உண்மையை சரியாக கூறும் எகிப்திய ஜோதிடம்: உங்களை பற்றி என்ன சொல்கிறது?

Report Print Printha in ஜோதிடம்

எகிப்தியர்கள் வருங்காலத்தில் நடக்க போகும் நிகழ்வுகளை மிக துல்லியமாக ஆராய்வதில் திறமை வாய்ந்தவர்கள். இவர்கள் கணிக்கும் ஜோதிடமானது மிகவும் துல்லியமானது என்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த வகையில், இந்த எகிப்திய ஜோதிட முறையானது உங்களை பற்றி என்ன சொல்கிறது என்பது பற்றி பார்க்கலாம் வாங்க..

ஜனவரி 8–21 மற்றும் பிப்ரவரி 1–11

இந்த திகதிக்குள் பிறந்தவர்கள் கடுமையான உழைப்பாளிகளாக இருப்பார்கள், தைரியம், தன்னம்பிக்கை வாய்ந்தவர்களாகவும் இருப்பார்கள். மற்றவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்டு அதில் உள்ள நல்ல விடயங்களை ஏற்றுக் கொள்பவராகவும் இருப்பார்கள்.

கடுமையான சூழ்நிலைகளில் இவர்களது பொருமையை எளிதாக தவறவிட்டு விடுவார்கள். இவர்களுடைய நல்ல குணங்கள் உதவி செய்பவராக இருப்பார்கள்.

இவர்களின் எதிர்மறை குணங்கள் தனிமை மற்றும் ரகசியமானவர்களாக இருப்பது தான். இவர்களுக்கு சிறந்த வேலை நிதி சார்ந்த தொழில்கள் ஆகும்.

மே 9–27, ஜூன் 29 மற்றும் ஜூலை 13

இந்த திகதிகளுக்குள் பிறந்தவர்களுடைய ஆன்மா மிகவும் தூய்மையானது. இவர்கள் உணர்ச்சிகரமானவர்கள் மற்றும் க்ரியோட்டிவ்வாக யோசிக்கும் திறமை கொண்டவர்கள். இவர்கள் தனியாக இருக்கும் போது சிறப்பாக வேலை செய்ய கூடியவர்கள்.

இவர்கள் தங்களது வாழ்வில் நடப்பதை தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொள்கிறார்கள். இவர்களுக்கு இந்த ஒரு விடயங்களும் கடினமாக இருக்காது.

இவர்கள் உண்மை, மற்றும் கருணை உள்ளம் கொண்டவர்கள். இவர்களுக்கு எதிர்மறை குணங்கள் என்றால், அது கட்டுப்பாடு, ஆக்கிரோஷமான மற்றும் அதிக போட்டித்தன்மை கொண்டவராக இருப்பது தான். இவர்களுக்கு சிறந்த வேலை ஆலோசகர் ஆகும்.

ஜூலை 14-28, செப்டம்பர் 23–27 மற்றும் அக்டோபர் 3–17

இந்த திகதியில் பிறந்தவர்கள் சற்று கூச்ச சுபாவம் கொண்டவர்கள். இவர்கள் கூட்டம் இல்லாத தனிமையான சூழலையே அதிகம் விரும்புவார்கள். இவர்கள் தனிமையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்.

இவர்கள் அழகான மற்றும் வாழ்க்கையை பற்றி சிந்திக்கும் திறன் கொண்டவர்கள். ஆனால் இவர்களுக்கு பொசசீவ் குணம் எதிர்மறையாக இருக்கும். இவர்களுக்கு சிறந்த வேலை எழுத்தாளர் ஆகும்.

பிப்ரவரி 12–29 மற்றும் ஆகஸ்ட் 20–31

இந்த திகதியில் பிறந்தவர்கள் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களாகவும், பிறர் மீது அக்கறை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். முக்கியமாக இவர்களுக்கு தங்களது குடும்பம் மற்றும் நண்பர்கள் மீது அதிக அக்கறை மற்றும் பாசம் இருக்கும்.

மேலும் இவர்கள் தங்களுக்கு முன்பின் தெரியாத நபர்கள் சூழ்ந்திருக்கும் இடத்தில் சிறிது வெட்கப்பட்டு போவார்கள். சென்சிடிவ் ஆனவர்களாகவும் இருப்பார்கள். இவர்களின் நல்ல குணங்கள் அன்பு, பாசம் மற்றும் நியாயமாக நடப்பவர்கள். எதிர்மறை என்றால் ஆர்வ கோளாறு, வேகம் ஆகும். இவர்களுக்கு சிறந்த வேலை நீதிபதி அல்லது வழக்குறைஞர் ஆகும்.

ஏப்ரல்-20, மே-8 மற்றும் ஆகஸ்ட் 12–19

இந்த திகதியில் பிறந்தவர்கள் துணிச்சல், தன்னம்பிக்கை, பாசம் மற்றும் தைரியமான உள்ளம் கொண்டவர்கள். தங்களது குடும்பம் என்றால் இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். இவர்கள் தனது லட்சியங்களை எந்த ஒரு சூழ்நிலைகளிலும் அடைந்தே ஆக வேண்டும் என்று இருப்பார்கள்.

பிறரின் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பார்கள். இவர்களின் நல்ல குணங்கள் உறுதியான மனப்பான்மை, வலிமை, தீய குணம் என்றால் சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ள மாட்டார்கள். இவர்களுக்கு சிறந்த வேலை அரசியல் சார்ந்த வேலைகள் ஆகும்.

மார்ச் 11–31, அக்டோபர் 18–29 மற்றும் டிசம்பர் 19–31

இந்த திகதியில் பிறந்தவர்கள் பெண்களின் பாதுகாவலனாக இருப்பார்கள். எதையும் நேருக்கு நேர் பேசி விடும் குணம், சுறுசுறுப்புத்தன்மை, விளையாட்டு குணம், நகைச்சுவை குணம் ஆகியவை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

இவர்களின் நல்ல குணம் என்றால், தாராளமான குணம், லட்சிய மற்றும் உணர்ச்சிப்பூர்வம் ஆகும். தீய குணம் என்றால் மற்றவர்களை சார்ந்து இருப்பார்கள், இவர்களுக்கு சிறந்த வேலை பேஷன் அல்லது கலைத்துறை சார்ந்த வேலைகள் ஆகும்.

ஜனவரி 1–7, ஜூன் 19–28, செம்படம்பர் 1–7 மற்றும் நவம்பர் 18–26

இந்த திகதியில் பிறந்தவர்கள் பிறப்பில் இருந்தே மற்றவர்கள் மீது அன்பு, அக்கறை கொண்டவர்கள். தனக்கு பிடித்த ஒருவரை எந்த காரணம் கொண்டு விட்டுக் கொடுக்க மாட்டார்கள். இவர்களின் நல்ல குணங்கள் அமைதியாக இருப்பார்கள். தீய குணம் என்றால் ஆதிக்க குணம் தான். இவர்களுக்கு சிறந்த வேலை ஆசிரியர் ஆகும்.

ஜனவரி 22–31 மற்றும் செம்டம்பர் 8–22

இந்த திகதியில் பிறந்தவர்கள் மற்றவர்களை பாதுகாக்கும் குணம் கொண்டவர்கள். தான் செய்யும் செயலில் மிகவும் கவனம் செலுத்தும் குணம் கொண்டவர்கள். ஒரு விடயத்தை சாதித்தே ஆக வேண்டும் என்ற மனப்பான்மை இவர்களிடம் அதிகமாக இருக்கும்.

தன்னம்பிக்கை குணம் இவர்களிடம் அதிகமாக இருக்கும். அமைதியானவர்கள். பொருமையானவர்கள். உறுதி, கவனம் மற்றும் கடின உழைப்பாளி இவர்களின் நல்ல குணமாகவும், மன சோர்வு தீய குணமாக இருக்கும். இவர்களுக்கு சிறந்த வேலை கணக்காளர் ஆகும்.

மார்ச் 1–10 மற்றும் நவம்பர் 27, டிசம்பர் 18

இந்த திகதியில் பிறந்தவர்கள் பிறப்பிலேயே மிகவும் தன்னம்பிக்கை கொண்டவர்களாகவும், அறிவாளிகளாகவும் இருப்பார்கள். பிறப்பிலேயே தலைமை குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களது பேச்சிலேயே ஒரு அன்பு தெரியும்.

இவர்களின் நல்ல குணங்கள் நேர்த்தியானவர்கள், தன்னை மாற்றிக் கொள்ளும் இயல்பு கொண்டவர்கள். எதிர்மறை என்றால் அதிகார குணம் ஆகும். இவர்களுக்கு சிறந்த வேலை ஆசிரியர் ஆகும்.

ஜூலை 29, ஆகஸ்ட் , அக்டோபர் 30 மற்றும் நவம்பர் 7

இந்த திகதியில் பிறந்தவர்கள் நன்றாக அனைவருடனும் பேசும் திறமை, எளிமை, நேர்மை ஆகிய குணத்தை கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இவர்களின் தீய குணம் என்றால் பொறுமை இல்லாதது தான். இவர்களின் சிறந்த வேலை பிறரை மகிழ்விக்கும் வேலையாக இருக்கும்.

மே 28, ஜூன் 18, செப்டம்பர் 28 மற்றும் அக்டோபர் 2

இந்த திகதியில் பிறந்தவர்கள் கருத்துக்களை சிறப்பான முறையில் மற்றவர்களிடம் கொண்டு சேர்க்கும் திறமை கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் அனைத்திலும் சிறந்தவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் உள்ள எதிர்மறை குணம் என்றால் அது பிறரை அடிபணிய வைக்கும் குணம் தான். இவர்களுக்கு சிறந்த வேலை வேலைவாய்ப்பு அதிகாரி அல்லது ஆசிரியர் ஆகும்.

ஏப்ரல் 1-19, நவம்பர் 8 மற்றும் நவம்பர் 17

இந்த திகதியில் பிறந்தவர்கள் அனைவரிடமும் அன்பாக பழகும் தன்மை கொண்வர்கள். எளிதாக தன்னை சுற்றி ஒரு கூட்டத்தை அமைத்துக் கொள்வார்கள். மற்றவர்களின் மீது அன்பும் மரியாதையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.

ஒருவேலையை முடிக்கும் வரை இவர்களுக்கு பொறுமை இருக்காது. க்ரியேட்டிவிட்டி, கேட்கும் திறன், தலைமை குணம் ஆகியவை நல்ல குணம் இருக்கும். இவர்களுக்கு சிறந்த வேலை ஆசிரியர் அல்லது வழக்குறைஞர் ஆகும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்