உங்க ராசி என்ன? இந்த உணவுகளை சாப்பிட்டால் உடல் எடை குறையுமாம்

Report Print Printha in ஜோதிடம்

ஒருவரது ராசியின்படி குணநலன்கள், வாழ்க்கைத் துணை மற்றும் எதிர்காலம் போன்றவற்றை கணித்து கூறலாம்.

ஆனால் அதோடு மட்டுமில்லாமல் ஒருவரின் ராசியை வைத்து, அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு எந்த மாதிரியான டயட்டை பின்பற்றினால் உடல் எடை குறையும் என்பது பற்றியும் கூறுகிறது.

மேஷம்

மேஷம் ராசிக்காரர்கள், எதிலும் விரைவில் பலன் கிடைக்க வேண்டுமென்று நினைப்பார்கள். இல்லையெனில், மேற்கொள்ளும் முயற்சியை கைவிட்டு விடுவார்கள். அதனால் இவர்கள் தினமும் அளவாக 5-6 முறை உணவை உட்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி மிகவும் அவசியம்.

அதோடு இவர்கள் திராட்சை ஜூஸ், மற்றும் க்ரீன் டீ போன்றவற்றை சாப்பிட்டால் உடல் எடை கட்டுப்பட்டுடன் இருக்கும்.

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்கள் டயட்டை பின்பற்ற பல நாட்கள் ஆகும். ஆனால், இவர்கள் டயட்டை பின்பற்ற ஆரம்பித்து விட்டால், கட்டாயம் உடல் எடையில் மாற்றத்தைக் காண்பார்கள்.

எனவே இவர்கள் பழங்கள், தயிர், இட்லி, ஆப்பிள், மசாலா பொருட்கள் போன்றவற்றை உணவில் சேர்த்து வந்தால், உடல் எடையில் நல்ல பலன் கிடைக்கும்.

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்கள் பகல் வேளையில் சாப்பிடாமல், இரவில் நன்கு சாப்பிடுவார்கள். ஆனால் இவர்கள் டீ, காபியைத் தவிர்த்து, ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்களை சாப்பிட்டு வருவது நல்லது. முக்கியமாக காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

மேலும் இவர்கள் மது மற்றும் கொழுப்புள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில், கடுமையான வயிறு தொடர்பான பிரச்சனையை சந்திக்கக் கூடும்.

கடகம்

கடகம் ராசிக்காரர்கள் வாய்க்கு ருசியாக நன்கு சமைத்து சாப்பிட விரும்புவார்கள். அதனால் இவர்கள் டயட்டை பின்பற்றுவது என்பது கடினம்.

இந்த ராசிக்காரர்கள் ஃபாஸ்ட் புட், பிரட் ஆகிய உணவுகள் தவிர்த்து, ஆப்பிள், ஆரஞ்சு போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும்.

சிம்மம்

சிம்மம் ராசிக்காரர்கள் ஃபாஸ்ட் புட் மற்றும் பானங்களின் மீது அதிக விருப்பம் கொண்டவர்கள். இந்த ராசிக்காரர்கள் தங்கள் உடல் எடையைப் பற்றி கவலைக் கொள்ள மாட்டார்கள்.

ஆனால் இவர்கள் தினமும் அளவான உடற்பயிற்சியில் ஈடுபட்டாலே போதும். மேலும் இவர்கள் நட்ஸ் மற்றும் தண்ணீரை அதிகம் உட்கொள்வது நல்லது.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் எதையும் வேகமாக அடைய நினைப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் கொழுப்புமிக்க இறைச்சிகளை விரும்ப மாட்டார்கள்.

ஆனால் இவர்கள் தினமும் நடைப்பயிற்சி மற்றும் அளவான உடற்பயிற்சியில் ஈடுபட்டால் அளவான உடல் எடையை பெறலாம்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் டயட் உணவுகளை பின்பற்ற விரும்புவார்கள். அதனால் இவர்கள் எப்போதும் பிட்டாகவே இருப்பார்கள். ஆனால் தினமும் உடற்பயிற்சியை செய்வதுடன், கொழுப்பு மிக்க உணவுகளை தவிர்த்தாலே உடல் எடையை சீராக வைத்துக் கொள்ளலாம்.

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்கள் தங்கள் வேலையில் ஆர்வமாக இருப்பார்கள். அதனால் இவர்கள் சில நேரங்கள் உணவைக் கூட தவிர்ப்பார்கள். இது தான் இந்த ராசிக்காரர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு.

இந்த ராசிக்காரர்கள் டயட்டில் இருந்தால், காலை உணவை தவிர்க்காமல் சாப்பிட வேண்டும். மற்ற வேளைகளில் சாப்பிடும் போது கீரைகள், ப்ராக்கோலி, முட்டைக்கோஸ் போன்றவற்றை அதிகமாகவும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் டயட்டில் இருக்க விரும்ப மாட்டார்கள். அதனால் தங்கள் உயரத்தை விட சற்று அதிகமான உடல் எடையைக் கொண்டிருப்பார்கள்.

இவர்கள் டயட்டில் இருந்தால், காய்கறிகள், சாலட், பூண்டு மற்றும் விட்டமின் C நிறைந்த உணவுகள் போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும்.

அதோடு இந்த ராசிக்காரர்கள் உடற்பயிற்சியை அதிகம் செய்வதோடு, இரவில் நீண்ட நேரம் விழித்திருக்காமல் இருந்தால் உடல் எடையை பிட்டாக இருக்கும்.

மகரம்

மகரம் ராசிக்காரர்கள் டயட்டின் போது தாம் சாப்பிடும் உணவை தாங்களே தான் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் பாஸ்தா, சாஸ் போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.

இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கியமான எடையுடன் இருக்க காய்கறி சூப், சூரை மீன் மற்றும் நற்பதமான காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

கும்பம்

கும்பம் ராசிக்காரர்களுக்கு டயட் ஒரு பெரிய பிரச்சனை இல்லை. ஆனால் இவர்கள் குறிப்பிட்ட சில விதிமுறைகளைப் பின்பற்றுவார்கள்.

இவர்களுக்கு எந்த உணவுடன் எதை சேர்த்து சாப்பிட வேண்டும் என்று சரியாக தெரியாது. அதை தவிர்த்தாலே உடல் எடை சரியாக இருக்கும்.

மீனம்

மீனம் ராசிக்காரர்கள் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால், உடல் பருமனால் அவஸ்தைப்படுவார்கள்.

அதனால் இந்த ராசிக்காரர்கள் மூலிகைகள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை கொண்டு உடலை சுத்தம் செய்யும் சிகிச்சைகளை அடிக்கடி பின்பற்ற வேண்டும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்