இந்த மாதத்தில் 2 பௌர்ணமி வருகிறது: உங்க ராசிக்கு என்ன நடக்கும்?

Report Print Printha in ஜோதிடம்

இந்த வருடத்தின் தொடக்கத்தில் முதல் பௌர்ணமியானது ஜனவரி மாதம் முதல் திகதியிலும் மற்றொரு பௌர்ணமி இதே ஜனவரி மாதத்தின் இறுதி திகதியிலும் வருகிறது.

அப்படி இரண்டு பௌர்ணமியும் ஒரே மதத்தில் வருவதால் ஜோதிடத்தில் உள்ள 12 ராசிகளுக்குமே நடக்கப்போவது நன்மையா? அல்லது தீமையா? என்பதை பார்க்கலாம்.

மேஷம்

மேஷம் ராசிக்காரர்களுக்கு இந்த முழுநிலவு ஆனது மகிழ்ச்சியை தருவதாக இருக்கும். இந்த முழுநிலவு காலத்தில் இவர்களின் காதல் உறவுகள் மற்றும் கணவன், மனைவி உறவுகள் மேம்படும்.

இவர்களுக்கு இல்லற வாழ்க்கை மற்றும் அலுவலக வாழ்க்கையில் இம்மாதத்தில் சிறு சிறு பிரச்சனைகள் வந்து போனாலும், பிரச்சனைகள் வந்த வேகத்தில் மறைந்து விடும்.

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு முதல் பவுர்ணமி காலத்தில் உறவுகளுக்கு இடையே உண்டான பிரச்சனைகளை மன்னித்து விடுவீர்கள். அதனால் உறவுகளுக்கு இடையே அன்பும், அன்னியோனியமும் பெருகும்.

ஆனால் இரண்டாவது பவுர்ணமி காலத்தில் அதிக பணிச் சுமையில் மாட்டிக் கொள்ளலாம். எனவே இந்த இரண்டு பவுர்ணமிகளுக்கு இடைப்பட்ட காலங்களில் இன்பம், துன்பம் இரண்டுமே கலந்ததாக இருக்கும்.

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்களுக்கு இந்த 2018-ஆம் வருடம் முழுவதும் ஆரோக்கியம் மற்றும் வேலை சார்ந்ததாகவே இருக்கும். இந்த முதல் பவுர்ணமி காலத்தில் இருந்து உடலை பிட்டாக வைத்துக் கொள்ளும் வழியையும், சத்தான உணவுகளை சாப்பிடுவதையும் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

அதோடு மட்டுமில்லாமல் இவர்கள் வேலையில் அதிக கவனம் செலுத்த வேண்டியதும் கூட மிகவும் அவசியமாகும்.

கடகம்

கடகம் ராசிக்காரர்களுக்கு இந்த முதல் முழுநிலவு காலத்தில் கிடைக்க வேண்டிய நன்மதிப்புகள் அனைத்தும் கிடைக்காமல் தள்ளி போவது போன்று தெரியும்.

ஆனால் நிச்சயமாக இவர்களுக்கான வெகுமதிகள் வந்து சேரும். இரண்டாவது முழு நிலவு காலத்தில் இவர்களது பிரச்சனைகள் அனைத்தும் விலகி, தொழில் மற்றும் உறவுகள் சுமூகமாக இருக்கும்.

சிம்மம்

சிம்மம் ராசிக்காரர்களுக்கு இந்த முழுநிலவு நாள் நன்மையை கொடுக்கும். உறவுகளுக்குள் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். இவர்கள் இதுவரை செய்து வந்த நல்ல காரியங்களுக்கான நன்மைகள் இவர்களை நிச்சயமாக தேடி வந்து சேரும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் இதுவரை நடந்து வந்த தேவையற்ற விடயங்கள் அனைத்தும் இனி மறைந்து போகும். முதலாவது முழுநிலவானது உங்களது உறவுகளுக்கு இடையில் பல நல்ல மாற்றங்களை கொண்டு வரும்.

சிலருக்கு காதல் கைகூடும். ஆனால் இரண்டாவது முழுநிலவு காலத்தில் பல நேர்மறையான விடயங்கள் இவர்களை சுற்றி நடக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை நல்ல பாதையை நோக்கி செல்லும் காலம் இது. இனி இவர்கள் தங்களின் வாழ்க்கையில் உயரத்தை எட்டுவார்கள்.

இவர்களுக்கு இதுவரை தடைப்பட்டு வந்த காரியங்கள் அனைத்துமே நல்ல படியாக நடக்கும். இவர்களின் நீண்ட நாள் கனவுகள் வெற்றியடைந்து, வாழ்க்கையில் உயர்வு கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்கள் நீண்ட நாட்களாக சாதிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த ஒரு விடயத்தை செய்து, அதில் வெற்றி காண்பார்கள். இந்த முழுநிலவு நாளில் புதிய பாதையை தொடங்குவார்கள்.

இவர்கள் தங்களது மனது என்ன சொல்கிறதோ அதன் படி செயல்படுவார்கள். அதனால் இவர்கள் வெற்றி பாதையில் செல்வார்கள்.

மகரம்

மகரம் ராசிக்காரர்கள் வேலையில் கவனமாக செயல்படுவது மிகவும் அவசியமாகும். இவர்கள் உயர் அதிகரிகளிடம் வாக்குவாதம் செய்யக் கூடாது.

இவர்கள் எந்த காரியத்தை முதலில் செய்ய வேண்டும், எந்த காரியத்தை இறுதியில் செய்ய வேண்டும் என்பது போன்ற விடயங்களை உணர்ந்து செயல்படுவார்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் யாரையும் முழுமையாக நம்பாதீர்கள். உறவுகளுக்கு இடையே சிறுசிறு சிக்கல்கள் வந்தாலும் அவை விரைவில் சரியாகும்.

ஆனால் இவர்கள் வாயை கட்டுப்படுத்தி வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். இந்த முழுநிலவு நாளானது இவர்களின் வாழ்க்கையில் நேர்மறை எண்ணங்களை கொண்டு வந்து மாற்றங்கள் உண்டாகும்.

கும்பம்

கும்பம் ராசிக்காரர்கள் முழுநிலவு வரும் காலத்தில் உணர்வுபூர்வமாக சமநிலையில் இருக்க பழகிக் கொள்ள வேண்டும்.

இவர்கள் தங்களின் கோபங்கள் மற்றும் உணர்ச்சி வசப்படுவது போன்றவற்றை கட்டுபடுத்தி வைத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.

மீனம்

மீனம் ராசிக்காரர்கள் உண்மையான நண்பர்கள், உண்மையான எதிரிகள் யார் என்பதை இந்த காலகட்டத்தில் புரிந்து நடந்து கொள்ள வேண்டியது இருக்கும்.

இவர்கள் தனது வாழ்க்கையின் லட்சியங்கள், பொழுதுபோக்குகள் என்ன என்பது போன்றவற்றை புரிந்துக் கொள்ளக் கூடும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers