இந்த 6 ஆறு ராசிக்காரர்களும் செம்ம அறிவாளிகளாம்: உங்க ராசி இருக்கா?

Report Print Fathima Fathima in ஜோதிடம்
1855Shares
1855Shares
ibctamil.com

ஒவ்வொருவரும் ஒரே மாதிரியான திறமைகள் இருப்பதில்லை, ஒவ்வொரு நபருக்கும் அறிவு, திறமை வேறுபடும்.

ராசிப்படி ஒருவரது அறிவுத்திறனை தெரிந்து கொள்ளலாம்.

துலாம்

பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் சிறந்து விளங்குபவர்கள் துலாம் ராசிக்காரர்கள், மற்றவர்களும் வந்து ஆலோசனை கேட்பார்கள், இவர்களது பதில் திருப்திப்படுத்தும் விதமாக இருக்கும், நடைமுறைக்கு ஏற்றவாறு செயல்பாடுகளில் ஈடுபடக்கூடியவர்கள்.

சிறந்த ஆலோசனை வழங்குவதால் மற்றவர்களும் இவர்களை தேடிவருவார்கள்.

கும்பம்

சிறந்த புரிதல் குணம் கொண்ட கும்ப ராசிக்காரர்கள், சூழ்நிலைகளையும், அந்த சூழ்நிலையில் இரு தரப்பினர்களும் எப்படி நடந்து கொள்வார்கள் என்பது பற்றி முழுமையான புரிதலுடன் இருப்பார்கள். இவர்கள் மற்றவர்கள் பக்கம் இருக்கும் நியாயங்களை கேட்க கூடிய திறன் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

ஒன்றை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் அதைப்பற்றி அலசி ஆராய்ந்து படித்து தெரிந்து கொள்வார்கள்.

கன்னி

மிகவும் சிக்கலான சூழ்நிலைகளை கூட சுலபமாக கையாளும் திறமை படைத்தவர்கள் கன்னி ராசிக்காரர்கள். இவர்கள் ஒரு முடிவில் ஒரு படி எடுத்து வைக்கும் முன்னர் அதனை சுற்றி உள்ள அனைத்து விஷயங்களையும் அலசி ஆராய்ந்து அதன் பின்னர் தான் முடிவு எடுப்பார்கள்.

முதலீடுகள் செய்வதில் திறமைசாலிகளாக இருப்பார்கள். இவர்கள் பயம் அறியாதவர்கள் என்று சொல்லலாம்.

மீனம்

இந்த ராசிக்காரகள் உணர்ச்சிபூர்வமானவர்களாக இருப்பார்கள். இவர்கள் உணர்வு ரீதியாக மற்றவர்களை புரிந்து கொள்பவர்களாக இருப்பார்கள். தங்களது உணர்வுகளை வெளிப்படையாக வெளிக்காட்டுபவர்களாக இருக்க மாட்டார்கள்.

இவர்களது ஆறாம் அறிவானது இவர்கள் ஒரு சில கடினமான சூழ்நிலைகளை கையாழ்வதற்கும், ஆபத்துக்களில் தப்பிக்கவும் உதவியாக இருக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் அறிவுத்திறன் அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் மிகவும் வலிமையானவர்களாக இருக்கிறார்கள். தங்களை ஏமாற்றுபவர்கள் மற்றும் மற்றவர்களது மனதில் என்ன தீய குணம் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை பற்றி எல்லாம் முழுமையாக அறிந்தவர்களாக இருப்பார்கள்.

மிதுனம்

பல திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் பிரச்சனையின் ஒரு புறம் மட்டுமே பார்க்க கூடியவர்களாக இருப்பார்கள். இவர்கள் பல வேலைகளை ஒரே சமயத்தில் செய்வதில் திறமை வாய்ந்தவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் ஒருவரை பார்த்தே அவர்கள் எப்படி பட்டவர்கள் என்பதை உணர்ந்து கொள்ளும் திறமை கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்