நீங்கள் எந்த லக்னத்தில் பிறந்தவர்? இவர்களுக்கு மட்டும் ராஜயோகம் உள்ளதாம்

Report Print Printha in ஜோதிடம்
727Shares
727Shares
ibctamil.com

செவ்வாய் ஆதிபத்தியஸ்தான பலத்தின் அடிப்படையில் ஒருவரின் பிறந்த லக்னத்தை பொருத்து அவர்களின் வாழ்க்கையில் பல விசித்திரமான அனுபவத்தை செவ்வாய் கிரகம் கொடுக்கும்.

அதன் அடிப்படையில் ஒருவர் பிறந்த லக்னத்தை வைத்து அவர்களுக்கு கிடைக்கும் யோகமான மற்றும் அவயோகமான பலன்களை பார்க்கலாம்.

மேஷ லக்னம்

செவ்வாய் தெசா, யோகமானது அல்ல. சுபயோக ஸ்தானபலம் சுபக்கிரக பார்வை செவ்வாய்க்கு ஏற்பட்டிருந்தால் இந்த ஜாதகர் செவ்வாய் தெசா காலத்தில் சிறிது நன்மை கலந்த பலன்களை அடையப்பெறுவர் என்பதாகும்.

ரிஷப லக்னம்

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்கள் 7 வருடங்கள் நன்மைகள் உண்டாகும். இத்தகையவர்களுக்கு வரப்போகும் மனைவி தெய்வத்தன்மை, அதிர்ஷ்டம் உள்ளவராக இருப்பார்கள்.

மிதுன லக்னம்

மிதுன லக்னத்தில் பிறந்தவர்கள் பல நன்மைகளை செய்ய வல்லவர்கள். இந்த லக்னத்தில் 11-க்கு உடைய ஆதிபத்தியத்தால், இந்த ஜாதகருக்கு அசுப பலன்களை செவ்வாய் கிரகம் அளிக்கும்.

கடக லக்னம்

கடக லக்னத்தில் பிறந்தவர்களின் ஜாதகத்தில் செவ்வாய் ஜீவனாதிபதியாகவும், யோகக் காரகனாக குருபகவானும் இணைந்து ஒரு ராசியில் இருந்தாலும் அல்லது செவ்வாயை குருபகவான் தமது பார்வையில் பார்த்தாலும்,

செவ்வாய் தெசா காலத்தில், ஜாதகருக்கு பொன்/பொருள் சேர்க்கை, அசையா சொத்துக்கள் சேர்க்கை ஆகியவை அடையப்பெற்று பிரபலமான ராஜயோக வாழ்க்கை வாழ்வர் என்பதாகும்.

சிம்ம லக்னம்

சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களின் ஜாதகத்தில் செவ்வாயும் சுக்கிரனும் இணைந்து ஒரு ராசியில் அமையப் பெற்றும், செவ்வாய் தெசா காலத்தில் ஜாதகருக்கு நிலையற்ற பல நற்பலன்கள், எதிர்பாராத பொருள் விரையம், பலவித இன்னல்கள், ஆகியவை அடையப்பெறுவர்.

கன்னி லக்னம்

கன்னி லக்னத்தில் பிறந்தவர்களின் ஜாதகத்தில் 3-8க்கு உடைய ஆதிபத்தியம் செவ்வாய் அடைவதால் இந்த ஜாதகர் மிஸ்ர பலன்களை அடைவர்.

ஆனால் செவ்வாய்க்கு சுபக்கிரக பார்வையும், கேந்திர பலமும் ஏற்பட்டால் செவ்வாய் தெசா காலத்தில் இவர்கள் சுப பலன்களை அடையப்பெறுவார்கள்.

துலாம் லக்னம்

துலாம் லக்னத்தில் பிறந்தவர்களின் ஜாதகத்தில் தனசப்தமாதிபத்தியம் செவ்வாய்க்கு ஏற்படுவதால் இந்த ஜாதகர் செவ்வாய் தெசா காலத்தில் பொருள் விரையம், தீராத பிணிகள் மற்றும் பலவித விபத்திற்குரிய கண்டம் ஆகியவை அடையப்பெறுவார்கள்.

ஆனால் செவ்வாய் கிரகத்துடன் சுபக்கிரகம் சேர்க்கை ஏற்பட்டால் இந்த ஜாதகர் சுப பலன்களை அடைவார்கள்.

விருச்சிக லக்னம்

விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்கள் செவ்வாய் லக்னாதிபதியாக இருப்பினும், செவ்வாய் தெசா காலத்தில் வண்டி, வாகனம், நெருப்பு சம்பந்தமான விபத்துக்கள் அடையப்பெறுவார்.

ஆனால் லக்னம் செவ்வாயை குருபகவான் தமது பார்வையால் பார்த்தால், இந்த ஜாதகர் சகல நற்பலன்களையும் அடையப் பெறுவார்கள்.

தனுசு லக்னம்

தனுசு லக்னத்தில் பிறந்தவர்களின் ஜாதகத்தில் இதுவரை அனுபவித்து வந்த கஷ்டங்களுக்கு நிவர்த்தியாக, பலவித நற்பலன்கள் வெகுகாலமாக முடிவிற்கு வராத விடயங்கள், உத்தியோகத்தில் வெகுவான முன்னேற்றம், புகழ் மற்றும் பெரும் பதவிகளை அடையப்பெறுவார்கள்.

மகர லக்னம்

மகர லக்னத்தில் பிறந்தவர்களின் ஜாதகத்தில் செவ்வாய் சுகலாபாதிபத்தியம் பெற்று, தமது தெசாவில் ராஜயோகமான வாழ்க்கை, தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றம், அசையா சொத்துக்கள் சேர்க்கை போன்ற அனைத்திலும் வெற்றி வாய்ப்பை அடையப்பெறுவார்கள்.

கும்பம் லக்னம்

கும்ப லக்னத்தில் பிறந்தவர்களின் ஜாதகத்தில் செவ்வாய் 3-10க்கு உடைய ஆதிபத்தியம் பெற்று, தமது தெசா காலத்தில் நன்மைகள், தீமைகள் கலந்த பலன்களை அளிப்பார்.

இருப்பினும் செவ்வாய் உடன் சுக்கிரன் இணைந்து அமையப்பெற்றால், தமது தெசா காலம் முழுவதும் பிரபலமான ராஜயோக வாழ்க்கையை அடையப்பெறுவார்கள்.

மீன லக்னம்

மீன லக்னத்தில் பிறந்தவர்களின் ஜாதகத்தில் செவ்வாய் தனபாக்தியாபதித்யம் பெற்று செவ்வாயின் தெசா காலத்தில் முழுவதும் நன்மைகள் மற்றும் தீமைகள் கலந்த பலன்களை அடைவர்.

ஆனால் செவ்வாய் கிரகத்துடன் குருபகவான் இணைந்திருந்தால், இந்த ஜாதகர் தொழிலில் முன்னேற்றம், அசையா சொத்துக்கள் சேர்க்கை பெற்று வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவார்கள்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்