உங்க கையில் குருமேடு இப்படி இருந்தால் அதிர்ஷ்டமாம்

Report Print Printha in ஜோதிடம்

கைரேகை ஜோதிடத்தில் உள்ளங்கையை பார்த்து எந்த மேடு மற்ற மேடுகளை விட அதிகமாக உயர்ந்து காணப்படுகிறது என்பதை வைத்து ஒருவரின் குணநலன்களை தெரிந்துக் கொள்ள முடியும்.

குரு மேடு எப்படி இருந்தால் என்ன பலன்?

குரு மேடு என்பது ஆள்காட்டி விரலுக்கு அடிப்பாகத்தில் இருக்கும். குரு மேடு உப்பலாக இருந்தால் உச்சமேடு எனவும், பள்ளமாக இருந்தால் நீச்ச மேடு எனவும், சமமாக இருந்தால் நடுத்த மேடு எனவும் அழைக்கப்படுகிறது.

குரு மேடு உச்சமாக இருந்தால் நல்ல பலன்களாக இருக்கும். நீச்சமாக இருந்தால் கெடு பலன்களையும், சமமாக இருந்தால் நல்லவை, கெட்டவை இரண்டும் சமமாக நடக்கும்.

இந்த மேடு கையில் நன்றாக அமைந்து இருந்தால் நடுத்தர உயரமாக இருப்பார்கள். ஆரோக்கியமான தேகம் மற்றும் நடை ஆகியவற்றில் கம்பீரமாக திகழ்வார்கள்.

குருமேடு உயர்ந்து இருந்தால் குணநலன்கள் எப்படி இருக்கும்?
  • மற்ற மேடுகளை விட குருமேடு உயர்ந்து இருந்தால் அவர்கள் நியாயம், நேர்மை, நாணயம் உடையவராகவும், தெய்வீக நம்கிக்கை உள்ளவராகவும் இருப்பார்கள்.
  • இவர்கள் உபதேசம் செய்வதில் திறமை உள்ளவராகவும், உயர்ந்த லட்சியம், தன்னை தானே புகழ்ந்து பேசும் சுபாவம் மற்றும் யாருக்கும் கட்டுப்படாத குணங்களை கொண்டவராக திகழ்வார்கள்.
  • சமூக சேவை, அரசியல், அழகிய பொருட்கள் ஆகியவற்றின் மீது அதிக பிரியம் கொள்பவராகவும், சுத்தம், சுகாதாரம் மற்றும் தனது காரியத்தில் மிகுந்த கவனம் கொண்டவராகவும் இருப்பார்கள்.
  • எதிலும் முதன்மையாக திகழ ஆர்வமாகவும், பணிந்து போவதில் விருப்பம் இல்லாதவராகவும் இருப்பார்கள். தன்மானம் உடைய இவர்கள் பிறரின் பரிகாசம் செய்வதை வெறுப்பார்கள்.
  • எந்த துறையில் இருந்தாலும் அதிர்ஷ்டமுள்ளவராக திகழ்வார்கள். விடா முயற்சி, ஆற்றல் பெற்றவர்கள் தங்கள் வருமானத்தை பொதுநலம், தெய்வ காரியங்களுக்கு செலவிட தயங்க மாட்டார்கள்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers