நீங்கள் பிறந்த கிழமை? உங்களுக்கான அதிர்ஷ்டம் இதோ

Report Print Printha in ஜோதிடம்

ஜோதிடத்தில் ஒருவர் பிறந்த கிழமையை வைத்து அவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும் என்பதை கூறி விடலாம்.

ஞாயிற்று கிழமை

ஞாயிற்று கிழமையில் பிறந்தவர்கள், எதிர்கால வரலாற்றில் இடம்பெற வேண்டும் என்று நினைப்பவர்கள். ஆனால் ஒரு சிலர் அவசரக் காரர்களாகவும், காரியங்களை அரைகுறையாகச் செய்பவர்களாகவும் விளங்குவர்.

இவர்கள் உல்லாசப் பயணத்தில் அதிக பிரியம் மற்றும் பத்திரிகை, திரைப்படம், அரசியல் போன்றவற்றில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள்.

இந்தக் கிழமையில் பிறந்தவர்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் விரதமிருந்து, சூரியனை வழிபட்டால் நல்ல அதிர்ஷ்டமான வாழ்க்கை அமையும்.

திங்கள் கிழமை

திங்கள் கிழமையில் பிறந்தவர்கள், அறிவுப் பூர்வமாக சிந்தித்து செயல்படுபவார்கள். பிறர் செய்ய முடியாத காரியங்களை, எளிதில் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டிருப்பார்கள்.

எந்தவொரு விடயத்திலும் நன்கு யோசித்த பின்பே அதில் ஈடுபடுவார்கள். நீதி, நேர்மை மிக்கவர்கள். கலைத்துறையில் அதிக ஈடுபாடு இருக்கும்.

இந்த கிழமையில் பிறந்தவர்கள் திங்கள் தோறும் அம்பிகையை வழிபட்டு பவுர்ணமி விரதம் இருந்தால் அதிர்ஷ்ட பலன்களைப் பெறலாம்.

செவ்வாய் கிழமை

செவ்வாய் கிழமையில் பிறந்தவர்கள் வீரமும், விவேகமும் மிக்கவர்களாக இருப்பார்கள். எந்த வேலையையும் முழுமையாக செய்வார்கள்.

ஆனால் இவர்கள் சேமிக்கும் இயல்பு இல்லாதவர்கள். அதிக கோபம் காரணமாக அல்லல் படுவார்கள். இந்த கிழமையில் பிறந்தவர்கள் சஷ்டி விரதம் இருந்து சண்முகனை வழிபட்டால் சகல பாக்கியங்களை பெறலாம்.

புதன் கிழமை

புதன் கிழமையில் பிறந்தவர்கள் புத்திசாதுரியத்துடன் விளங்குவார்கள். ஆனால் இவர்கள் அடிக்கடி திட்டங்களை மாற்றிக் கொண்டிருக்கும் பழக்கம் கொண்டவர்கள்.

புதுமையை விரும்பினாலும், பழமையை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். இப்படித்தான் வாழவேண்டும் என்ற வாழ்பவர்கள்.

இந்த கிழமையில் பிறந்தவர்கள் ஏகாதசி விரதம் இருந்து விஷ்ணுவையும், லட்சுமியையும் வழிபடுவது மிகவும் நல்லது.

வியாழன் கிழமை

வியாழன் கிழமையில் பிறந்தவர்கள் எதையும் ஒரு முறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வார்கள். ஆனால் இவர்கள் கோபமாக இருக்கும் போது சமாதானப்படுத்துவது மிக சிரமம்.

கூர்மையான அறிவும், எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் ஆற்றலும் பெற்றவர்கள்.

இந்த கிழமையில் பிறந்தவர்கள் வியாழன் தோறும் விரதம் இருந்து குரு தட்சிணா மூர்த்தியை வழிபட்டால் வாழ்க்கை சிறப்பாகும்.

வெள்ளிக் கிழமை

வெள்ளிக் கிழமையில் பிறந்தவர்கள் குறைவில்லாத செல்வங்களைப் பெற்று வாழ்பவர்கள். இவர்களுக்கு கலை, இலக்கியம், சினிமா, நடனம் ஆகியவற்றில் ஆர்வம் இருக்கும்.

ஆனால் இவர்கள் மற்றவர்களைக் கேலி பேசுவதில் அலாதி பிரியம் உடையவராக இருப்பார்கள்.

இந்த கிழமையில் பிறந்தவர்கள் வெள்ளிக் கிழமை தோறும் லட்சுமியை வழிபடுவதன் மூலம் இவர்களின் வாழ்க்கையில் செல்வ நிலை உயரும்.

சனிக் கிழமை

சனிக் கிழமையில் பிறந்தவர்கள், எதற்காகவும் கலங்க மாட்டார்கள். பிறருக்கு கட்டளையிடும் சக்தியைப் பெற்றிருப்பார்கள். மனதை அடக்கியாளும் தன்மை கொண்ட இவர்களுக்கு நீடித்த நட்பும், பகையும் இருக்காது.

இந்த கிழமையில் பிறந்தவர்கள் சனிக் கிழமை தோறும் விரதம் இருந்து விநாயகப் பெருமான், சனி பகவான் மற்றும் அனுமனை வழிபட்டு வந்தால், செல்வ செழிப்புடன் வாழலாம்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers