நீங்க எந்த ராசி? 2018ல் காதல் திருமணம் கைகூடுமாம்

Report Print Printha in ஜோதிடம்

காதல் உறவில் எதிர்பார்ப்புகள், பாசம் போன்றவை அதிகம் இருக்கும். அதே சமயம் ஏமாற்றம், மோதலும் அதிகமாக காணப்படும். அத்தகைய காதல் திருமணம் எந்த ராசியினருக்கு அடுத்த ஆண்டு சிறப்பாக அமையும் என்பதை பார்க்கலாம் வாங்க...

மேஷம்

மேஷம் ராசியினருக்கு திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் உண்டாகலாம். அதனால் உங்களுடைய துணையுடன் சிறு சிறு மோதல்கள் வந்து போகலாம்.

ஆனால் உங்கள் இருவருக்குள் இருக்கும் காதல் பெரிய நெருக்கடிகளை தீர்க்கும். இந்த ஆண்டின் முதல் பகுதியில் உங்களது காதல் வாழ்க்கை அவ்வளவு நன்றாக செல்லவில்லை என்றாலும் அடுத்த பாதியில் சிறப்பாக அமையும்.

ரிஷபம்

ரிஷபம் ராசியினருக்கு அடுத்த வருடம் காதல் உறவு மேம்படும். ஆனால் காதல் உறவில் ஒற்றுமை அதிகரிக்க நீங்கள் நேர்மையான முறையில் நடந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.

திருமண வாழ்க்கையில், உங்களது துணையின் உணர்வுகளை புரிந்து கொண்டு நடந்து கொண்டால் உங்களது காதல் சிறக்கும்.

மிதுனம்

மிதுனம் ராசியினருக்கு காதல் உறவில் சில உணர்ச்சிமிக்க சம்பவங்கள் நடக்கலாம். உங்களது காதலை நிரூபித்து காட்ட நீங்கள் சில செயல்களை செய்ய வேண்டியிருக்கும்.

ஆனால் இவர்கள் சாவாலன வாழ்க்கை சூழலை சாதூர்யமாக சந்திக்க தயாராக இருக்க வேண்டியது அவசியம். காதலில் பிரச்சனையை கொண்டுவரும் விவாதங்களை தவிர்த்தால் காதல் சிறப்பாக அமையும்.

கடகம்

கடகம் ராசியினருக்கு அடுத்த ஆண்டு வாழ்க்கையை அனுபவித்து வாழ கற்றுக் கொள்வார்கள். இவர்கள் துணையுடன் சந்தோஷமான நேரங்களை செலவிட கூடும்.

இவர்களின் பிரிந்த காதல் கை கூடும். காதல் மற்றும் திருமண உறவில் நெருக்கம் அதிகரிப்பதால் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

சிம்மம்

சிம்மம் ராசியினர் தங்களின் கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இவர்கள் குரலை உயர்த்தி பேசுவது துணைக்கு மன சங்கடத்தை ஏற்படுத்தும்.

இவர்களுக்கு காதலில் சகிப்புதன்மை என்பது மிகவும் அவசியம். அதை புரிந்து கொண்டு நடந்தால், காதலில் வரும் சிக்கல்களை சமாளித்து காதல் வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக் கொள்ளலாம்.

கன்னி

கன்னி ராசியினருக்கு உறவுகளுக்குள் சில சண்டைகள் வந்து போகலாம். காதலில் வரும் கஷ்டம், நஷ்டம் என்பதை புரிந்து கொண்டு தேவையற்ற வாக்குவாதங்களை தவித்தால் காதல் வாழ்க்கை அமோகமாக இருக்கும்.

துலாம்

துலாம் ராசியினருக்கு காதல் வாழ்க்கை அடுத்த வருடம் இனிமையாக இருக்கும். நீண்ட நாளாக காத்திருந்த ஒரு விடயம் சீக்கிரமாக கிடைக்கும். காதல் வாழ்க்கையில் பல சங்கடங்கள் வந்தாலும், அடுத்த ஆண்டு காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம் ராசியினருக்கு வரும் 2018-ம் ஆண்டு இன்பம், துன்பம் இரண்டும் கலந்த கலவையாக காதல் வாழ்க்கை அமையும். ஆனால் நேர்மறை சிந்தனைகள் இவர்களின் காதலுக்கு வலு சேர்க்கும். இவர்களுக்கு காதல் உறவு நீடித்து இருக்க கூடியதாக இருக்கும்.

தனுசு

தனுசு ராசியினர்களில் சிலர் காதலில் இருப்பவர்கள் தங்களது வாழ்க்கையின் அடுத்த கட்டமான திருமண உறவை நோக்கி நகர்வார்கள்.

இவர்களுக்கு 2018 -ம் ஆண்டு சாதகமானதாக இருக்கும். காதல் உறவில் ஆர்வமும், முன்னேற்றமும் அதிகரிக்கும். அதனால் தனது துணையின் விருப்பத்திற்கு ஏற்றவாறு நடந்து கொள்வார்.

மகரம்

மகரம் ராசியினருக்கு இத்தனை ஆண்டுகளாக இருந்த வந்த கஷ்டங்கள் தீரும். காதல் உறவு வலுபெற்று அமையும். இவர்கள் தங்களின் துணையுடன் சிறிது கூடுதல் நேரத்தை செலவிட்டு மனம் விட்டு பேச வேண்டியது அவசியம்.

ஏனெனில் அது காதல் உறவில் இனிமையை கூட்டும். ஆனால் சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் மனதை புண்படுத்தலாம்.

கும்பம்

கும்பம் ராசியினருக்கு 2018-ம் ஆண்டில் நட்பு, காதல் ஆகியவை கைகூடும், இவர்களின் துணையுடன் இனிமையான நேரங்களை செலவிடுவார்கள்.

இவர்களுக்கு தங்களின் துணையுடன் ரொமேண்டிக்கான அனுபவங்கள் கிடைக்கும். ஆனால் அடுத்த ஆண்டின் நடுப்பகுதியில் சில பிரச்சனைகள் தோன்றி மறையலாம்.

மீனம்

மீனம் ராசியினருக்கு காதல் உறவு நீண்டு கொண்டே செல்லும். வாக்கு வாதங்களை நிறுத்திக் கொள்வது நல்லது. இது இவர்களின் காதலை சீராக்கும்.

ஆனால் இவர்கள் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு என்று ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கிக் கொண்டால் காதல் வாழ்க்கை சிறக்கும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்