காதல் ஜோதிடம்: உங்க ராசிக்கு எப்படி?

Report Print Fathima Fathima in ஜோதிடம்

காதலர் தினத்தன்று உங்களுக்கு காதல் உணர்வு எப்படி என்று பார்ப்போம்

மேஷம் - நிச்சயம் காதலிப்பர், காதலிக்கப்படுவர், காதலிக்க ஏற்ற குணம், எண்ணம் முரண்டு பிடிக்கும்.

ரிஷபம் - எளிதில் கவர்ந்து காதலிக்க வைக்கப்படுவதில் கில்லாடி, தூய்மையான காதலுக்கு சொந்தக்காரர்.

மிதுனம் - தங்களையே காதலிக்கும் இயல்பு குணம் உண்டு. பிற காதலை ஏற்க ரொம்ப யோசிப்பர்.

கடகம் - வேண்டாமென ஒதுக்கிப் போய் விடுவர், தானாக தவிர்ப்பதால் தோல்வியிலிருந்து தப்பித்துக் கொள்வர்.

சிம்மம் - காதலை மகத்துவமாய் எடுத்துக் கொள்வர், இதயத்தில் இருக்கும் சிறந்த காதலை வெளிப்படுத்த தெரியாது.

கன்னி - அன்போடு கடமை உணர்வும் கொண்டவர்கள், யோசித்தே காதலில் ஈடுபடுவர்.

துலாம் - கை வந்த கலை காதல், எளிதாக காதல் வாய்க்கும், ஆனால் திருமணத்தில் முடியாது.

விருச்சிகம் - காதலை அதிகம் காதலிப்பர், தன்னை பிறர் காதலிக்க வேண்டும் என காத்திருப்பார்.

தனுசு - திறமையாக காதலை கையாண்டு வெற்றி பெறுவர், ஆயுள் முழுவதும் காதலியேயே வாழ்க்கையை செலவழிப்பார்.

மகரம் - காதல் இல்லாமல் இருக்க முடியாதவர், காதலுக்கு முக்கியத்துவம் தரக்கூடியவர்.

கும்பம் - உண்மை உயிர் என காதலை கொண்டாடுவர், புரிந்து கொள்வதும் புரிந்திருப்பதுமே காதல் என நம்புவர்.

மீனம் - அன்பும் பொறுமையும் நிலைத்திருப்பது போல் காதலும் அதில் வெற்றியும் நிலையாய் பெறுபவர், அன்பிற்காக அனைத்தையும் இழப்பவர்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்