இன்று இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டும்!

Report Print Kabilan in ஜோதிடம்
698Shares
698Shares
ibctamil.com

எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இன்று லாபகரமான நாளாக அமையும் என்பது குறித்து பார்ப்போம்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் தங்களது வாத திறமையால் லாபத்தை பெறுவர். கல்வி பணியில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளால் பணியில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும்.

கடகம்

ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட பணியில் உள்ளவர்களுக்கு, எண்ணிய காரியம் வெற்றி பெறும். உயர் அதிகாரிகளிடம் உங்களைப் பற்றிய நம்பிக்கை அதிகரிக்கும் வகையில், உங்களது செயல்பாடுகள் அமையும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு உடன் பிறந்த சகோதரர்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். வெளிமாநில, வெளிநாட்டு வாணிகத்தில் லாபம் உண்டாகும். நண்பர்களின் ஒத்துழைப்பால் சாதகமான பலன்கள் கிடைக்கும். கற்ற கலைகளினால் எதிர்பாராத லாபங்கள் கிடைக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு தங்களது உயர் அதிகாரிகளால் சாதகமான பலன்கள் கிடைக்கும். சக ஊழியர்களிடம் உங்களுடைய செல்வாக்கு உயரும். நீண்ட நாட்களாக செய்ய நினைத்த காரியங்களை செய்து முடிப்பதற்கான சூழல் அமையும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகத்தால், தொழிலில் பல மடங்கு லாபம் அதிகரிக்கும். பணியில் உள்ளவர்களுக்கு இன்று சிறப்பான நாளாக அமையும்.

தனுசு

இந்த ராசிக்காரர்களுக்கு பொருள் சேர்க்கை உண்டாகும். அந்நியர்களின் வருமானம் அதிகரிக்கும். தொழிலில் புதுப்புது சிந்தனைகள் மேலோங்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் இன்று புதிய முயற்சிகளில் ஈடுபட்டு பெரும் புகழை பெறுவார்கள். புதிய லட்சியத்தை அடைவதற்கான பணிகளை மேற்கொள்வார்கள். கலகலப்பான சூழல் குடும்ப உறுப்பினர்களால் உருவாகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

கும்பம்

இந்த ராசிக்காரர்கள் கால்நடைகளின் மூலமாக லாபங்களை ஈட்டுவார்கள். பரம்பரை சொத்துக்களினால் இவர்களுக்கு நன்மை உண்டாகும். பயணங்களினால் நினைத்த காரியங்கள் நடக்கும்.

மீனம்

நண்பர்களின் மூலமாக இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். நிலுவையில் இருந்த வழக்குகள் மற்றும் பஞ்சாயத்துகள் இவர்களுக்கு சாதகமாக வெற்றியில் முடியும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்