இந்த மாதிரி ரேகை உள்ளவர்களுக்கு பணம் கொட்டுமாம்

Report Print Printha in ஜோதிடம்

திரிசூலம் போன்ற மூன்று கூர்மையான கோடுகள் இணைந்துள்ள ரேகையை ஆங்கிலத்தில் Trident என்று கூறுவார்கள்.

இது போன்ற குறியுடைய ரேகை ஒருவரது கையில் இருந்தால் அவர்கள் மிகவும் ராசியானவர்களாக கூறப்படுகிறது.

திருசூல ரேகையின் பலன்கள்?

திருசூல ரேகை இருப்பவரது வாழ்வில் செல்வம் கொட்டும் எனவும், இதன் மூலம் அடையும் ஆன்மீக பலனால் ஆரோக்கியமான வாழ்க்கையை பெறுவார்கள். தன்னை சுற்றி இருப்பவர்களை மகிழ்ச்சியாக பார்த்துக் கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

அதுவும் இந்த திரிசூலம் போன்ற ரேகை ஒருவரது கையில் எங்கெங்கே இருந்தால், என்னனென்ன பலன்கள் என்பது குறித்தும் தெரிந்துக் கொள்ள முடியும்.

சுக்கிர மேடு

இந்த திரிசூல ரேகை சுக்கிர மேட்டில் காணப்பட்டால், அவர் காதல் வாழ்வில் மிகவும் லக்கியான நபராக கருதப்படுகிறார். அதே நேரத்தில் அவர் மற்ற நபர்களை எளிதாக புரிந்து வைத்துக் கொள்வார்.

இத்தகையவர்கள் தன்னை சுற்றி நல்ல விடயங்களை பாராட்ட தயங்காத நபராகவும் இருப்பார்கள்.

செவ்வாய்

செவ்வாய் ரேகையானது, கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரலுக்கு நடுவில் அமைந்திருந்தால் அவர்களது வாழ்க்கை மிகவும் வெற்றிகரமானதாக அமையும். அவர்கள் செய்யும் தொழில், வேலையில் சிறந்து காணப்படுவார்கள்.

அதுவே அதற்கு நேர் எதிர் பக்கம் சுண்டு விரலுக்கு கீழ் அமைந்திருந்தால், அவர்கள் செல்வ செழிப்புடன் வாழ்ந்தாலும், அவ்வப்போது வாழ்வில் தொல்லைகள் வரும் நிலைகள் ஏற்படும்.

புத்தி

புத்தி ரேகையில் இந்த திரிசூல ரேகை அமைந்திருந்தால், அவர்கள் செய்துக் கொண்டிருக்கும் வேலை, தொழில் சிறப்பாக அமையும்.

இவர்களின் பேச்சு திறனே இவர்களது வெற்றிக்கு உறுதுணையாக அமையும்.

சந்திர மேடு

சந்திர மேட்டில் திரிசூல ரேகை அமைந்திருந்தால், அவர்கள் கற்பனை மற்றும் செயல்திறனில் மேம்பட்டு காணப்படுவார்கள்.

மேலும், இவர்கள் இயற்கையாகவே மிக ரொமாண்டிக்கான நபராகவும் திகழ்வார்கள்.

இதய ரேகை

இதய ரேகையில் திரிசூல அமைப்பு இருந்தால், அவர்கள் உணர்வு, மனம் மற்றும் உடல் ரீதியாக மிகவும் வலிமையான நபராக இருப்பார்கள். இத்தகைவர்களுக்கு செல்வம் வந்து சென்று கொண்டே இருக்கும்.

விதி

விதி ரேகையில் திரிசூல அமைப்பு இருந்தால், அவர்களின் வாழ்க்கை வெற்றிகரமாகவும், பணத்திற்கு பஞ்சம் இல்லாமலும் அமையும். இவர்கள் நிலம் சார்ந்த தொழிலில் சிறந்து விளங்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

புதன்

புதன் ரேகையில் திரிசூல அமைப்பு அமைந்திருந்தால், அவர்கள் தங்கள் நிலையில் இருந்து மேம்பட வாய்ப்புகள் உண்டு.

இவர்கள் தங்கள் பேச்சு திறன் மூலமே பார்வையாளர்களை எளிதாக ஈர்த்து விடுவார்கள்.

குரு

குரு பகுதியில் திரிசூல ரேகை அமைப்பு இருந்தால், அவர்கள் வெற்றி பெறுவது மட்டுமின்றி, இவர்களது லட்சியங்களும் நிறைவேறும். அதனால் தலைமை பொறுப்பு இவர்களை தேடி வரும்.

சனி

சனி பகுதியில் திருசூல ரேகை அமைப்பு இருந்தால், அவர்கள் அதிக புத்திசாலியாக இருப்பார்கள். செல்வத்தையும் தாண்டி, சிறப்பான முறையில் வெற்றிகளை குவிக்கும் நபர்களாகவும் இருப்பார்கள்.

இவர்கள் தங்களின் பொறுமை மற்றும் கடின உழைப்பினால் வாழ்க்கையில் அனைத்து விடயத்தையும் சாத்தியம் ஆக்குவார்கள்.

சூரியன்

சூரிய ரேகையில் திரிசூலம் அமைப்பு பெற்றிருந்தால், அவர்கள் வெற்றி, செல்வம் என்பதை தாண்டி அதிக புகழ் பெற்று திகழ்வார்கள்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்