பண வரவு அதிகரிக்க இன்று இதனை செய்திடுங்கள்

Report Print Trinity in ஜோதிடம்

உங்கள் வீட்டில் பணம் சேர்வதற்கான சில பரிகாரங்கள் பற்றிய சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் குளித்து பூஜை செய்த பின் காலை ஆறு மணி முதல் ஏழு மணிக்குள் அருகில் உள்ள மளிகை கடையில், ஒரு கிலோ கல் உப்பு வாங்கி வந்து வீட்டில் உள்ள உப்பு ஜாடியில் போட்டு வையுங்கள். அல்லது மாலை 5 மணி முதல் ஏழு மணிக்குள் இதை செய்யலாம்.

இப்படி செய்வதால் மஹாலக்ஷ்மியின் அருள் பரிபூரணமாக உங்கள் வசம் வரும்.

அதே போல ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஐந்து வெற்றிலை ஐந்து கொட்டை பாக்கு ஐந்து ஒரு ரூபாய் நாணயங்கள் இவைகளை ஒரு காகிதத்தில் மடித்து, பூஜையில் மஹாலக்ஷ்மி படத்திற்கு எதிரே வைத்து மனமார நமக்கு தெரிந்த லக்ஷ்மியின் ஸ்லோகங்கள் சொல்லி வழிபட்டு வரவும். பின்பு அடுத்த வாரம் இந்த காகித மடிப்பை ஒரு உண்டியலில் போட்டு வைக்கவும்.

இப்படியே 16 வாரங்கள் செய்து முடித்தபின் நாணயங்களை மட்டும் எடுத்து கொண்டு மற்றவைகளை கடலிலோ அல்லது ஓடும் நீரிலோ போட்டு விடலாம், இதன் மூலம் பணவரவு பெருகும்.

வளர் பிறை அன்று வரும் திரிதியை திதியில் அன்னதானம் செய்து வந்தால் கடன் பிரச்னை அல்லது பண பிரச்னைகள் முடிவுக்கு வரும், ஒவ்வொரு மாதமும் இப்படி செய்து வரலாம்

நல்ல சம்பாத்தியம் இருந்தும் பணம் வீண் விரயம் ஆகி கொண்டே இருந்தால், தினமும் காலையில் பறவைகளுக்கு இனிப்பு உணவுகள் வழங்க வீண் விரயம் கட்டுக்குள் வரும்.

காலை எழுந்த உடன் தங்க நாணயம், தங்கங்கள் நிறைந்த படம் அல்லது ருபாய் நோட்டுக்கள் நிறைந்த படத்தை பார்த்து வர உங்கள் வீட்டில் செல்வம் பெருகும்.

வீட்டை சுற்றி நீரோட்டம் இருந்தாலோ அல்லது வீட்டிற்குள் செயற்கை நீரூற்றுகள் அமைக்கப்பட்டிருந்தாலோ அல்லது நீர் வீழ்ச்சியின் படங்கள் இருந்தாலும் பண வரவு தாராளமாக இருக்கும்.

இப்போது கூறப்பட்டவைகளை முறையாக கடைபிடித்து மனமுருக மகாலக்ஷ்மியை வேண்டினாள் நம் பூர்வ ஜென்ம பாவங்கள் மற்றும் சாபங்கள் நீங்கி வீட்டில் செல்வ வளம் பெருக்கெடுக்கும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers