இன்று கோடீஸ்வரராகும் யோகம் இந்த ராசிக்காரர்களுக்கு மட்டும் தானாம்! இதில் உங்க ராசி என்ன?

Report Print Kavitha in ஜோதிடம்

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி என்று பார்ப்போம்.

மேஷம்

கல்வி சார்ந்த விஷயங்களில் மாணவர்களுடைய திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்புக்கள் கிடைக்கும். புதிய பொருள்களின் வரவு உண்டாகும். வீட்டில் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். தாய்வழி உறவினர்களின் மூலம் அனுகூலங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தெற்கும்அதிர்ஷ்ட எண்ணாக 3 ம் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சளும் இருக்கும்.

ரிஷபம்

குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு, அதற்கு ஏற்றபடி நடந்துகொள்வது அவசியம். தானாக எந்த முடிவையும் எடுக்காமல் பெரியவர்களின் ஆலோசனைப்படி நடந்து கொள்ளுங்கள். இதுவரை தடைபட்டு வந்த காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக இருக்குமென்பதால், அதற்கான முயற்சியை மேற்கொள்ளுங்கள். வேலை மற்றும் தொழில் சார்ந்த முயற்சிகளில் லாபம் உண்டாகும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி வழங்கும் திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக 5 ம் அதிர்ஷ்ட நிறமாக ஊதாநிறமும் இருக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

மிதுனம்

இதுவரை தடைபட்டுக் கொண்டிருந்த எல்லா காரியங்களும் இன்று வெற்றிக்கனியாக உங்கள் கைகளில் வந்து சேரும்... ஏன் இன்றைக்கு நீங்கள் பொறுப்புடனும் கவனமுடனும் இருந்தால் கோடீஸ்வரர் ஆகும் வாய்ப்பை கூட பெற முடியும். பொருளாதாரம் சிறக்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள். புதிதாக உங்களுக்கென தனி இலக்கை தீர்மானித்து அதை நோக்கிப் பயணம் செய்ய ஆரம்பிப்பீர்கள். இன்று எதை தொட்டாலும் லாபம் உண்டாகும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரக்கூடிய திசையாக வடக்கும் அதிர்ஷ்ட எண்ணாக 6 ம் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் அமையும்.

கடகம்

நட்பின் அருமை புரிந்த உங்களுக்கு நண்பர்கள் மூலமாக, உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். ஆடை மற்றும் ஆபரணங்கள் சேர்க்கை உண்டாகும். கேளிக்கைகளில் ஈடுபடுவீர்கள். உங்களுடைய பேச்சாற்றலை மற்றவர்களிடம் வெளிப்படுத்தி பாராட்டைப் பெறுவீர்கள். பொறுப்புகள் காரணமாக பணிச்சுமை அதிகரிக்கும். மனதில் உள்ள கவலைகள் நீங்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக கிழக்கும் அதிர்ஷ்ட நிறமாக பச்சையும் அதிர்ஷ்ட எண்ணாக 7 ம் இருக்கும்.

சிம்மம்

உடல் நலத்தில் இக்கறை செலுத்துங்கள். புதிய தொழில் தொடங்குவது பற்றிய சிந்தனைகள் பெருகும். அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். நல்ல செய்திகள் காதுகளுக்கு வந்து சேரும். வீண் விரயச்செலவுகள், வாகனப் பராமரிப்பு செலவுகள் உண்டாகும். அலைச்சல்கள் அதிகரிக்கும் நாளாக இருக்கும். இன்றைக்கு உங்களுக்கு அதிர்ஷ்டம் தரும் நிறமாக வெள்ளை நிறமும் அதிர்ஷ்ட எண்ணாக 1 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கும் இருக்கிறது.

கன்னி

ஆடம்பரச் செலவுகள் குறையும். சேமிப்புகள் உயரும். இதுவரை அலுவலகத்தில் உங்க்ள உயர் அதிகாரிகளிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். எதிர்பார்த்த இடங்களில் இருந்து உதவிகள் வந்து சேரும். அதனால் பல அனுகூலங்கள் உண்டாகும். இதுவரை இருந்துவந்த சிறுசிறு ஆரோக்கியக் கோளாறுகள் நீங்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக வடமேற்கும் அதிர்ஷ்ட எண்ணாக 2 ம் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

துலாம்

தொழிலில் இதுவரை இருந்து வந்த எதிரிகளும் போட்டிகளும் கணிசமாகக் குறைய ஆரம்பிக்கும். நீங்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சிகளில் அளவில்லா லாபம் பெறும் வாய்ப்புகள் உண்டாகும். ஆன்மீகப் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உடன் பணிபுரிபவர்களிடம் நிதானமாகவும் பொறுமையாகவும் பேசுங்கள். தொழில் சம்பந்தப்பட்ட ரகசியங்களை நெருங்கிய நண்பர்களிடம் கூட பகிர்ந்து கொள்ளாதீர்கள். உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக வடக்கும் அதிர்ஷ்ட எண்ணாக 9ம் இதிர்ஷ்ட நிறமாக வெளிர் மஞ்சளும் இருக்கும்.

விருச்சிகம்

உங்களுக்கு மேல் உள்ள உயர் அதிகாரிகளால் ஆதாயத்தைப் பெறுவீர்கள். தொழிலில் நிச்சயம் நல்ல லாபம் கிடைக்கும். பொதுகாரியங்களில் ஈடுபவதில் மனம் நிறைவு பெறுவீர்கள். சில குறிப்பிட்ட துறைகளில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டாகும். இன்றைக்கு உங்களுக்கு அதிர்ஷ்டம் தரக்கூடிய திசையாக கிழக்கும் அதிர்ஷ்ட எண் 3 ஆகவும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமாகவும் இருக்கும்.

தனுசு

பூர்வீக சொத்துக்களில் இதுவரை இருந்து வந்த சிக்கல்கள் தீரும். வங்கிகளில் எதிர்பார்த்துக் காத்திருந்த கடனுதவிகள் கிடைக்கும். தொழிலில் புதிய திட்டங்களும் முயற்சியும் உண்டாகும். இழுபறியாக இருந்து வந்த வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்புகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக மேற்கும் அதிர்ஷ்டத்து உரிய எண்ணாக 1 ம் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் அமையும்.

மகரம்

பெரியோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். குலதெய்வ வழிபாட்டில் ஈடுபாடு காட்டுவீர்கள். சாப்பாடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். பயணங்களில் ஈடுபடுவீர்கள். உங்களுடைய திறமையான பேச்சுகளால் ஆதாயம் அடைவீர்கள். குடும்பத்தில் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். இன்று உங்களுடைய அதிர்ஷ்டத்துக்கு உரிய திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்டத்து உரிய எண்ணாக 4 ம் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.

கும்பம்

உற்றார், உறவினர்களிடம் அமைதியாகவும் பொறுமையாகவும் நடந்து கொள்ள வேண்டும். சொத்து சம்பந்தப்பட்ட விவகாரங்களில் சில பிரச்னைகள் உண்டாகும் வாய்ப்புண்டு. பெற்றோர்களின் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். தொழிலில் புதிய முதலீடுகளைத் தவிர்த்தல் நல்லது. இன்று உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும் திசையாக வடக்காகவும் அதிர்ஷ்ட எண்ணாக 6 ம் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமும் இருக்கும்.

மீனம்

கலைத்துறையில் அதிகமாக ஈடுபாடு காட்டுவீர்கள். பிறருக்கு உதவிகள் செய்வதால் மனம் மகிழ்ச்சி பெறுவீர்கள். புதிய ஆட்களிடம் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். வீடு, மனைகள் வாங்குவதில் இதுவரை இருந்து வந்த தடைகள் நீங்கி, புதிய வழி பிறக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 5 ம் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பும் அதிர்ஷ்ட திசையாக கிழக்கும் இருக்கும்

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers