மீனம் ராசி நேயர்களே: அலட்சியம் நீங்கி இனி ஆர்வத்துடன் பணிபுரிவீர்கள்

Report Print Deepthi Deepthi in ஜோதிடம்

அடிப்படை உரிமைகளை எப்போதும் விட்டுக்கொடுக்காத நீங்கள் அடுத்தவர்களின் சுதந்திரத்தில் அநாவசியமாக தலையிட மாட்டீர்கள்.

சமயோஜித புத்தியால் எதையும் செய்து முடிக்கும் நீங்கள், எப்பொழுதும் பரபரப்பாக இருப்பீர்கள்.

புதன் உங்கள் ராசிக்குள்ளேயே அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த புத்தாண்டு பிறப்பதால் கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசி சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மனைவிவழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள்.

பூர்வீக சொத்தில் மராமத்து வேலைகள் செய்வீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். தாய்மாமன், அத்தை வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

உங்கள் ராசியிலேயே இந்த விளம்பி வருடம் பிறப்பதால் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். அவ்வப்போது வீண் டென்ஷன், தலைச்சுற்றல், மன அமைதியின்மை, முன்கோபம் வந்து நீங்கும். சர்க்கரை, கொழுப்பு அளவை பரிசோதித்துக் கொள்வது நல்லது.

தோலில் நமைச்சல், தேமல், நரம்புச் சுளுக்கு வரக்கூடும். முடிந்தவரை சின்னச் சின்ன உடற்பயிற்சிகளைச் செய்வது நல்லது. இந்தாண்டு தொடக்கம் முதல் 03.10.2018 வரை உங்கள் ராசிக்கு 8ம் வீட்டில் குரு இருப்பதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலைகள், சிலர் மீது நம்பிக்கையின்மை, வீண் அலைச்சல் வந்து செல்லும். மறைமுக எதிரிகள் முளைப்பார்கள்.

வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். அநாவசியமாக யாரையும் வீட்டிற்குள் அழைத்து வர வேண்டாம். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை, மனைவி, பிள்ளைகளுடன் மனம் விட்டுப் பேச முடியாத நிலை வந்து போகும். ஆனால், 04.10.2018 முதல் 12.03.2019 வரை உங்களின் பாக்யஸ்தானமான 9ம் வீட்டில் குரு நுழைவதால் இடையூறுகளைக் கடந்து வெற்றி பெறுவீர்கள்.

சில இடங்களில், சில நேரங்களில் அமைதியாக இருந்து காரியம் சாதிப்பீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. குடும்பத்தில் தள்ளிப் போன சுப நிகழ்ச்சிகளெல்லாம் ஏற்பாடாகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் அடங்கும்.

கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். ஆனால், 13.03.2019 முதல் வருடம் முடியும் வரை உங்களின் ராசிநாதன் குருபகவான் அதிசார வக்ரமாகி உங்கள் ராசிக்கு 10ம் வீட்டில் வந்தமர்வதால் நான்கைந்து வேலைகளை ஒன்றாகச் சேர்த்து பார்க்க வேண்டியது இருக்கும்.

உத்யோகத்திலும் மறைமுக எதிர்ப்புகளும், இடமாற்றங்களும் வரக்கூடும். எனவே அலுவலகத்தில் அதிக பேச்சைத் தவிர்ப்பது நல்லது. வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பிரபலங்களை பகைத்துக் கொள்ளாதீர்கள் யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். 05.07.2018 முதல் 01.08.2018 வரை உள்ள காலக்கட்டங்களில் சுக்கிரன் 6ல் மறைவதால் சிறுசிறு விபத்துகள் வரக்கூடும்.

குடிநீர், கழிவு நீர் குழாய் அடைப்பு என செலவுகள் வரும். டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற சாதனங்கள் பழுதாகும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். 30.4.2018 முதல் 27.10.2018 வரை செவ்வாயும், கேதுவும் சேர்ந்து லாப வீட்டில் நிற்பதால் நிர்வாகத்திறன் அதிகரிக்கும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

எதிர்பாராத பணவரவு உண்டு. குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் தருவார்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். மனைவிவழியில் மதிப்பு கூடும். கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.

14.04.2018 முதல் 12.02.2019 வரை கேது 11ம் வீட்டில் நிற்பதால் ஷேர் மூலம் பணம் வரும். தயக்கம் தடுமாற்றம் நீங்கும். கடந்த வருடத்தில் வாட்டிவதைத்த பிரச்னைகளுக்கெல்லாம் இப்பொழுது தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.

வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். ஆனால், 5ல் நிற்கும் ராகுவால் மன அமைதியின்மை, டென்ஷன் வரக்கூடும். 13.02.2019 முதல் வருடம் முடியும் வரை 4ல் ராகு நுழைவதால் வேலைச்சுமை அதிகரிக்கும். தாயாருடன் மனஸ்தாபங்கள் வெடிக்கும்.

வாகனம் தண்டச்செலவு வைக்கும். கேது 10ம் வீட்டிற்குள் வருவதால் உத்யோகத்தில் எதிர்ப்புகள், திடீர் இடமாற்றம், குடும்பத்தில் அதிருப்தி வந்து நீங்கும். இந்த ஆண்டு முழுக்க சனிபகவான் 10ம் வீட்டிலேயே அமர்வதால் எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். உடல் ஆரோக்கியம் சீராகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும்.

உங்களை புகழ்வதைப் போல் இகழ்ந்தவர்களை எல்லாம் ஓரங்கட்டுவீர்கள். வேற்றுமதத்தவர்கள் உதவுவார்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். என்றாலும் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள்.

உத்யோகத்தில் அடிக்கடி இடமாற்றம் வந்து போகும். மேலதிகாரி உங்கள் திறமையை குறைத்து மதிப்பிடுவார். மறைமுக அவமானம் ஏற்படக்கூடும்.

கன்னிப்பெண்களே! கசந்த காதல் இனிக்கும். தடைப்பட்ட உயர்கல்வியை தொடர்வீர்கள். உங்கள் ரசனைக்கேற்ற நல்ல வாழ்க்கைத்துணைவர் அமைவார்.

மாணவ,மாணவிகளே! படிப்பில் ஆர்வம் பிறக்கும். நினைவாற்றல் அதிகரிக்கும். நல்ல நண்பர்கள் அறிமுகமாவார்கள். போட்டித்தேர்வுகளில் வெற்றி உண்டு.

வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகளை சாமர்த்தியமாக விற்றுத் தீர்ப்பீர்கள். வேலையாட்கள் இனி முரண்டு பிடிக்க மாட்டார்கள். வைகாசி, ஆவணி மாதங்களில் லாபம் அதிகரிக்கும்.

முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் வெளிநாட்டு நிறுவனத்தில் ஒப்பந்தம் கிடைக்கும். ஷேர், ஸ்பெகுலேஷன், இரும்பு, கட்டிட உதிரி பாகங்களால் லாபமடைவீர்கள். வாடிக்கையாளர்கள் விரும்பி வருவார்கள். புது கிளைகள் தொடங்குவீர்கள். விலகிச் சென்ற பங்குதாரர் மீண்டும் வந்து இணைவார்.

உத்யோகத்தில் வேலைச்சுமை குறையும். அலட்சியம் நீங்கி இனி ஆர்வத்துடன் பணிபுரிவீர்கள். மேலதிகாரியுடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். மூத்த அதிகாரி உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். சக ஊழியர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள்.

மார்கழி, தை மாதங்களில் மேலதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். ஐப்பசி மாதத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். இடமாற்றமும் வரக்கூடும். எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு தடையின்றி கிடைக்கும். இழந்த உரிமையை மீண்டும் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகளே! தொகுதியில் நடக்கும் நல்லது கெட்டதில் கலந்து கொண்டு மக்களின் அனுதாபத்தைப் பெறுவீர்கள்.

கலைத்துறையினரே! உங்களைப் பற்றிய வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். பட்டிதொட்டியெங்கும் நீங்கள் பரவலாக பேசப்படுவீர்கள்.

விவசாயிகளே! விளைச்சல் பெருகும். பாதிப் பணம் தந்து பத்திரப்பதிவு செய்யப்படாமல் இருந்த நிலத்தை மீதிப் பணம் தந்து கிரயம் செய்வீர்கள். ஊரில் மரியாதை கூடும். இந்த விளம்பி ஆண்டு வெற்றிப் பாதையில் விஜயம் செய்ய வைப்பதுடன், சமூகத்தில் பெரிய அந்தஸ்தையும், வசதி, வாய்ப்புகளையும் வாரித் தருவதாக அமையும்.

- Dina Karan

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்