செல்வம் பெருக வீட்டில் இருக்க கூடாத எட்டு விஷயங்கள்

Report Print Trinity in ஜோதிடம்

அனைவருக்குமே செல்வந்தர் ஆக வேண்டும், அதிர்ஷ்டம் நம்மை தேடி வர வேண்டும் என்கிற ஆசைகள் இருக்கும். குறைந்த பட்சம் கடனில்லாமல் வாழும் வாழ்வு கிடைத்தால் கூட போதுமானது என்று பலர் நினைக்கலாம்.

செல்வம் பெருக வாஸ்து பொருட்கள் வாங்கி வைப்பது, சிரிக்கும் புத்தர் வாங்கி வீட்டில் வைப்பது, நவரத்தின மரம் வீட்டில் இருப்பது போன்ற பலவகையான விஷயங்கள் நம் வீட்டுக்குள் வருகின்றன.

அப்போதும் செல்வவளம் ஏற்படவில்லை என்று வருந்துபவர்கள் அவர்கள் வீட்டில் உள்ள இந்த எட்டு விஷயங்களை நீக்குவதன் மூலம் செல்வம் பெருகி ஐஸ்வர்யம் சித்திக்கும் என்று முன்னோர் கூறியுள்ளனர்.

ஆகவே அந்த எட்டு விஷயங்கள் என்னென்ன என்பது பற்றி இப்போது பார்க்கலாம்.

ஒட்டடை

வீட்டில் சிலந்தி வலை என்னும் ஒட்டடை இருக்கவே கூடாது, அப்படி இருப்பின் துரிதமாக அதனை நீக்கி விட வேண்டும்.

காரணம் ஒட்டடை பார்ப்பதன் மூலம் நம் மனதில் துர்பாக்கியம் குடிகொள்ளும் வீட்டில் எதிர்மறை சக்திகள் வலுவாகும் என்று முன்னோர்கள் சொல்லி உள்ளனர், உடனடியாக ஒட்டடைகளை நீக்குவது அவசியம்.

புறாக்கூடு

புறாக்கூடு என்பது வீடுகளில் கட்டாயம் இருக்க கூடாது. புறாக்கூடுகள் இருந்தால் வீட்டில் ஸ்திர தன்மை நீங்கி விடும் என்று கூறப்படுகிறது. பொருளாதாரத்தில் ஏற்ற தாழ்வுகள் இருந்து கொண்டே இருக்கும் என்றும், வீட்டில் உள்ளோரின் உடல்நிலை ஒரு நாள் போல ஒரு நாள் இருக்காது என்றும், புறாக்கூடு இருக்கும் இடங்களில் வறுமை என்பது வீடு தேடி வரும் என்பது ஐதீகம்.

ஆகவே புறாவின் கூடுகள் இருந்தால் குஞ்சுகள் வளரும் வரை காத்திருந்து பின் அவற்றை அகற்றி விடவும். மீண்டும் வராமல் பார்த்து கொள்ள வேண்டும்.

தேன்கூடு

பொதுவாக இல்லங்களிலோ அல்லது அதன் அருகிலோ தேன்கூடு இருக்க கூடாது. ஏனெனில் தேனீக்கள் கடின உழைப்பாளிகள் என்றாலும் தேன் கூடு வீட்டில் இருந்தால் எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும், கடன் தொல்லைகள் ஏற்படும் வறுமை வளரும் நிலை உள்ளது. பாதுகாப்பான முறையில் இதனை அகற்றிட வேண்டும்.

உடைந்த கண்ணாடிகள்

வீட்டில் உள்ள நிலைக்கண்ணாடிகள் மஹாலக்ஷ்மியின் அம்சம். அவை உடைந்தோ சேதாரமான முறையிலோ இருக்க கூடாது என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் உடைந்த கண்ணாடி பொருட்கள் எதுவாக இருந்தாலும் அவைகள் அகற்றப்பட வேண்டும்.

முக்கியமான பரிசு பொருளாக இருந்தாலும் கூட உடைந்த கண்ணாடியில் உள்ள எந்த பொருளாக இருந்தாலும் நீக்கி விட வேண்டும். இல்லாவிட்டால் பிரச்னை கட்டாயம் வரும். துரதிர்ஷ்டமான வாஸ்து அமையும்.

வவ்வால்

ஒரு வீட்டில் வவ்வால் குடியேறுவது என்பது துரதிர்ஷ்டத்தின் அடையாளம். நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டமும் கூட.

இத்தகைய வவ்வால்களின் வரவால் வீட்டில் உள்ளவர்களின் உடல்நிலை பாதிக்கப்படலாம், வறுமை ஏற்படும் அதை விடவும் வீட்டில் துர்மரணங்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு.

துரதிர்ஷ்டத்தை நம் வீடு நோக்கி இழுக்கும். அதனால் வவ்வால்கள் வர ஆரம்பித்தால், வீட்டில் அதனை அண்ட விடாமல் சுத்தமாக வைத்து கொள்ளவும்.

தண்ணீர் குழாய்

தண்ணீர் குழாய்களில் சில சமயம் நீர் வீணாகி கொண்டே இருக்கும். இது போன்று ஏற்பட்டால் உடனடியாக அந்த நீர்க்குழாயை சரி செய்ய வேண்டும்.

இல்லாவிட்டால் நீர் வீணாவது போல பணம் விரயமாகும். மகாலக்ஷ்மியின் அருள் கிடைக்க வேண்டும் என்றால் நீர் வீணாவதை நிறுத்த வேண்டும். மேலும் நீரை சிக்கனமாக பயன்படுத்துவர்களுக்கு பணம் தாராளமாக இருந்து வரும்.

காய்ந்த பூக்கள்

பூஜை அறையிலோ அல்லது வீட்டின் எந்த இடத்திலும் காய்ந்த பூக்கள் இருக்க கூடாது. எதிர்மறை சக்திகளை வீட்டுக்குள் வரவழைக்கும் குணம் காய்ந்த பூக்களுக்கு உண்டு.

புதிய பூக்கள் உயிர்ப்பு நிறைந்தவை ஆகவே நல்ல சக்திகளை அவை ஈர்க்கும், அதுவே காய்ந்து விட்டது என்றால் அதன் உயிர்தன்மை போய்விட்டிருக்கும்.

ஆகவே கடவுளுக்கு அர்ப்பணம் செய்த பூக்கள் என்றாலும் அவைகள் காய்ந்த உடன் உடனடியாக வீட்டை விட்டு வெளியேற்றி அருகில் உள்ள மரம் அல்லது செடிகளுக்கு உரமாக போட்டு விட வேண்டும்.

சுவர் விரிசல்கள்

மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது விரிசல் இல்லாத சுவர்கள். இப்படி இருந்தால் உடனடியாக அந்த விரிசல்களை சரி செய்து வர வேண்டும்.

சின்ன விரிசல்தானே என்று அலட்சியப்படுத்தி விட கூடாது, இதனை பார்ப்பதால் மனதிற்குள் எதிர்மறை எண்ணங்கள் உண்டாகும். வீட்டின் செல்வ வளம் குறையும், ஆகவே சுவர் விரிசல்களை உடனடியாக சரி செய்வது அவசியம்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்