கார்த்திகை மாத ராசிபலன்கள்

Report Print Fathima Fathima in ஜோதிடம்
மேஷம்

நல்லவர் கருத்தை மதிக்கும் மேஷ ராசி அன்பர்களே!

செவ்வாயால் மாத முற்பகுதியில் நன்மை மேலோங்கும். நவ.28-ல் சுக்கிரன் சாதகமான இடத்திற்கு வருகிறார். புதன், குரு மாதம் முழுவதும் நற்பலன் தர காத்திருக்கின்றனர். உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். நகை-, ஆபரணங்கள் வாங்கும் யோகமுண்டாகும். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். எந்த பிரச்னையையும் சாதுர்யமாக எதிர் கொள்ளும் சாமர்த்தியம் பெறுவீர்கள்.

சமூகத்தில் செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர வசதிகள் கிடைக்கும். திட்டமிட்டபடி வீட்டில் சுபநிகழ்ச்சி நடத்தி மகிழ்வீர்கள். புதிய வீடு, -மனை, வாகனம் டிச. 2க்குள் வாங்க வாய்ப்புண்டு.

கடந்த மாதம் குடும்பத்தில் பிரச்னைகள் நிகழ்ந்திருக்கலாம். கணவன்,- மனைவி இடையே சண்டை சச்சரவு ஏற்பட்டு இருக்க கூடும். இதற்கு காரணம் புதன் 7-ம் இடத்தில் இருப்பதே. இந்த மாதம் 8-ம் இடத்தில் இருப்பதால் குடும்பத்தில் அமைதி நிலைக்கும். தம்பதியினர் கருத்து வேறுபாடு நீங்கி ஒன்றுபடுவர். பிள்ளைகளின் செயல்பாட்டால் பெருமை உண்டாகும். புதனால் உங்கள் முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.

புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். டிச.1,2ல் பெண்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நவ.26,27-ல் உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் டிச.7,8ல் அவர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும். செவ்வாயால் டிச. 2-க்கு பிறகு வீண் அலைச்சல் ஏற்படும். பயணத்தின் போது சற்று கவனம் தேவை. உடல்நலம் சீராக இருக்கும்.

தொழில், வியாபாரத்தில் நல்ல வருமானத்தை காணலாம். அரசு வகையில் எந்த சலுகைகளையும் எதிர்பார்க்க வேண்டாம். டிச.11,12,13-ல் திடீர் பண வரவுக்கு வாய்ப்புண்டு.

பணியாளர்கள் பணியில் நல்ல வளர்ச்சி காண்பர். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் சிலர் உயர் பதவியை அடைய வாய்ப்புண்டு. பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். மாத முற்பகுதியில் சுக்கிரன் திருப்தியற்ற நிலையில் இருப்பதால், சக பெண் ஊழியர்களிடம் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். அதன் பின் நிலைமை சீராகும். அரசு வேலையில் இருப்பவர்கள் அதிக அக்கறையுடன் இருக்கவும்.

கலைஞர்கள் அதிக சிரத்தை எடுத்து முன்னேற வேண்டியதிருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம்.

பெண்கள் வகையில் இருந்த இடர்பாடு நவ.27-க்கு பிறகு மறையும். அதன் பின் அதே பெண்கள் தவறை உணர்ந்து உதவிகரமாக செயல்படுவர். புதிய ஒப்பந்தம் கையெ ழுத்தாகும். அரசியல்வாதிகள், பொது நலசேவகர்கள் சிறப்பான பலன் பெறுவர். கடந்த கால உழைப்பின் பயன் தற்போது வந்து சேரும். மாணவர்கள் கல்வியில் சிறப்பான நிலை பெறுவர். போட்டி, பந்தயங்களில் பங்கேற்று வெற்றி காண்பர். ஆசிரியர்கள், ஆன்றோர்களின் ஆதரவு கிடைக்கும். டிச.1-க்கு பிறகு நட்பு விஷயத்தில் கவனம் தேவை.

விவசாயிகளுக்கு கீரை, காய்கறிகள், பயறு, நெல், கோதுமை போன்றவை நல்ல மகசூலை கொடுக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் டிச.2க்குள் கைகூடும். வழக்கு விவகாரத்தில் முடிவு திருப்திகரமாக இருக்கும். கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.

பெண்கள் மகிழ்ச்சிகரமாக இருப்பர். குடும்ப பிரச்னையில் இருந்து விடுபட்டு நிம்மதி காண்பர். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். டிச.5,6-ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். நவ. 24,25 ல் எதிர்பாராத நன்மை நடக்கும்.

நல்ல நாள்: நவ.17, 18, 24, 25, 26, 27,

டிச. 1, 2, 5, 6, 11, 12, 13, 14, 15

கவன நாள்: நவ.19, 20- சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 3,7 நிறம்: பச்சை, மஞ்சள்

பரிகாரம்:

 • வெள்ளியன்று லட்சுமிக்கு அர்ச்சனை
 • சனியன்று சனீஸ்வரருக்கு எள் விளக்கு
 • கார்த்திகையன்று முருகனுக்கு பாலாபிஷேகம்.

ரிஷபம்

வெற்றி மனப்பான்மையுடன் செயல்படும் ரிஷப ராசி அன்பர்களே!

செவ்வாய் டிச.2ல் இருந்து நற்பலன் தர காத்திருக்கிறார். மற்ற கிரகங்களால் சுமாரான பலனே உண்டாகும். ஆனாலும் கவலை கொள்ள வேண்டாம். காரணம் ராகுவால் மாதம் முழுவதும் நன்மை உண்டாகும். அவரால் செயலில் வெற்றி உண்டாகும். டிச.1க்கு பிறகு பொருளாதார வளம் அதிகரிக்கும்.

பயணம் மூலம் இனிய அனுபவம் காண்பீர்கள். உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்கலாம். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் கூடி வரும். குடும்பத்தில் வீண்விவாதம், பிரச்னை குறுக்கிடலாம். கணவன், மனைவி இடையே சண்டை சச்சரவு ஏற்பட வாய்ப்புண்டு. இதற்கு காரணம் புதன் 7ம் இடத்தில்இருப்பதே. ஆனால் டிச. 1ல் செவ்வாய் இடமாறுவதால் பிரச்னை அடியோடு விலகும். குடும்பத்தில் அமைதி நிலைக்கும். பிள்ளைகளின் செயல்பாட்டால் பெருமை உண்டாகும். வீட்டுக்கு தேவையான சகல வசதிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். நவ.28,29,30 ல் உறவினர் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் டிச.9,10ல் அவர்கள் வகையில் கருத்துவேறுபாடு உருவாகலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். டிச.3,4ல் பெண்கள் உதவிகரமாக செயல்படுவர். விருந்து, விழா என சென்று வருவீர்கள்.

கேதுவால் உடல்நலக்குறைவு ஏற்படலாம். விழிப்புடன் இருந்தால் பிரச்னையை தவிர்க்கலாம். பிள்ளைகளின் உடல் நலனில் அக்கறை தேவை. சூரியனால் அலைச்சல் அதிகரிக்கும்.

தொழில், வியாபாரத்தில் வீண் அலைச்சல், பகைவர் தொல்லையை சந்திக்க வேண்டியதுஇருக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்ள நேரிடும். அரசு வகையில் எதிர்பார்த்த சலுகை தள்ளிப் போகும். புதிய தொழில் முயற்சி தற்போது வேண்டாம். பணவிஷயத்தில் புதியவர்களிடம் பொறுப்பை ஒப்படைப்பது நல்லதல்ல. டிச.1க்கு பிறகு பகைவர் தொல்லையில் விடுபட வாய்ப்புண்டு. நவ.17,18, டிச.14,15 ல் எதிர்பாராத வருமானம் கிடைக்கும். டிச. 1,2,5,6 ல் பண விரயம் ஆகலாம். உங்கள் முயற்சிகளில் தடைகள் குறுக்கிடலாம்.

பணியாளர்கள் வேலைப் பளுவுக்கு ஆளாக நேரிடும். சக ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்துப் போகவும். நவ.26,27ல் சிறப்பான பலன்களை காணலாம். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்.

கலைஞர்கள் பணியைத் தவிர மற்ற எதையும் சிந்திக்க வேண்டாம். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாக விடாமுயற்சி தேவைப்படும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய புகழ், பாராட்டு தட்டி பறிக்கப்படலாம். முயற்சிகளில் இருந்த தடையும், மனதில் ஏற்பட்ட சோர்வும், நவ.27க்கு பிறகு மறையும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சீரான பலனை காண்பர்.

டிச.1க்கு பிறகு நற்பலனை எதிர்நோக்கலாம். புகழ், கவுரவம் மேலோங்கும். மாணவர்கள் அதிக சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியதிருக்கும். மாத மத்தியில் புதன் வக்கிரத்தில் சிக்குவதால் கூடுதல் முயற்சி தேவைப்படும்.

போட்டியில் வெற்றி பெற கடின முயற்சி அவசியம். ஆசிரியர்கள் ஆலோனையை ஏற்று நடந்தால் நன்மை காணலாம்.

விவசாயிகளுக்கு எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும். நெல், கரும்பு, எள், கேழ் வரகு, பழ வகைகள், காய்கறி வகைகள் மூலம் அதிக வருமானம் காணலாம். கால்நடை வளர்ப்பின் மூலம் ஆதாயம் பெருகும். புதிய சொத்து வாங்க நினைப்பவர்களின் எண்ணம், டிச.1க்கு பிறகு கைகூடும்.

பெண்கள் குடும்பத்தினருடன் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பொறுமையும் நிதானமும் தேவை. டிச.1க்கு பிறகு அண்டை வீட்டாரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். டிச.7,8 ல் எதிர்பார்ப்பு நிறைவேறும். பிறந்த வீட்டினரின் உதவி கிடைக்கப் பெறுவர்.

நல்ல நாள்: நவ.17,18,19,20,26,27,28,29,30, டிச. 3,4,7,8,14,15

கவன நாள்: நவ.21,22,23 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 5,6 நிறம்: பச்சை, கருநீலம்

பரிகாரம்:

 • சனிக்கிழமை ராமருக்கு துளசி அர்ச்சனை
 • வெள்ளிக்கிழமை துர்க்கைக்கு நெய் தீபம்
 • ஞாயிறு ராகு காலத்தில் பைரவர் வழிபாடு.

மிதுனம்

நட்புக்கு முன்னுரிமை அளிக்கும் மிதுன ராசி அன்பர்களே!

இந்த மாதம் நவ.28க்கு பிறகு சுக்கிரன் சாதகமற்ற நிலைக்கு சென்றாலும் அதிக பாதிப்பு ஏற்படாது. ஏனெனில் சூரியன், புதன், குரு, சனி நன்மை தர காத்திருக்கின்றனர். ராகு, கேதுவால் பொருளாதார தடை குறுக்கிட்டாலும் அதை குரு, சனிபலத்தால் முறியடிப்பீர்கள். செயலில் அனுகூலம் உண்டாகும். மக்கள் மத்தியில் மதிப்பு அதிகரிக்கும். பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள்.

குடும்பத்தில் பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர். பெண்களால் நன்மை கிடைக்கும். பொன், பொருள் சேரும். பக்தி எண்ணம் மேலோங்கும். திருமணம், புதுமனை புகுவிழா போன்ற சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன், மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை உருவாகும். டிச.1,2ல் உறவினர்கள் வருகை இருக்கும். அவர்களால் நன்மை ஏற்படும். அதே நேரம் டிச.11,12,13ல் அவர்கள் வகையில் கருத்துவேறுபாடு வர வாய்ப்புண்டு. சற்று ஒதுங்கி இருக்கவும்.

டிச.5,6ல் பெண்களால் நற்பலனை எதிர் நோக்கலாம். விருந்து, விழா என சென்று வருவீர்கள். ஆரோக்கியம் மேம்படும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எதிரிகளால் குறுக்கிட்ட முட்டுக்கட்டை அடியோடு விலகும். புதிய வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம்.

கோயில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில் சிறந்து விளங்கும். டிச.3,4,7,8ல் சந்திரனால் தடைகள் வரலாம். நவ.19,20ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும்.

செவ்வாயால் தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கியவர்கள் அவர்கள் பிடியில் இருந்து டிச.1க்கு பிறகு விடுபடுவர்.

பணியாளர்களுக்கு விரும்பிய பதவி உயர்வு கிடைக்கும். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சீராக இருக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவுடன் செயல்படுவர். கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் டிச.1 வரை பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போகவும். நவ.28,29,30ல் எதிர்பார்ப்பு நிறைவேற வாய்ப்புண்டு.

கலைஞர்களுக்கு ரசிகர்களின் மத்தியில் புகழ், பாராட்டு கிடைக்கும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். தொழில்ரீதியாக அடிக்கடி வெளியூர் செல்ல நேரிடும்.

நவ.27க்கு பிறகு முயற்சிகளில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படும். ஆனால், வருமானத்திற்கு குறைவிருக்காது.

அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் உழைப்புக்கு ஏற்ற பலனை எதிர்பார்க்க முடியாது. தொண்டர் நலனுக்காக பணம் செலவழிக்க நேரிடும்.

மாணவர்கள் கல்வியில் நல்ல வளர்ச்சி காண்பர். புதன் சாதகமாக காணப்படுவதால் போட்டியில் வெற்றி கிடைக்கும். ஆசிரியர்களின் மத்தியில் நற்பெயர் உண்டாகும். பெற்றோர் பெருமைப்படும் விதத்தில் செயல்படுவர்.

விவசாயிகள் நெல், கோதுமை, கேழ்வரகு, சோளம் போன்ற பயிர்கள் மூலம் நல்ல மகசூல் பெறுவர். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப் போகும். கால்நடை வளர்ப்பின் மூலம் எதிர்பார்த்த பலன் கிடைக்காது. வழக்கு, விவகாரத்தில் முடிவு சுமாராக இருக்கும்.

பெண்கள் குடும்பத்தில் நற்பெயர் காண்பர். உறவினர் மத்தியில் சுமூக நிலை உண்டாகும். தோழிகள் உதவிகரமாக செயல்படுவர். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். வேலைக்கு செல்லும்

பெண்களுக்கு புதிய பதவி தேடி வரும். சுய தொழில் புரியும் பெண்கள், வங்கி கடன் மூலம் விரிவாக்கப்பணியில் ஈடுபடுவர்.

நல்ல நாள்: நவ.19,20,21,22,23, 28,29,30, டிச.1,2,5,6,9,10

கவன நாள்: நவ. 24,25 சந்திராஷ்டமம்.

அதிர்ஷ்ட எண்: 1,7,9 நிறம்: மஞ்சள், பச்சை

பரிகாரம்:

 • செவ்வாயன்று முருகனுக்கு பாலாபிஷேகம்
 • ஞாயிறு ராகு காலத்தில் பைரவர் வழிபாடு
 • வெள்ளியன்று மாரியம்மனுக்கு நெய் தீபம்

கடகம்

அனைவரிடமும் அன்பு காட்டும் கடக ராசி அன்பர்களே!

புதன் இந்த மாதம் சாதகமான இடத்திற்கு வருகிறார். செவ்வாய் டிச. 31 வரை நற்பலன் கொடுப்பார். சுக்கிரனால் வாழ்வில் வசந்தம் கிடைக்கப் பெறுவீர்கள். மனதில் பக்தி எண்ணம் மேம்படும். எந்த ஒரு செயலையும் வெற்றிகரமாக செய்து முடிக்கும் வல்லமை பெறுவீர்கள். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். அந்தஸ்து உயரும். செல்வாக்குடன் திகழ்வீர்கள்.

குடும்பத்தில் கருத்துவேறுபாடு நீங்கி சுமூக நிலை ஏற்படும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்க யோகமுண்டாகும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆடம்பர வசதி பெருகும். மாத பிற்பகுதியில் பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர். பொன், பொருள் சேரும் யோகமுண்டு. டிச.3,4ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் நவ.17,18, டிச. 14,15ல் அவர்கள் வகையில் கருத்துவேறுபாடு வர வாய்ப்புண்டு. சற்று ஒதுங்கி இருக்கவும். டிச. 7,8 ல் பெண்களால் நன்மை கிடைக்கும்.

தொழில், வியாபாரத்தில் வளர்முகமாக இருப்பீர்கள். கடந்த கால உழைப்பின் பயன் கிடைக்கப் பெறுவீர்கள். கூட்டாளிகளிடையே ஒற்றுமை மேலோங்கும். பகைவர்களின் தொல்லை குறுக்கிட்டாலும் வெற்றிகரமாக சமாளிப்பீர்கள். புதனால் அவ்வப்போது அலைச்சல் ஏற்படலாம். நவ.21,22,23ல் எதிர்பாராத நன்மை கிடைக்கும். டிச.1க்கு பிறகு பணவிஷயத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.

பணியாளர்களுக்கு சீரான வளர்ச்சி உண்டாகும். அரசு பணியாளர்கள் தங்கள் கோரிக் கைகளை டிச.2க்குள் கேட்டு பெறுவது நல்லது. தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்துப் போகவும். கோரிக்கைகள் நிறைவேறுவது எளிதல்ல. சிலர் திடீர் பணி, இடமாற்றத்திற்கு ஆளாவர். வேலை நிமித்தமாக சிலர் குடும்பத்தை விட்டு பிரிந்து செல்லும் நிலை ஏற்படலாம். டிச.1,2 ஆகிய நாட்கள் சிறப்பானதாக அமையும்.

கலைஞர்கள் சாதுர்யமாக செயல்பட்டு புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். விருது அல்லது பாராட்டுக்கு குறைவிருக்காது. சக பெண் கலைஞர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த வளர்ச்சி கிடைக்கப் பெறுவர். சமூகநல சேவகர்கள் மக்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர். டிச.1 க்கு பிறகு மற்றவர்களிடம் அனுசரித்து போவது நல்லது.

மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். பெற்றோர், ஆசிரியர்களின் அறிவுரையை கேட்டு நடக்கவும்.

விவசாயிகள் எதிர்பார்த்ததை விட அதிக மகசூல் கிடைக்கப் பெறுவர். எள், கரும்பு, கீரை, பழ வகைகளில் நல்ல மகசூல் கிடைக்கப் பெறுவர். கால்நடை வளர்ப்பின் மூலம் ஆதாயம் பெருகும். புதிய சொத்து வாங்க நினைப்பவர்கள் டிச.2க்குள் பயன்படுத்திக் கொள்ளவும்.

பெண்கள் குடும்பத்தினர் மத்தியில் நற்பெயர் காண்பர். கணவனின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். பெண் காவலர்கள் சிறப்பான பலனை பெறுவர். புதிய பதவி தேடி வரும். டிச.11,12,13ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம்.. நவ.24,25ல் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். சகோதரிகளால் உதவி கிடைக்கும். தனியார் துறையில் வேலைக்கு செல்லும் பெண்கள் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு சுமாராக இருக்கும்.

நல்ல நாள்: நவ.21,22,23,24,25, டிச.1,2,3,4,7,8,11,12,13

கவன நாள்: நவ. 26,27 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்:4,8, நிறம்: வெள்ளை, நீலம்

பரிகாரம்:

 • தினமும் காலையில் சூரிய நமஸ்காரம்
 • சனிக்கிழமை அனுமனுக்கு துளசி அர்ச்சனை
 • வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம்

சிம்மம்

சிந்தனையில் தெளிவு கொண்ட சிம்ம ராசி அன்பர்களே!

சுக்கிரனின் நற்பலன்கள் மாதம் முழுவதும் தொடரும். விடாமுயற்சியால் வாழ்வில் முன்னேறுவீர்கள். டிச.2ல் செவ்வாய் சாதகமான இடத்திற்கு வருகிறார். புதன், கேது மாதம் முழுவதும் நற்பலனை வாரி வழங்குவர். பொருளாதார வளம் சிறக்கும். மனதில் அபார ஆற்றல் பிறக்கும். நகை, ஆபரணம் வாங்க யோகமுண்டாகும். சுக்கிரனின் பலத்தால் சமூகத்தில் மதிப்பு உயரும். மாத பிற் பகுதியில் செவ்வாயால் மனதில் பக்தி உயர்வு மேம்படும். புதிய வீடு, வாகனம் வாங்க யோகம் கூடி வரும்.

கணவன், மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். வாழ்வில் மகிழ்ச்சி மேலோங்கும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாத முற்பகுதியில் அனாவசிய செலவை குறைப்பது நல்லது. சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு போகலாம். டிச.1க்கு பிறகு குடும்பத்தோடு புனித தலங் களுக்கு சென்று வருவீர்கள். டிச.9,10ல் பெண்கள் உதவிகரமாக இருப்பர். விருந்து, விழா என சென்று வருவீர்கள். நவ.19,20ல் உறவினர்கள் வகையில் பிரச்னை உருவாகலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். ஆனால் டிச.5,6 ல் உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும்.

சூரியனால் கண்நோய்கள் உருவாகலாம். மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் மிதமான லாபம் கிடைக்கும். மாத முற்பகுதியில் செவ்வாயால் வீண் விரயம் ஏற்பட வாய்ப்புண்டு.

புதிய தொழில் முயற்சி, விரிவாக்கம் செய்வதை தவிர்க்கவும். பகைவரால் மறை முகப்போட்டியை சந்திக்க நேரிடலாம். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு, செலவு கணக்கை சரியாக வைப்பது நல்லது. நவ.24,25ல் எதிர்பாராத வகையில் வருமானம் கிடைக்கும். டிச. 7,8,11,12,13 ல் சந்திரனால் தடைகள் குறுக்கிடலாம். டிச.1 க்கு பிறகு கோயில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில் வளர்ச்சி பெறும்.

பணியாளர்கள் பணிச்சுமையில் இருந்து விடுபடுவர். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. எதிர்பார்த்த கோரிக்கைகள் ஓரளவு நிறைவேறும்.

அரசு வேலையில் இருப்பவர்கள் வேலையில் அக்கறையுடன் இருக்கவும். புதன் சாதகமாக இருப்பதால் பின்தங்கிய நிலை உண்டாகாது. டிச. 1க்கு பிறகு போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர். டிச.3,4ல் சிறப்பான பலன்களை எதிர்பார்க்கலாம். நெருப்பு, மின்சாரம் தொடர்பான வேலையில் இருப்பவர்கள் கவனமாக இருக்கவும்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்க பெறுவர். ரசிகர்களின் மத்தியில் நற்பெயர் உண்டாகும். அரசிடம் இருந்து விருது, பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி, பொறுப்பு கிடைக்க யோகமுண்டு.

சமூகநல சேவகர்களின் எண்ணங்கள் ஈடேறும். மாணவர்கள் முன்னேற்ற பாதையில் செல்வர். ஆசிரியர்களின் அறிவுரை வளர்ச்சிக்கு துணை நிற்கும். புதன் சாதகமாக இருப்பதால் போட்டிகளில் பங்கேற்று வெற்றி வாகை சூடுவர்.

விவசாயிகள் சிறப்பான மகசூல் கிடைக்கப் பெறுவர். மஞ்சள், கேழ்வரகு, சோளம் காய்கறி, பழ வகைகள் போன்றவை மூலம் நல்ல வருமானத்தை காணலாம். டிச.1க்கு பிறகு சொத்து வாங்கும் யோகம் உண்டாகும்.

பெண்கள் வாழ்வில் முன்னேற்றம் காண்பர். கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் நற்பெயர் பெறுவர். குழந்தைகளால் பெருமை கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு உயரும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். சுய தொழில் புரியும் பெண்கள் நல்ல வளர்ச்சி காண்பர். நவ.26,27 ஆகிய நாட்களில் சிறப்பான பலன் காணலாம். விருந்து விழா என சென்று வருவீர்கள்.

நல்ல நாள்: நவ.17,18,24,25,26,27, டிச. 3,4,5,6,9,10,14,15

கவன நாள்: நவ.28,29,30 சந்திராஷ்டமம்.

அதிர்ஷ்ட எண்:1,7 நிறம்: பச்சை, வெள்ளை

பரிகாரம்:

 • சனியன்று சனீஸ்வரருக்கு எண்ணெய் தீபம்
 • ஞாயிறு ராகு காலத்தில் பைரவர் வழிபாடு
 • பிரதோஷத்தன்று நந்தீஸ்வரருக்கு அர்ச்சனை

கன்னி

கண்ணியத்துடன் நடக்க விரும்பும் கன்னி ராசி அன்பர்களே!

சுக்கிரன் நவ.27ல் இடம் மாறினாலும் மாதம் முழுவதும் நன்மைகளை வாரி வழங்குவார். அதோடு சூரியன், குரு, சனி, ராகு மாதம் முழுவதும் நன்மை தர காத்திருக்கின்றனர். இதனால் வளர்ச்சிக்கான காலகட்டமாக இந்த மாதம் அமையும். மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். பொருளாதார வளம் மேம்படும். புதிய முயற்சிகளில் எந்த விதமான பின்னடைவும் உண்டாகாது. எதிர்பார்த்ததை விட வருமானம் உயரும்.

வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்திற்கு தேவையான வசதிகள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி இனிதே நடந்தேறும். கணவன், மனைவி இடையே அன்பு, பாசம் மேலோங்கும். நவ.13க்கு பிறகு குடும்பத்தில் மகிழ்ச்சி

அதிகரிக்கும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்புண்டு. டிச.11,12,13ல் பெண்கள் ஆதரவாக செயல்படுவர். விருந்து, விழா என சென்று வருவீர்கள். டிச.7,8ல் உறவினர்கள் வருகையும் அவர்களால்

நன்மையும் கிடைக்கும். ஆனால் நவ.21,22,23ல் உறவினர்கள் வகையில் பிரச்னையை சந்திக்கலாம்.

உடல் நலம் சிறப்பாக இருக்கும். மருத்துவ சிகிச்சை பெற்று வந்தவர்கள் விரைவில் வீடு திரும்புவர். தொழில், வியாபாரத்தில் லாபம் சிறப்பாக இருக்கும். சக தொழிலதிபர்களின் மத்தியில் மதிப்பு உயரும். மாத முற்பகுதியில் வியாபாரிகளுக்கு அரசின் சலுகை கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும். பங்கு வர்த்தகம் மூலம் நல்ல லாபத்தை காணலாம். புதிய தொழில் முயற்சியில் வெற்றி உண்டாகும் நவ. 26,27ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும். ஆனால் நவ.17,18, டிச.9,10,14,15ல் சந்திரனால் தடைகள் வரலாம். டிச.1க்கு பிறகு பொருள் களவு ஏற்பட வாய்ப்பு உண்டு. பகைவர் வகையில் தொல்லை வரும். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.

பணியாளர்கள் சுக்கிரனால் நல்ல முன்னேற்றம் காணலாம். மேல் அதிகாரிகளின் ஆலோசனை கிடைக்கும். கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். சக பெண் ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். டிச.5,6 ஆகிய நாட்கள் நன்மை பெற வாய்ப்புண்டு. டிச.31க்கு பிறகு நெருப்பு, மின்சாரம் தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது. அரசு வேலையில் இருப்பவர்கள் வேலையில் அக்கறையுடன் இருக்கவும்.

கலைஞர்கள் தங்களின் வாழ்வில் உற்சாகமான பலனைக் காண்பர். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். மாத முற்பகுதியில் அரசிடம் இருந்து விருது கிடைக்கும். நவ.27க்குப் பிறகு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள், சமூக நல சேவகர்கள் சிறப்பான நிலையில் இருப்பர்.

மாணவர்களின் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். குரு அருளால் கூடுதல் நன்மையை எதிர்பார்க்கலாம். புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் சிரத்தை கொண்டு முன்னேற வேண்டியதிருக்கும். ஆசிரியர்கள் அறிவுரையை ஏற்பது நல்லது.

விவசாயிகள் இந்த மாதத்தில் மஞ்சள், கேழ்வரகு, சோளம், பயறு வகைகள் மூலம் நல்ல வருமானத்தைக் காணலாம். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப்போகும்.

பெண்கள் புத்தாடை, அணிகலன்கள் வாங்கி மகிழ்வர். வாழ்வில் குதூகலம் அடைவர். கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் நன்மதிப்பு கிடைக்கும். நவ. 28,29,30 ஆகியவை சிறப்பான நாட்களாக அமையும். விருந்து விழா என சென்று வருவீர்கள். சகோதரிகள் ஆதரவுடன் செயல்படுவர். நவ.19,20ல் வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர்.

நல்ல நாள்: நவ.19,20,28,29,30, டிச. 5,6,௭,௮,11

கவன நாள்: டிச.1,2 சந்திராஷ்டமம்.

அதிர்ஷ்ட எண்: 1,9 நிறம்: வெள்ளை, கருநீலம்

பரிகாரம்:

 • பவுர்ணமியின்று முருகன் வழிபாடு
 • ராகு,கேதுவுக்கு அர்ச்சனை
 • திங்களன்று சிவனுக்கு வில்வார்ச்சனை

துலாம்

தூய்மையின் அடையாளமாகத் திகழும் துலாம் ராசி அன்பர்களே!

சுக்கிரன் மட்டும் நன்மை தரும் நிலையில் இருக்கிறார். மற்ற கிரகங்கள் அனைத்தும் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் எந்த ஒரு செயலையும் சற்று முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியதிருக்கும். ஆனால் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்காமல் போகாது. குடும்ப விஷயங்களில் பொறுமையை கடைபிடிக்க வேண்டியது இருக்கும். ஆனால், குருவின் அனைத்து பார்வைகளும் சிறப்பாக அமைந்துள்ளதால் பிற்போக்கான நிலை ஏதும் உண்டாகாது.

சுக்கிரனால் மாத முற்பகுதியில் பெண்களால் நன்மை கிடைக்கும். அவர்களால் பொன், பொருள் சேரும். விருந்து, விழா என அடிக்கடி சென்று வருவீர்கள். நவ.27 க்கு பிறகு பொருளாதார வளம் சிறக்கும். சமூகத்தில் மதிப்பு உயரும். அரசாங்க வகையில் நன்மை ஏற்படும். புதிய முயற்சியில் வெற்றி கிடைக்க, பெண்கள் வசம் பொறுப்புகளை ஒப்படைப்பது நல்லது.

குடும்பத்தில் கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும். நவ.17,18, டிச.14,15ல் பெண்கள் மிகவும் உதவிகரமாக செயல் படுவர். நவ. 24,25ல் உறவினர் வகையில் கருத்துவேறுபாடு உருவாகலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். ஆனால், டிச.9,10ல் உறவினர் வருகையும் அவர்கள் மூலம் நன்மையும் கிடைக்கும். குருவின் பார்வையால் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தேறும். பொருளாதார வளம் மேம்படும். பெண்களால் மேன்மை கிடைக்கும். புதுமணத்தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உடல்நலனில் அக்கறை தேவை. பித்தம், மயக்கம் போன்ற உபாதைகள் வரலாம். கண் தொடர்பான நோய்கள் வரலாம். பயணத்தின் போது கவனம் தேவை.

தொழில், வியாபாரம் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட தொழில் நிறுவனம் வளர்ச்சி அடையும். நவ.27க்கு பிறகு வியாபாரிகளுக்கு அரசாங்க வகையில் சலுகை கிடைக்கும். வங்கி கடன் மூலம் விரிவாக்கப்பணியை மேற்கொள்வீர்கள். நவ.19,20, டிச.11,12,13 ல் சந்திரனால் தடைகள் வரலாம். நவ.28,29,30 ல் எதிர்பாராத பணவரவு கிடைக்கும்.

பணியாளர்கள் அதிக சிரத்தை எடுத்தே பணியாற்ற வேண்டியது இருக்கும். மற்றவர் உதவியை நாடாமல் தன் கையே தனக்கு உதவி என உழைக்கும் சூழ்நிலை உருவாகும். விடாமுயற்சி இருந்தால் மட்டுமே எதிர்பார்க்கும் கோரிக்கைகள் நிறைவேறும். மாத முற்பகுதியில் சக பெண் ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர். டிச.7,8ல் சிறப்பான பலனை எதிர் நோக்கலாம்.

நவ. 27க்கு பிறகு அரசு ஊழியர்கள் பணியில் முன்னேற்றம் காணலாம். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். ரசிகர்களின் மத்தியில் புகழும், பாராட்டும் கிடைக்க பெறுவீர்கள்.

நவ.27க்கு பிறகு அரசிடம் இருந்து விருது, பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் எதிர்பார்த்த பதவியை பெற முடியாது.

மாணவர்களுக்கு கடந்த காலத்தில் இருந்த மந்த நிலை மாறும். ஆசிரியர்களின் அறிவுரை வளர்ச்சிக்கு கைகொடுக்கும். புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. குருவின் பார்வையால் ஓரளவு நன்மையை எதிர்பார்க்கலாம்.

விவசாயிகள் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். சிலருக்கு உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்காமல் போகலாம். அதிக முதலீடு செய்யும் பணப்பயிர்களைத் தவிர்ப்பது நல்லது. புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடாமல் தள்ளிப்போகும். வழக்கு, விவகாரங்களில் முடிவு சுமாராக இருக்கும். புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம்.

பெண்கள் நன்மதிப்பை பெற்று வாழ்வில் குதூகம் அடைவர். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் நடந்து கொள்வர். தனியார் துறையில் வேலை பார்க்கும் பெண்களுக்கு வேலையில் பொறுமையும், நிதானமும் தேவை.

நல்ல நாள்: நவ.17,18,21,22,23,28,29,30, டிச.1,2,7,8,9,10,14,15

கவன நாள்: டிச.3,4 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 4,8 நிறம்: வெள்ளை, மஞ்சள்

பரிகாரம்:

 • சதுர்த்தியன்று விநாயகர் வழிபாடு
 • ஏகாதசியன்று பெருமாளுக்கு அர்ச்சனை
 • ராகு காலத்தில் துர்க்கைக்கு தீபம்.

விருச்சிகம்

மற்றவரை வியப்பில் ஆழ்த்தும் விருச்சிக ராசி அன்பர்களே!

செவ்வாய் டிச.2ல் சாதகமற்ற இடத்திற்கு செல்கிறார். இதை கண்டு நீங்கள் அஞ்ச வேண்டாம். காரணம் நவ.27முதல் சுக்கிரன் சாதகமான இடத்திற்கு வருகிறார். கேதுவாலும் நற்பலன் அதிகரிக்கும். மற்ற கிரகங்கள் அனைத்தும் சுமாரான நிலையில் உள்ளன. தெய்வ அனுகூலம் தொடர்ந்து கிடைக்கும். மாத தொடக்கத்தில் செவ்வாயால் செயலில் வெற்றி உண்டாகும். பொருளாதார வளம் சிறப்படையும். புதிய வீடு, வாகனம் வாங்க யோகமுண்டு.

குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். நவ.27க்கு பிறகு பெண்களால் பொன், பொருள் சேரும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். நவ.26,27ல் உறவினர்கள் வகையில் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு. சற்று ஒதுங்கி இருக்கவும். ஆனால் டிச.11,12,13ல் உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். நவ. 19,20 ல் பெண்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர். புதனால் அவ்வப்போது குடும்பத்தில் பிரச்னை குறுக்கிடலாம். கணவன், மனைவி ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும்.

தொழில், வியாபாரத்தில் மாதத் தொடக்கத்தில் நல்ல வளர்ச்சியைக் காணலாம். லாபம் படிப்படியாக அதிகரிக்கும். தெரியாத நபரோடு நெருங்கி பழக வேண்டாம். நவ.27க்கு பிறகு பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகமும் அதிக லாபத்தை தரும். நவ. 17,18,21,22,23, டிச.14,15ல் சந்திரனால் தடைகள் வரலாம். ஆனால் டிச.1,2ல் எதிர் பாராத வகையில் பணம் கிடைக்கும்.

பணியாளர்கள் வருமானத்தால் உயர்ந்த நிலையை அடைவர். கோரிக்கைகளை டிச.2க்குள் கேட்டு பெற்று கொள்ளவும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியது இருக்கும். சிலர் வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்து செல்ல நேரிடலாம். இடமாற்றத்தை காணலாம். சக பெண் ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். டிச. 9,10 ல் எதிர்பாராமல் திடீர் வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு.

கலைஞர்கள் முயற்சிகளில் இருந்த தடை, பொருள் நஷ்டம் முதலியன நவ.27க்கு பிறகு மறையும். அதன் பிறகு ரசிகர்களின் மத்தியில் புகழ், பாராட்டுக்கு குறைவிருக்காது. புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

அரசியல்வாதிகள், பொதுநலத்தொண்டு செய்பவர்கள் சிறப்பான பலனை காண்பர். சிலருக்கு புதிய பதவி தேடி வரும். நவ. 28,29,30ல் மனக்குழப்பம் ஏற்படலாம். டிச.2ந் தேதிக்கு பிறகு பலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும். ஆனால்பணப் புழக்கம் சிறப்பாக இருக்கும்.

மாணவர்கள் அதிக சிரத்தை எடுத்து படிக்க வேண்டியது இருக்கும். நண்பர்களுடன் பொழுதுபோக்கில் ஈடுபடுவதை குறைத்துக் கொள்வது அவசியம். பெற்றோர், ஆசிரியர்களின் அறிவுரையை கேட்டு நடப்பது நல்லது.

விவசாயிகள் நல்ல வருவாயை காணலாம். நெல், கேழ்வரகு, சோளம், காய்கறி, பழவகைள் போன்ற பயிர்கள் மூலம் நல்ல மகசூலை பெறுவர்.வழக்கு, விவகாரத்தில் முடிவு சாதகமாக இருக்கும். புதிய சொத்து வாங்க நினைப்பவர்கள் டிச.2க்குள் முயற்சிப்பது நன்மையளிக்கும். வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம் புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம்.

பெண்கள் குடும்ப முன்னேற்றத்திற்காக பொறுமையை கடைபிடிக்க வேண்டியது இருக்கும். வியாபாரம் செய்யும் பெண்களுக்கு சுக்கிரனால் லாபத்துக்கு குறை இருக்காது. வேலைக்கு செல்லும் பெண்கள் பணிச்சுமையைச் சந்திப்பர். வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை.

நவ.24,25ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்க வாய்ப்புண்டு. பெற்றோர் வீட்டில் இருந்து உதவி கிடைக்கப் பெறலாம். டிச.3,4ல் விருந்து, விழா என சென்று வருவீர்கள். சகோதரிகளால் உதவி கிடைக்கும்.

நல்ல நாள்: நவ.19,20,24,25, டிச.1,2,3,4,9,10,11,12,13

கவன நாள்: டிச. 5,6 சந்திராஷ்டமம்.

அதிர்ஷ்ட எண்: 6,7 நிறம்: வெள்ளை, சிவப்பு

பரிகாரம்:

 • சனியன்று சனீஸ்வரருக்கு எள் தீபம்
 • வியாழனன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு
 • சுவாதியன்று நரசிம்மருக்கு அர்ச்சனை

தனுசு

தன்னம்பிக்கையுடன் செயலாற்றிடும் தனுசு ராசி அன்பர்களே!

சுக்கிரன் நவ.27ல் சாதகமற்ற இடத்திற்கு சென்றாலும் கவலை கொள்ள தேவை இல்லை. காரணம் செவ்வாய் டிச.2 ல் இருந்து நன்மை செய்ய காத்திருக்கிறார். குரு பலத்தால் வாழ்வில் சீரான வளர்ச்சி உண்டாகும்.

குடும்பத்தில் பணவரவுக்கு குறைவிருக்காது. சொந்தபந்தங்களின் வருகை அடிக்கடி இருக்கும். குரு பகவான் சிறப்பான இடத்தில் உள்ளதால், டிச.1க்கு பிறகு புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் கூடி வரும். மாத பிற்பகுதியில் உறவினர் வகையில் அனுகூலம் இருக்காது. குறிப்பாக நவ.28,29,30ல் அவர்கள் வகையில் வீண் பிரச்னைக்கு ஆளாகலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். நவ.17,18, டிச.14,15ல் உறவினர் வருகையால் நன்மை கிடைக்கும். நவ.21,22,23ல் பெண்கள் உதவிகரமாக செயல்படுவர்.

தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். அலைச்சல், பகைவர் தொல்லையை சந்திக்க வேண்டியதிருக்கும். சிலருக்கு பொருள் விரயம் ஏற்பட வாய்ப்புண்டு. வெளியூர் பயணத்தின் போது விழிப்புடன் இருப்பது நல்லது. அறிவைப் பயன்படுத்தி வருமானத்தை தக்க வைக்க முயற்சிக்கவும். புதிய வியாபார முயற்சி இப்போதைக்கு வேண்டாம். இருப்பதை திறமையாக நடத்தினால் போதுமானது. டிச.1க்கு பிறகு நிலைமை சீராகும். வருமானம் படிப்படியாக உயரும்.

பணியாளர்கள் திடீர் இடமாற்றத்திற்கு ஆளாவர். வேலைப் பளுவும் அதிகரிக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்துப் போவது நல்லது. முயற்சி எடுத்தால் மட்டுமே கோரிக்கைகள் நிறைவேறும். டிச.1க்குப் பிறகு உங்களைப் புரிந்து கொள்ளாமல் இருப்பவர்கள் கூட, தங்களின் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். சிலருக்கு புதிய பதவி கிடைக்கும்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். மாத பிற்பகுதியில் விடாமுயற்சி தேவைப்படும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய புகழ், பாராட்டு தட்டி பறிக்கப் படலாம். ஆனாலும் உங்கள் கவுரவத்திற்கு பங்கம் வராது. அரசியல்வாதிகள், பொது நலத்தொண்டர்கள் சீரான வளர்ச்சி காண்பர். எதிரிகள் வகையில் இருந்த தொல்லைகள், அவப்பெயர், போட்டிகள் முதலியன டிச.1க்கு பிறகு மறையும். அதன் பிறகு சிறப்பான முன்னேற்றம் காணலாம். புதிய பதவி கிடைக்கவும் யோகமுண்டு.

மாணவர்கள் கல்வியில் அதிக சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியதிருக்கும். ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்று நடந்தால் முன்னேற்றம் உண்டாகும். குரு சாதகமாக காணப்படுவதால் பின்தங்கிய நிலை உண்டாகாது.

விவசாயிகள் கரும்பு, எள், கீரை, காய்கறி வகைகளில் நல்ல மகசூலை காணலாம். கால்நடை வளர்ப்பின் மூலம் ஆதாயம் பெருகும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் டிச.1க்கு பிறகு நிறைவேறும். வழக்கு, விவகாரத்தில் சாதகமான முடிவு கிடைக்கும். கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.

பெண்கள் சுக்கிரனின் பலத்தால் நவ.27 வரை குடும்பத்தில் நற்பெயர் காண்பர். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். உங்களால் குடும்ப வாழ்வு சிறக்கும். சொந்த பந்தங்கள் அனுசரணையுடன் இருப்பர்.

டிச.5,6ல் உற்சாகமான மனநிலையுடன் செயல்படுவீர்கள். விருந்து, விழா என சென்று வருவீர்கள். சகோதரர்கள் வகையில் அனுகூலம் ஏற்படும். நவ.26,27ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து சீதனம் வரப் பெறலாம். சிலருக்கு ராகுவால் உறவினர்கள் வகையில் மனக்கசப்பும், கருத்து வேறுபாடும் ஏற்பட வாய்ப்புண்டு. ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்பு உண்டு. உஷ்ணம், தோல், தொடர்பான நோய் வரலாம். டிச. 1க்கு பிறகு நிலைமை சீராகும்.

நல்ல நாள்: நவ.17,18,21,22,23,26,27, டிச.3,4,5,6,11,12,13,14,15

கவன நாள்: டிச.7,8 சந்திராஷ்டமம்.

அதிர்ஷ்ட எண்: 2,3 நிறம்: மஞ்சள், வெள்ளை

பரிகாரம்:

 • சனிக்கிழமை சனீஸ்வரருக்கு எள் தீபம்
 • சதுர்த்தியன்று விநாயகருக்கு அர்ச்சனை
 • தினமும் காலையில் சூரிய நமஸ்காரம்

மகரம்

மனதில் பட்டதை வெளிப்படுத்தும் மகர ராசி அன்பர்களே!

புதனால் கடந்த காலத்தில் கிடைத்த நற்பலன்கள் இந்த மாதமும் தொடரும். சுக்கிரன் நவ. 27க்கு பிறகு சாதக பலனை கொடுப்பார். சூரியன், சனீஸ்வரர் சாதக பலனை கொடுப்பர். மற்ற கிரகங்கள் திருப்தியற்ற நிலையில் இருந்தாலும் தீமை உண்டாகாது. சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த அனுகூலம் உண்டாகும். புதனால் புதிய முயற்சியில் வெற்றி காண்பீர்கள். எதிரிகளின் இடையூறை எளிதில் முறியடிப்பீர்கள். பொருளாதார வளம் சிறக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும்..

குடும்பத்தில் முன்னேற்றமான சூழ்நிலை அமைந்திருக்கும். பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சி மனதில் நிலைத்திருக்கும். பெண்கள் மிக உறுதுணையாக செயல்படுவர். கணவன், மனைவி இடையே அன்பு பெருகும். நவ.27க்கு பிறகு பணப்புழக்கம் அதிகரிக்கும். நவ.19,20 ல் உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் டிச.1,2ல் உறவினர்கள் வகையில் கருத்துவேறுபாடு வர வாய்ப்புண்டு. அவர்களிடம் சற்று ஒதுங்கி இருக்கவும். நவ.24,25ல் எதிர்பார்ப்பு நிறைவேற இடமுண்டு. சிலருக்கு மனை வாங்க அல்லது வீடு கட்டும் யோகம் உண்டாகும். டிச.1க்கு பிறகு சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்பு உண்டு. அண்டை வீட்டார்களின் தொல்லை ஏற்படும்.

உடல் உபாதைகள் பூரண குணம் அடையும். டிச.1க்கு பிறகு உஷ்ணம், தோல், தொடர்பான நோய் வரலாம். பயணத்தின் போது கவனம் தேவை. டிசம்பர் 3,4,11,12,13

மனக்குழப்பம் ஏற்படலாம்.

தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் பெறும் மாதமாக இது அமையும். வியாபாரிகளுக்கு அரசின் சலுகை கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும். விரிவுபடுத்தும் எண்ணம் உள்ளவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். கூட்டாளிகளிடையே ஒற்றுமை மேம்படும். டிச.1க்கு பிறகு எதிரிகளால் தொல்லை வரலாம். டிச.5,6ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். நவ.21,22,23,26,27ல் சந்திரனால் சிறு தடைகள் குறுக்கிடலாம். பணியாளர்கள் சீரான வளர்ச்சி அடைவர். அரசு ஊழியர்களுக்கு கோரிக்கை ஒவ்வொன்றாக நிறைவேறும். எதிர்பார்த்த கடனுதவி எளிதில் கிடைக்கும். டிச.1 க்கு பிறகு சிலருக்கு விரும்பிய இடமாற்றம், பணிமாற்றம் கிடைக்கும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் முன்னேற்றமான பலனை பெறுவர். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றுக்கு தடையிருக்காது. சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். நவ.17,18,டிசம்பர் 14,15ல் எதிர்பாராத நன்மை கிடைக்கும். கலைஞர்கள் மறைமுகப்போட்டியில் சிரமத்திற்கு ஆளாவர். சிலருக்கு அவப்பெயர் உருவாகலாம். எதிலும் சற்று பொறுமையை கடைபிடிக்க வேண்டும். எதிரிகள் வகையில் இருந்த தொல்லை நவ.27க்கு பிறகு மறையும். மாத பிற்பகுதியில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சீரான நிலையில் இருப்பர். உங்களுக்கு வரவேண்டிய புகழ், பாராட்டு கிடைக்கும்.

மாணவர்கள் புதன் சாதகமாக காணப்படுவதால் நற்பலனை காணலாம். போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர்.

விவசாயிகள் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். சிலருக்கு உழைப்புக்கு ஏற்ற வருவாய் கிடைக்காமல் போகலாம். அதிக முதலீடு செய்யும் பணப் பயிர்களைத் தவிர்க்கவும். கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த பலனை காணலாம்.

பெண்கள் வாழ்வில் சிறப்படைவர். கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் நன்மதிப்பை பெறுவர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். சுய தொழில் செய்து வரும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். நவ.28,29,30ல்

புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம்.

நல்ல நாள்: நவ.17,18,19,20,24,25,28,29,30, டிச.5,6,7,8,14,15

கவன நாள்: டிச.9,10 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 1,7,9 நிறம்: சிவப்பு, பச்சை

பரிகாரம்:

 • ராகு காலத்தில் பைரவருக்கு நெய் தீபம்
 • செவ்வாயன்று முருகன் கோயில் வழிபாடு
 • வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை.

கும்பம்

நல்லவர் கருத்தை ஏற்று நடக்கும் கும்ப ராசி அன்பர்களே!

இந்த மாதம் நவ.27 வரை சுக்கிரன் நற்பலனை கொடுப்பார். புதன், குரு, ராகு, சூரியனால் நற்பலன் தொடரும். மற்ற கிரகங்கள் சுமாரான நிலையில் இருந்தாலும் பாதிப்புகள் ஏதும் நிகழாது. சமூகத்தில் செல்வாக்குக்கு எந்த குறையும் வராது. பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். நினைத்த செயல் வெற்றிகரமாக முடியும். குடும்பத் தேவைகள் ஒவ்வொன்றாக பூர்த்தி ஆகும். குடும்பத்தில் வசதி, வாய்ப்பு பெருகும். மனதில் மகிழ்ச்சி நிலைக்கும். பெண்களால் நன்மை உண்டாகும். பொன், பொருள் சேரும். கணவன், மனைவி இடையே இணக்கம் அதிகரிக்கும். நவ.26,27ல் சகோதர வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். டிச.1,2ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். நவ.21,22,23ல் உறவினர்கள் வருகையால் நன்மை உண்டாகும். டிச.3,4ல் உறவினர் வகையில் வீண் விரோதம் ஏற்படலாம். பயணத்தின் போது சற்று கவனம் தேவை.

தொழில், வியாபாரத்தில் புதுமையை புகுத்தி நவீனமயமாக்குவீர்கள். பகைவரின் சதியை முறியடிக்கும் வல்லமை உண்டாகும். பெண்களை பங்குதாரராக கொண்ட தொழில் வளர்ச்சி பெறும். கடந்த கால உழைப்பின் பயனால் அமோக லாபம் கிடைக்கும். டிச.7,8ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். நவ.24,25,28,29,30ல் முயற்சிகளில் தடை ஏற்படலாம். புதிய முதலீட்டு விஷயத்தில் அதிக கவனம் தேவை.

பணியாளர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரின் நன்மதிப்பை பெறுவர். எதிர்பார்த்த கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். சகபெண் ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் செயல்படுவர். சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேருவர். நவ.19,20ல் சிறப்பான பலனை எதிர்நோக்கலாம். உங்கள் அதிகாரம் கொடிக்கட்டி பறக்கும்.

கலைஞர்களுக்கு சுக்கிரன் சாதகமாக காணப்படுவதால் புதிய ஒப்பந்தம் எளிதாக கையெழுத்தாகும். நவ.27க்கு பிறகு எதிரியால் தொல்லை உண்டாகும். மறைமுகப் போட்டி குறுக்கிடும். சிலருக்கு அவப்பெயர் உண்டாகவும் வாய்ப்புண்டு. அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் முன்னேற்றம் காண்பர். தொண்டர் நலனில் அக்கறை செலுத்துவர். அரசியல்ரீதியான தொலைதூர பயணம் மேற்கொள்வர்.

மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர். போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர். தேர்வில் நல்ல மதிப்பெண் கிடைக்கப் பெறுவர். பெற்றோர் பெருமைப்படும் விதத்தில் நற்செயலில் ஈடுபடுவர். விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ற வருமானம் பெறுவர். நெல், கோதுமை சோளம் மற்றும் பழ வகைகள் மூலம் லாபம் அதிகரிக்கும். கால்நடை வளர்ப்பின் மூலம் எதிர்பார்த்த வருவாய் கிடைக்காது. அதிக முதலீடு செய்யாமல் குறைந்த முதலீட்டில் பயிர் செய்வது நல்லது. புது சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப்போகும்.

பெண்களுக்கு குருவால் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பின்னடைவு மறையும். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்புண்டு. உங்களின் நற்செயலால் குடும்பத்தினருக்கு பெருமை உண்டாகும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக செயல்படுவர். புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் கூட, உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை ஏற்படும். அக்கம் பக்கத்தினர் அனுசரணையாக இருப்பர். தனியார் துறையில் வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் கிடைக்கப் பெறுவர். டிச.9,10ல் பிறந்த வீட்டில் இருந்து சீதனம் வரப் பெறலாம்.

நல்ல நாள்: நவ.19,20,21,22,23, 26,27 டிச.1,2,7,8,9,10

கவன நாள்: டிச. 11,12,13 சந்திராஷ்டமம்.

அதிர்ஷ்ட எண்: 2,3,5 நிறம்: மஞ்சள், சிவப்பு

பரிகாரம்:

 • சனிக்கிழமை சனீஸ்வரருக்கு எள் விளக்கு
 • செவ்வாயன்று முருகன் கோயிலில் விளக்கு
 • வெள்ளியன்று துர்க்கைக்கு எலுமிச்சை தீபம்

மீனம்

கண்ணியத்துடன் நடக்க விரும்பும் மீன ராசி அன்பர்களே!

இந்த மாதம் சுக்கிரன் நவ.27ல் இடம் மாறினாலும், மாதம் முழுவதும் நன்மைகளை தருவார். கேதுவும் நற்பலன் தர காத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், செயலை நிறைவேற்றும்முன், தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். சூரியன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் வீண் விவாதங்களில் ஈடுபடாமல் இருக்கவும். செவ்வாயால் ஏற்படும் அலைச்சல், மனவேதனை, மனைவி வகையில் பிரச்னை, எதிரி தொல்லை முதலியன டிச.1 க்கு பிறகு மறையும்.

குடும்பத்தில் பெண்களின் நிலை மேலோங்கி நிற்கும். ஆடம்பர வசதிகள் பெருகும். வீட்டில் மகிழ்ச்சியும், நிம்மதியும் குடியிருக்கும். பெற்றோரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். அக்கம்பக்கத்தினர் ஆதரவுடன் செயல்படுவர். கணவர், மனைவி இடையே இணக்கம் அதிகரிக்கும். நவ.28,29,30ல் சகோதரிகளால் நன்மை உண்டாகும். பொன், பொருள் சேரும். டிச.3,4ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். நவ.24,25ல் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் டிச.5,6ல் அவர்கள் வகையில் கருத்துவேறுபாடு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். புதனால் சிலர் வீண் பொல்லாப்பை சந்திக்கலாம். பொறுமையுடன் இருக்கவும்.

செவ்வாயால் உடல்நலக்குறைவு ஏற்படலாம். டிச.1க்கு பிறகு உஷ்ண, பித்தம், மயக்கம், சளி போன்ற உபாதைகள் வரலாம். நவ.19,20 ல் சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும்.

தொழில், வியாபாரத்தில் உழைப்புக்கு தகுந்த முன்னேற்றம் உண்டாகும். கேதுவால் திடீர் வாய்ப்பு மூலம் பொருளாதாரம் அதிகரிக்கும். பங்கு வர்த்தகம் மூலம் லாபம் கிடைக்க வாய்ப்புண்டு. பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் அபரிமிதமான முன்னேற்றம் பெறும். நவ.26,27, டிச.1,2ல் சந்திரனால் தடைகள் வரலாம். டிச.9,10ல் திடீர் பணவரவுக்கு வாய்ப்புண்டு. எதிரிகளின் இடையூறை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். புதனால் சிலர் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகலாம். எனவே எச்சரிக்கையுடன் பழகவும்.

பணியாளர்கள் பணிச்சுமையை சந்திப்பர். மேலதிகாரிகளிடம் அனுசரித்துப் போகவும். முக்கிய பொறுப்பை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். எதிர்பார்த்த கோரிக்கை கிடைப்பதில் தாமதம் உண்டாகும். சக பெண் ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர். நவ.21,22,23ல் சிறப்பான பலனை எதிர் நோக்கலாம். புதனால், சிலர் பணத்தை இழக்க நேரிடலாம் கவனம் தேவை.

கலைஞர்கள் விடாமுயற்சியால் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவர். பெண்கள் வகையில் இருந்த தொல்லை மறையும். அரசிடம் இருந்து விருது, பாராட்டு கிடைக்க பெறலாம். தொழில்ரீதியான பயணத்தால் இனிய அனுபவம் உண்டாகும்.

விவசாயிகளுக்கு கோதுமை, கம்பு, கேழ்வரகு, பழவகைகள் போன்றவற்றால் வருமானம் அதிகரிக்கும். புதிய சொத்துகள் வாங்கும் எண்ணம் தள்ளிப் போகும். கால் நடைவளர்ப்பின் மூலம் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும்.

பெண்கள் பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு பெருமை கொள்வர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பொறுமையும், நிதானமும் தேவைப்படும். அரசு ஊழியர்கள் பணிச்சுமைக்கு ஆளாக நேரிடலாம்.

நல்ல நாள்: நவ. 21,22,23,24,25,28,29,30, டிச.3,4,9,10,11,12,13

கவன நாள்: நவ.17,18, டிச.14,15 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 5,8 நிறம்: வெள்ளை, சிவப்பு

பரிகாரம்

 • தினமும் காலையில் சூரிய நமஸ்காரம்
 • வியாழனன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு
 • செவ்வாயன்று முருகனுக்கு பால் அபிஷேகம்

- Dina Malar

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...