மார்கழி மாதம் எந்த ராசிக்கு அதிஷ்டம்? உங்க ராசிக்கு பாருங்க

Report Print Printha in ஜோதிடம்
408Shares

தெய்வங்களுக்கு உகந்த மார்கழி மாதத்தில் எந்த ராசிக்காரர்களின் வாழ்வில் புதிய திருப்பங்கள் மற்றும் அதிர்ஷ்டங்கள் உண்டாகும் என்று ஜோதிடம் கூறுவதை பார்க்கலாம்.

மேஷம்

மேஷம் ராசிக்காரர்களுக்கு மார்கழியில் பொருளாதாரம் சுமாரான நிலையில் இருக்கும். 14-ம் திகதிக்கு பின் குடும்ப வாழ்க்கையில் கவனம் தேவை.

தொழில் தொடர்பான சுப செய்திகள் வந்து சேரும். 20-ம் திகதிக்கு பின் நினைத்த யாவும் எளிதில் கைகூடும். பதவி உயர்வை எதிர் நோக்கி இருப்பவர்களுக்கு விருப்பம் நிறைவேறும்.

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு விடா முயற்சி பல நன்மைகளை அள்ளித்தரும். பணம் கொடுக்கல் வாங்கலில் இடையூறு உண்டாகும். இவர்களுக்கு அனைத்து வகையிலும் மனைவி உறுதுணையாக இருப்பார்கள்.

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் வேலை சிறப்பாக இருக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம். கணவன் மனைவி அன்னியோனியம் அதிகரிக்கும்.

பண வரவு திருப்தியாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். வாகனங்களில் செல்லும் போது கவனமாக செல்ல வேண்டியது மிக அவசியம்.

கடகம்

கடகம் ராசிக்காரர்களுக்கு தொழில் சுமாராக இருந்தாலும், உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கஷ்ட நஷ்டங்களை சந்தித்தாலும் இவர்களின் மன தைரியம் குறையாது.

சிம்மம்

சிம்மம் ராசிக்காரர்களுக்கு திடீர் அதிஷ்ட வாய்ப்புகள் உண்டாகும். மதிப்பு மரியாதை கூடும். உயர் அதிகாரிகளுடன் அனுசரித்து போவது நல்லது. சிலருக்கு திடீர் இடமாற்றம் அல்லது பணிமாற்றம் கிடைக்க கூடும். கொடுக்கல் வாங்கல் விடயத்தில் கவனம் தேவை.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு பண வரவு கணிசமாக உயரும். புதிய ஆடை மற்றும் ஆபரணங்கள் சேரும். பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். அலுவலகத்தில் இதுவரை இருந்து வந்த இறுக்கமான சூழ்நிலைகள் மாறும் நிலை உண்டாகும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய முயற்சிகள் மிக எளிதாக வெற்றி அடையும். கணவன், மனைவி இடையில் அன்னியோனியம் அதிகரிக்கும். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு அனைத்து விடயங்களிலும் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. குடும்பத்தில் சில பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும்.

ஆடை, ஆபரணங்கள் சேரும். வீட்டில் மகிழ்ச்சி நிலவும். அலுவலகத்தில் பணி சுமை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு மாதத்தின் தொடக்கத்தில் அனைத்து காரியங்களிலும் வெற்றி உண்டாகும். பணவரவு மகிழ்ச்சி தருவதாக அமையும்.

அலுவலகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை கிடைக்கும். சிலருக்கு வேலையில் இடமாற்றம் கிடைக்கும்.

மகரம்

மகரம் ராசிக்காரர்களுக்கு பணப்புழக்கம் கணிசமாக அதிகரிக்கும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். புதிய ஆடைகள், ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. அலுவலகத்தில் வேலை சுமை அதிகரிக்கும். சிலருக்கு பதவி மாற்றமும், இட மாற்றமும் உண்டாகும்.

கும்பம்

கும்பம் ராசிக்காரர்களுக்கு வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். கணவன் - மனைவி இடையில் நெருக்கம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் வெற்றிகள் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

மீனம்

மீனம் ராசிக்காரர்கள் பூர்வீக சொத்து பிரச்சனைகளை பொறுமையாக கையாள வேண்டும். தடைபட்ட திருமணங்கள் நடக்கும். அலுவலத்தில் மேலதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். மீன ராசியுள்ள பெண்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்