறை சார்ந்தவர்களிடம் செல்வாக்கு உயரும். ஆரோக்கியம் மேம்படும். அரசு தொடர்பான பணிகளில் இருந்து வந்த தாமதங்கள் விலகும். தொழிலில் ஏற்பட்ட தடங்கல்கள் நீங்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு வாகனங்களால் லாபம் உண்டாகும். உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். புதுவித யுக்திகளால் தொழிலில் லாபம் கிட்டும். எதிர்பார்த்த பதவி உயர்விற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு அனுகூலமான சூழலாக அமையும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்